என் மலர்
செய்திகள்

டோனியின் ஓய்வு மிகப்பெரிய நான்கு பேரின் ஓய்வு போன்றது: கில்கிறிஸ்ட் சொல்கிறார்
டோனி ஓய்வு பெற்ற பிறகு, அந்த இடம் இந்திய அணிக்கு பெரிய வெற்றிடமாகும். அதை நிரப்ப நீண்ட காலமாகும் என்ற விக்கெட் கீப்பர் மற்றும் பேடஸ்மேன் ஜாம்பவான் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி விக்கெட் கீப்பராகவும், அதிரடி பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தவர் கில்கிறிஸ்ட். இந்திய அணியில் இருந்து டோனி ஓய்வு பெறும்போது அந்த இடம் மிகப்பெரிய வெற்றிடமாக திகழும். அந்த இடத்தை நிரப்ப நீண்ட காலம் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கில்கிறிஸ்ட் கூறுகையில் ‘‘டோனி 3-வது இடத்தில் இருந்து 7-வது இடத்திற்குள் எதிலும் களம் இறங்கி விளையாட முடியும். இன்னும் அவர் பாதிப்பை ஏற்படுத்துவார். தற்போதை இந்திய அணி சிறப்பாக உள்ளது. ஆடுகளத்திற்கு உள்ளேயும், வெளியேயும் டோனியின் அனுபவத்தை பெற்று, பலன் அடைகிறது.

டோனி ஏற்கனவே அணியில் இருந்து வெளியேறுவதை தொடங்கிவிட்டார். தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால், அவர் அணியில் இருந்து வெளியேறுவது, அந்த இடத்தில் பெரிய இடைவெளி ஏற்படும்.
அது இந்தியா ஜாம்பவான்கள் சச்சின் தெண்டுல்கர், டிராவிட், லஷ்மண் மற்றும் கங்குலி ஆகியோர் வெளியேறியபோது ஏற்பட்டது மாதிரி. ஆஸ்திரேலியாவில் ஜாம்பவான்கள் வெளியேறிய போது ஏற்பட்ட வெற்றிடம் போன்றது’’ என்றார்.

Next Story