என் மலர்

  செய்திகள்

  பிரிமீயர் லீக் கால்பந்து: ஸ்டோக் சிட்டியை 3-0 என வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட்
  X

  பிரிமீயர் லீக் கால்பந்து: ஸ்டோக் சிட்டியை 3-0 என வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் 3-0 என ஸ்டோக் சிட்டி அணியை வீழ்த்தியது. #MUFU #PremierLeague
  இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டி ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட் - ஸ்டோக் சிட்டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

  ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் பால் போக்பா கொடுத்த பந்தை வாலன்சியா கோலாக மாற்றினார். 38-வது நிமிடத்தில் மீண்டும் பால் போக்பா கொடுத்த அருமையான பாஸை கோலாக மாற்றினார் மார்சியல். இதனால் முதல் பாதி நேரத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 2-0 என முன்னிலைப் பெற்றது.  2-வது பாதி நேரத்திலும் மான்செஸ்டர் அணியின் கையே ஓங்கியது. ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில் மார்சியல் கொடுத்த பந்தை லூக்காகு கோலாகா மாற்றினார். இதனால் மான்செஸ்டர் 3-0 என வெற்றி பெற்றது.  பிரிமீயர் லீக் புள்ளிகள் பட்டியலில் மான்செஸ்டர் 23 போட்டிகளில் முடிவில் 62 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மான்செஸ்டர் 23 போட்டிகளில் விளையாடி 50 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். லிவர்பூல் 3-வது இடத்தில் உள்ளது.  #MUFU #PremierLeague
  Next Story
  ×