என் மலர்

  செய்திகள்

  ஐ.எஸ்.எல். கால்பந்து: 5-வது வெற்றியை பதிவுசெய்தது சென்னையின் எப்.சி.
  X

  ஐ.எஸ்.எல். கால்பந்து: 5-வது வெற்றியை பதிவுசெய்தது சென்னையின் எப்.சி.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் ஜேம்ஷெத்பூர் அணியை 1-0 என வீழ்த்தி சென்னையின் எப்.சி. அணி ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது.

  புதுடெல்லி:

  10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜேம்ஷெத்பூரில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய 33-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி - ஜேம்ஷெத்பூர் எப்.சி. அணியை எதிர்கொண்டது.

  விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 41-வது நிமிடம் சென்னை அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திகொண்ட ஜேஜே கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தின் முடிவில் சென்னை 1-0 என முன்னிலை பெற்றது.  தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். இருப்பினும் மேற்கொண்டு கோல் அடிக்காததால் 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை அணி புள்ளிபட்டியலில், 16 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்து கொண்டது.
   


  அடுத்ததாக நாளை நடைபெறும் லீக் போட்டியில் மும்பை சிட்டி எப்.சி - டெல்லி டைனமோஸ் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
  Next Story
  ×