என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து அணியில் டாம் குர்ரான்: 90 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் அறிமுகம்
    X

    இங்கிலாந்து அணியில் டாம் குர்ரான்: 90 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் அறிமுகம்

    இங்கிலாந்து அணியின் 22 வயதான வேகப்பந்து வீச்சாளர் டாம் குர்ரான் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ‘பாக்சிங் டே’ டெஸ்டில் 90 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் அறிமுகமாகிறார்.
    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள முதல் மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி 3-0 என முன்னிலையில் இருக்கிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் தொடங்கும் இந்த போட்டிக்கு ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்று பெயர். 26-ந்தேதி மெல்போர்ன் மைதானத்தில் 90 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்திருப்பார்கள். இவ்வளவு அதிகப்படியான ரசிகர்களுக்கு மத்தியில் எந்தவொரு கிரிக்கெட் வீரரும் விளையாட ஆசைப்படுவார்கள்.



    நாளை தொடங்கும் போட்டிக்காக இரு அணிகள் வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் ஓவர்டனுக்கு விலாப்பகுதியில் எழும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவருக்குப் பதிலாக டாம் குர்ரான களம் இறங்குவார் என்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

    22 வயதே ஆன டாம் குர்ரான் முன்னாள் ஜிம்பாப்வே வீர்ர கெவினின் மகனாவார். 90 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் சர்வதேச டெஸ்டில் அறிமுகமாகும் வாய்ப்பு டாம் குர்ரானுக்கு கிடைத்துள்ளது.
    Next Story
    ×