என் மலர்

  செய்திகள்

  இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை அணி அறிவிப்பு- ஹெராத் கேப்டன்
  X

  இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை அணி அறிவிப்பு- ஹெராத் கேப்டன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டிற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வருகிற 26-ந்தேதி காலே மைதானத்தில் தொடங்குகிறது. காலே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டிக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  இலங்கை அணியின் கேப்டன் சண்டிமல் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் அணியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஹெராத் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

  1. ரங்கனா ஹெராத் (கேப்டன்), 2. உபுல் தரங்கா, 3. திமுத் கருணாரத்னே, 4. குசால் மெண்டிஸ், 5. மேத்யூஸ், 6. அசேலா குணரத்னே, 7. நிரோஷன் டிக்வெல்லா, 8. தனஞ்செயா டி சில்வா, 9. தனுஷ்கா குணதிலகா, 10. தில்ருவான் பெரேரா, 11. சுரங்கா லக்மல், 12. லஹிரு குமாரா, 13. விஷ்வா பெர்னாண்டோ, 14. மலிந்தா புஷ்பகுமாரா, 15. நுவன் பிரதீப்.
  Next Story
  ×