என் மலர்

  செய்திகள்

  தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: ஜித்து ராய் தங்கம் வென்றார்
  X

  தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: ஜித்து ராய் தங்கம் வென்றார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியின் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஜித்து ராய் தங்கப்பதக்கம் வென்றார்.

  திருவனந்தபுரம்:

  தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 4800 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

  இதன் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஜித்து ராய் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். அவர் இறுதிப்போட்டியில் 233 புள்ளிகள் எடுத்து தேசிய அளவில் சாதனை படைத்தார். இப்போட்டியின் வெள்ளிப்பதக்கததை ஓம்கார் சிங்கும், ஜெய் சிங் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.  ஆண்கள் குழு துப்பாக்கிச்சுடுதல் போட்டியிலும் ஜித்து ராயின் அணி தங்கப்பதக்கம் வென்றது. அவரது அணியில் ஜெய் சிங்கும், ஓம் பிரகாஷ் மிதர்வாலும் இடம்பெற்றிருந்தனர். ஜித்து ராயின் அணி 1658 புள்ளிகள் எடுத்தது. அவர்களை தொடர்ந்து விமானப்படை அணி 1626 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், பஞ்சாப் அணி 1624 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றது.

  ஜூனியர் 50 மீட்டர் பிச்டல் பிரிவில் பஞ்சாப்பின் அர்ஜுன் சிங் சீமா 226.5 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார். இந்த போட்டியில் பஞ்சாப்பின் சுரிந்தர் சிங் வெள்ளிப்பதக்கமும், அரியானாவின் அன்மொல் ஜெயின் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

  இதே பிரிவின் ஆண்கள் குழு பிரிவு போட்டியில் அர்ஜுன் சிங் சீமா, சுரிந்தர் சிங், மன்கரண் பிரீத் சிங் ஆகியோர் அடங்கிய பஞ்சாப் அணி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றது. அரியானா வெள்ளிப்பதக்கத்தையும், டெல்லி வெண்கலப்பதக்கத்தையும் தட்டிச்சென்றனர். 
  Next Story
  ×