என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
எங்களுக்கு எதிராக இந்தியா 350 ரன்கள் குவிக்கும்: ஆஸி. வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் சொல்கிறார்
By
மாலை மலர்12 Sep 2017 4:12 PM GMT (Updated: 12 Sep 2017 4:12 PM GMT)

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா எங்களுக்கு எதிராக 350 ரன்கள் குவிக்கும் என ஆஸ்திரேலிய வேகப்பந்து ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் தொடங்குகிறது. டெஸ்ட் போட்டியை போல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம், போட்டி நடத்தும் நாட்டிற்கு சாதகமாக இருக்காது என்பதால் இரு அணிகளும் கடுமையாக போராடும். இதனால் ஆடுகளத்தில் மோதல், வாக்குவாதம், ஸ்லெட்ஜிங் அதிக அளவில் இருக்கும். இறுதியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதே முக்கியம்.
இந்த போட்டிக்கு முன்னோட்டமாக ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்டத்தில் இன்று மோதியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 347 ரன்கள் குவித்தது. அந்த அணியின் வேகப்பந்து ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 60 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 76 ரன்கள் குவித்தார்.

இந்த போட்டிக்குப்பின் இத்தொடர் குறித்து ஸ்டாய்னிஸ் கூறுகையில் இந்தியா எங்களுக்கு எதிராக 350 ரன்கள் குவிக்கும் என்றார்.
மேலும் இதுகுறித்து ஸ்டாய்னிஸ் கூறுகையில் ‘‘இந்த தொடரில் நாங்கள் அதிக ரன்கள் குவிப்போம் என்று நினைக்கிறேன். இந்திய அணியின் பேட்டிங் மிகவும் அபாரமாக உள்ளது. இந்தியா அதிக ரன்கள் அடிக்கும். 350 ரன்கள் உறுதியாக எடுக்கும்.
இந்திய அணியில் அனைவரும் மிகவும் அபாயகரமானவர்கள். ஒவ்வொருவரும் சிறந்த வீரர்கள். தலைசிறந்த வீரர்கள்’’ என்றார்.

Next Story
×