என் மலர்

    செய்திகள்

    சாம்பியன்ஸ் டிராபி: தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக மேத்யூஸ் விளையாடுவது சந்தேகம்
    X

    சாம்பியன்ஸ் டிராபி: தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக மேத்யூஸ் விளையாடுவது சந்தேகம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை கேப்டன் மேத்யூஸ் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்பட்டுள்ளது.
    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் தென்ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ளன. இரு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நாளைமறுநாள் (சனிக்கிழமை, 3-ந்தேதி) நடக்கிறது.

    இந்த போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் பங்கேற்க வாய்ப்பில்லை என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    மேலும், ‘‘மேத்யூஸ்க்கு நாளை 30-வது வயது பிறக்கிறது. அவரது காலில் வலி இருப்பதாக கூறினார். இதனால் சில நாட்கள் அவரது காயம் குணமடைவதற்கான சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. இதனால் அவர் முதல் போட்டியில் விளையாடாமல், வெளியில் இருக்க அதிக வாய்ப்புள்ளது’’ என்று கூறியுள்ளது.

    மேத்யூஸ் ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் விளையாடும்போது காயத்தால் வெளியேறினார். சுமார் ஐந்து மாதங்கள் கழித்து ஐ.பி.எல். தொடரில் களம் இறங்கினார். தற்போது மீண்டும் காயம் அவரை அச்சுறுத்தியுள்ளது.
    Next Story
    ×