search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனி பங்கேற்கும் சிக்சர் விளாசும் போட்டி
    X

    டோனி பங்கேற்கும் சிக்சர் விளாசும் போட்டி

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குவதையொட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு பதிலாக இந்த முறை வித்தியாசமாக நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் சிக்சர் அடிக்கும் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது.
    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குவதையொட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு பதிலாக இந்த முறை வித்தியாசமாக நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் சிக்சர் அடிக்கும் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது. அதாவது பவுலர்களுக்கு பதிலாக பந்துவீசும் எந்திரம் மூலம் பந்துகள் வீசப்படும். ஒவ்வொருவருக்கும் 6 பந்துகள் வீசப்படும். அதில் யார் அதிக சிக்சர் அடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளராக தீர்மானிக்கப்படுவார். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சம எண்ணிக்கையில் சிக்சர் அடித்திருந்தால் யார் அதிக தூரத்துக்கு சிக்சர் அடித்திருக்கிறார்கள் என்பது கணக்கிடப்படும்.

    ரசிகர்களை குதூகலப்படுத்துவதற்காக இந்திய வீரர்கள் முன்னாள் கேப்டன் டோனி, மொகித் ஷர்மா, பத்ரிநாத், பவான் நெகி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், தமிழ்நாடு பேட்ஸ்மேன் அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் எந்திரத்துக்கு எதிராக மல்லுகட்டி சிக்சர் அடிக்க களம் காண உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சியில் எல்.பாலாஜி, எம்.விஜய், தமிழக ஆல்-ரவுண்டர் கணபதி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். சிக்சர் போட்டி மாலை 6 மணிக்கு தொடங்கி 7 மணிக்குள் நிறைவடையும். அதைத் தொடர்ந்து முதலாவது ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்கும். 
    Next Story
    ×