என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்தின் கடைசி 6 பேட்ஸ்மேன்களை வீழ்த்துவது மிக எளிது: ஹசில்வுட் கிண்டல்
    X

    இங்கிலாந்தின் கடைசி 6 பேட்ஸ்மேன்களை வீழ்த்துவது மிக எளிது: ஹசில்வுட் கிண்டல்

    இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். அவர்களை வீழ்த்துவது மிகவும் எளிதான விஷயம் என ஹசில்வுட் கூறியுள்ளார்.
    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆஷஸ் தொடரில் முன்னணி பேட்ஸ்மேன்களை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அட்டமிழந்து ஏமாற்றம் அளித்து வருகின்றனர்.

    ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட் பவுன்சர் யுக்தியை பயன்படுத்தி இங்கிலாந்து கடைநிலை வீரர்களை மிரட்டி வருகிளார்கள். தொடக்க வீரர்கள் குக், ஸ்டோன்மேன் அடுத்து களம் இறங்கும் வின்ஸ், ஜோ ரூட், தாவித் மலன் ஆகியோரை வீழ்த்தி விட்டால் மற்றவர்களை அவுட்டாக்குவதில் எந்த சிரமமும் இல்லை என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட் கூறியுள்ளார்.



    இதுகுறித்து ஹசில்வுட் கூறுகையில் ‘‘இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் நான்கு அல்லது ஐந்து பேரை வீழ்த்திவிட்டால் கடைநிலை வீரர்களை எளிதில் வீழ்த்திவிடலாம் என்பது எங்களுக்குத் தெரியும். இங்கிலாந்தின் கடைசி 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஆடுகளம் குறித்து அதிக அளவில் கவலைப்பட தேவையில்லை.

    அவர்களுக்கும் எங்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. எங்களுடைய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மற்றும் கடைநிலை வீரர்கள் இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம்’’ என்றார்.
    Next Story
    ×