என் மலர்

  செய்திகள்

  உலக காவல்துறை விளையாட்டு போட்டிகள்: 4 பதக்கங்கள் வென்று இந்திய பெண் டி.எஸ்.பி அசத்தல்
  X

  உலக காவல்துறை விளையாட்டு போட்டிகள்: 4 பதக்கங்கள் வென்று இந்திய பெண் டி.எஸ்.பி அசத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக காவல் மற்றும் தீயணைப்பு துறை விளையாட்டு போட்டியில் இந்திய வீராங்கனையும் பஞ்சாப் காவல்துறை டி.எஸ்.பி.யுமான அவ்னீத் கவுர் சித்து துப்பாக்கிச் சுடுதலில் 4 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

  லாஸ் ஏஞ்சல்ஸ்:

  உலக காவல் மற்றும் தீயணைப்பு துறை விளையாட்டு போட்டியில் இந்திய வீராங்கனையும் பஞ்சாப் காவல்துறை டி.எஸ்.பி.யுமான அவ்னீத் கவுர் சித்து துப்பாக்கிச் சுடுதலில் 4 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். 

  உலக காவல் மற்றும் தீயணைப்பு துறை விளையாட்டு போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மகளிர் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் அவ்னீத் கவுர் சிங் தங்கப்பதக்கம் வென்றார். இதுதவிர வேறு பிரிவுகளில் ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களையும் கைப்பற்றினார். இதன்மூலம் இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் நான்கு பதக்கங்கள் வென்று அசத்தினார்.

  கடந்த 2006-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த காமன்வெல்த் போட்டியில் அவ்னீத் கவுர் ஒரு தங்கம், ஒரு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

  அவ்னீத் கவுர் சிங் பஞ்சாபில் காவல் துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். அவரது கணவர் ராஜ்பால் சிங், முன்னாள் இந்திய ஹாக்கி அணி வீரரும் அர்ஜுனா விருது வென்றாவராவார். அவரும் பஞ்சாப் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×