என் மலர்tooltip icon

    செய்திகள்

    லார்ட்ஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 361 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்
    X

    லார்ட்ஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 361 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்

    லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 361 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
    இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி ஜோ ரூட் (190), பென் ஸ்டோக்ஸ் (56), மொயீன் அலி (87),  பிராட் (57 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 458 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.


    37 பந்தில் 51 ரன்கள் குவித்த டி காக்

    பின்னர் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் டீன் எல்கரின் அரைசதத்தால் (54), தென்ஆப்பிரிக்க அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்திருந்தது. பவுமா 48 ரன்களுடனும், ரபாடா 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


    52 ரன்கள் சேர்த்த பிளாண்டர்

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய பவுமா அரைசதம் அடித்து, 59 ரன்களில் வெளியேறினார். ரபாடா 27 ரன்கள் சேர்த்தார். 8-வது வீரராக களம் இறங்கிய டி காக் 37 பந்தில் 51 ரன்னும், பிளாண்டர் 52 ரன்னும் சேர்க்க தென்ஆப்பிரிக்கா அணி 361 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் மொயீன் அலி அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    முதல் இன்னிங்சில் 97 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து, 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்துள்ளது.
    Next Story
    ×