என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், டாம் மூடி விண்ணப்பம்
    X

    இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், டாம் மூடி விண்ணப்பம்

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் அதிரடி வீரர் சேவாக், ஆஸ்திரேலியாவின் டாம் மூடி விண்ணப்பித்துள்ளனர்.
    இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் அனில் கும்ப்ளே. இவரது ஓராண்டு பயிற்சி காலம் தற்போது நடைபெற்று வரும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் முடிவடைகிறது.

    இதனால் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அழைப்பு விடுத்தது. இதில் இருந்து கும்ப்ளேவிற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. அவர் நேரடியாக விண்ணப்பித்ததாக கருதப்படுவார்.

    இந்த விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி ஜூன்-1 (இன்று) என பிசிசிஐ அறிவித்திருந்தது. இன்று கடைசி நாள் விண்ணப்பம் பெறப்பட்டதும் யாரெல்லாம் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

    இதில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரராக சேவாக் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவர் மட்டும்தான் மிகவும் பிரபலமான நபர். இவருடன் ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, இங்கிலாந்தின் பைபஸ், இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டோட்டா கணேஷ், முன்னாள் இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புட் ஆகியோரும் விண்ணப்பித்துள்ளனர்.

    இதில் சேவாக் விண்ணப்பம் செய்துள்ளதுதான் அனைவரது புருவத்தையும் உயரச் செய்துள்ளது. இவர் இதற்கு முன் பயிற்சியாளர் பணியை செய்ததில்லை. தற்போது முடிந்த ஐ.பி.எல். தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகராக மட்டுமே இருந்துள்ளார். பிசிசிஐ-யின் முன்னணி அதிகாரி ஒருவர்தான் சேவாக் விண்ணப்பிக்க முக்கிய காரணமாக இருந்தார் என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×