என் மலர்

  செய்திகள்

  தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு
  X

  தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் பேலன்ஸ், டோபி ரோலண்ட்-ஜோன்ஸ் இடம்பிடித்துள்ளனர்.
  இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

  முதல் டெஸ்ட் வருகிற 6-ந்தேதி (வியாழக்கிழமை) லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. அலஸ்டைர் குக் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளதால், ஜோ ரூட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதன்முறையாக ஜோ ரூட் கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறார்.

  தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி:-

  1. ஜோ ரூட் (கேப்டன்), 2. மொயீன் அலி, 3. ஜிம்மி ஆண்டர்சன், 4. பேர்ஸ்டோவ், 5. கேரி பேலன்ஸ், 6. ஸ்டூவர்ட் பிராட், 7. அலஸ்டைர் குக், 8. லியம் டவ்சன், 9. ஜென்னிங்ஸ், 10. டோபி ரோலண்ட்-ஜோன்ஸ், 11. பென் ஸ்டோக்ஸ், 12. மார்க் வுட்.

  பேலன்ஸ் கடந்த ஆண்டு வங்காள தேசத்திற்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். அப்போது நான்கு இன்னிங்சில் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

  சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி சாம்பியன்ஷிப் சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 815 ரன்கள் குவித்தார். சராசரி 101.88 ஆகும். இதே சீசனில் குமார் சங்ககரா 1086 ரன்கள் குவித்து முதல் இடம் பிடித்தார். பேலன்ஸ் 2-வது இடத்தைப் பிடித்தார். இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மீண்டும் பேலன்ஸ்க்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.  குக், பேலன்ஸ் ஆகியோருடன் ஜென்னிங்ஸ் என்ற இளம் வீரரும் தொடக்க வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய தொடரில் இவர் சதம் அடித்தவர்.

  காயத்தால் நீண்ட் நாட்களாக விளையாடமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சனுக்கு இடம்கிடைத்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது காயம் அடைந்த ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் அணியில் இடம்பெறவில்லை.
  Next Story
  ×