என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஆன்டி முர்ரே, வாவ்ரிங்கா வெற்றி
Byமாலை மலர்31 May 2017 5:17 AM IST (Updated: 31 May 2017 5:17 AM IST)
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே, சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா வெற்றி பெற்றனர்.
பாரீஸ்:
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே, சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா வெற்றி பெற்றனர். இங்கிலாந்து வீராங்கனை ஜோஹன்னா அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
களிமண் தரை போட்டியான இதில் 3-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா 6-2, 7-6 (8-6), 6-3 என்ற நேர்செட்டில் 152-ம் நிலை வீரர் ஜோஸ் கோவாலிக்கை (சுலோவக்கியா) சாய்த்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் அல்ஜாஸ் பெதானே 6-4, 6-0, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் ரையான் ஹாரிசனை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். காயம் காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டியில் களம் கண்ட அர்ஜென்டினா வீரர் ஜூயன் மார்ட்டின் டெல்போர்டோ 6-2, 6-1, 6-4 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் குய்டோ பெல்லாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.
இன்னொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே 6-4, 4-6, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் உலக தர வரிசையில் 73-வது இடத்தில் உள்ள ரஷிய வீரர் ஆந்த்ரே குஸ்னெட்சோவை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற ஆட்டங்களில் நிஷிகோரி (ஜப்பான்) நிக் கிர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா), பெர்னாண்டோ வெர்டாஸ்கோ (ஸ்பெயின்), கையோன் சுங் (தென்கொரியா), டெனிஸ் இஸ்டோமின் (உஸ்பெகிஸ்தான்), மார்ட்டின் கிலிசன் (சுலோவக்கியா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), அலெக்சாண்டர் டோல்கோபோலோவ் (உக்ரைன்), ஜெரெமை ஷார்டி (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 7-ம் நிலை வீராங்கனை ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து) 6-1, 6-7(2-7), 4-6 என்ற செட் கணக்கில் 109-ம் நிலை வீராங்கனையான சீன தைபேயின் ஹிக் சு வெய்யிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.
மற்ற ஆட்டங்களில் எலினா விடோலினா (உக்ரைன்), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), அலிஸ் கார்னெட் (பிரான்ஸ்), மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா), டெய்லர் டவுன்சென்ட் (அமெரிக்கா), பிரேன்கோவா (பல்கேரியா), சிரோனா சிர்ஸ்டா (ருமேனியா), பார்பரோ ஸ்டிரிகோவா (செக் குடியரசு), ஸ்வாரஸ் நவரோவா (ஸ்பெயின்), பெட்ரா மார்டிச் (குரோஷியா) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி கண்டனர்.

Next Story
×