என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    1-ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்
    X

    1-ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்

    • பொதுவாக இந்த 1-ம் எண்ணின் ஆதிக்கம் தொழில், அரசியல், சமூகரீதியாக நல்ல பலன்களைக் கொடுக்கும்.
    • பெயரெண் 55: புதனின் ஆதிக்கம். சூட்சம அறிவு, ஞானம் திட்டமிடுதல், ராஜ தந்திரம் மிகைப்படுத்தலாக இருக்கும்.

    சூரியன். ஒன்று என்ற எண் சூரியனுடைய ஆதிக்கத்தைக் குறிக்கின்றது. யாருக்கும் வளைந்து கொடுக்காதவர்கள். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாதவர்கள். பழகுவதற்கும், பார்வைக்கும் கம்பீரமானவர்கள். தன்னம்பிக்கை அதிகமானவர்கள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் பிரச்சினைகளைக் கூடத்தாங்களே சமாளித்துக் கொள்ளும் திறமையுடையவர்கள்.

    அடுத்தவர்களுடன் விவாதித்தால் கவுரவம் போய்விடும் என்று நினைப்பவர்கள். ரகசியங்களை பாதுகாக்கும் வல்லமை உண்டு. ஏட்டுக் கல்வியை விட அனுபவ பாடம் அதிகம் கற்றவர்கள். இந்த எண் சுறுசுறுப்பையும், படிப்பில் ஆர்வத்தையும் கொடுக்கும். 1,10,19,28,37,46,55,64,73,82,91,100 ஆகிய எண்களில் பெயர் அமைந்தவர்களும் 1,10,19,28ம் தேதிகளில் பிறந்தவர்களும் சூரியனின் ஆதிக்கம் பெற்றவர்கள்.

    பெயரெண் 10: சூரியனின் தனித்தன்மை நிறைந்த எண் என்பதால் புகழ், தன்னம்பிக்கை, நேர்மை, நாணயம், ஒழுக்கம் ஆகிய பண்புகள் நிறைந்திருக்கும்.

    பெயரெண் 19: சூரியன், செவ்வாயின் ஆதிக்கம் கலந்து இருப்பதால் சுயமுடிவு, சுய கவுரவம் இவர்களின் தனித்துவமாக இருக்கும்.

    பெயரெண் 28: சந்திரன், சனியின் ஆதிக்கம் நிறைந்த எண் என்பதால் கடின முயற்சிக்குப்பிறகு வெற்றியுண்டு. அதிர்ஷ்டம் குறைவுபடும்.

    பெயரெண் 37: குரு மற்றும் கேதுவின் ஆதிக்கம் நிறைந்த எண் என்பதால் சுயநல மற்றவர்கள். மகா உன்னத பலன் உண்டு. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கடனாளியாவார்கள்.

    பெயரெண் 46: ராகு மற்றும் சுக்கிரன் ஆதிக்கம் கலந்த எண். சிறு வயதில் மனசபலம் மிகுதியாக இருக்கும். வாழ்வின் பிற்பகுதியில் பலன் தரும்.

    பெயரெண் 55: புதனின் ஆதிக்கம். சூட்சம அறிவு, ஞானம் திட்டமிடுதல், ராஜ தந்திரம் மிகைப்படுத்தலாக இருக்கும்.

    பெயரெண் 64: சுக்கிரன், ராகு ஆதிக்கம் ஒருங்கே சேர்ந்து இருக்கும். நண்பர்களையும் எதிரிகளையும் எளிதில் அடையாளம் காண முடியாது. சில எதிர்பிற்குப் பின் வெற்றி உண்டு.

    பெயரெண் 73: கேது, குரு ஆதிக்கம் சேர்ந்து இருப்பதால் தெய்வ பக்தி மிகுதியால் நினைத்ததை சாதிப்பவர்கள். 50 வயதிற்கு மேல் இருப்பதை எல்லாம் இழப்பார்கள்.

    பெயரெண் 82: சனி, சந்திரன் ஆதிக்கத்தை பிரதிபலிப்பதால் கடின உழைப்பால் சாதாரண மனிதனும் சக்ரவர்த்தியாகுவார்கள்.

    பெயரெண் 91: செவ்வாய், சூரியன் ஆதிக்கம் நிறைந்த எண் என்பதால் உலகப் புகழ், சரித்திரத்தில் இடம் பெறும் யோகம் உண்டாகும்.

    பெயரெண் 100: சூரியனின் ஆதிக்கத்தை மட்டும் கொண்டு இருந்தாலும் பூஜ்யம் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தாது. உப்பு, சப்பு இல்லாத மன நிறைவற்ற வாழ்க்கையே நீடிக்கும். பலர் 100 சதம் நல்ல பலன் தரும் என்ற மனக்கணக்கில் இந்த எண்ணில் பெயர் வைத்து கவிழ்கிறார்கள்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    பிறவி எண் என்பது ஒருவர் பிறந்த தேதியைக் குறிக்கும் எண் ஆகும். விதி எண் என்பது ஒருவரின் முழு பிறந்த தேதி மாதம், வருடம் அனைத்தையும் கூட்டி வரும் ஒற்றை இலக்க எண் ஆகும்.

    பிறவி எண்:1 விதி எண்.1

    சூரியனின் ஆதிக்கம் நிறைந்த ஒன்றாம் எண் ஆதிக்கத்தில் பிறவி எண்ணும் விதி எண்ணும் அமைவது சிறப்பு. சுய ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்றால் ஆன்ம பலம் ஆளுமைத் தன்மை, நிர்வாகத் திறன், சுய கவுரவம், கம்பீரத் தோற்றம் நிறைந்தவர். புகழ், முன்னேற்றம், அந்தஸ்து அனைத்தும் தேடி வரும். அரசியல் ஆதாயம் உண்டு. எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை தீமைகளை முன்பே அறியும் ஞானம் இருக்கும்.தந்தையின் ஆதரவு உண்டு. ஏதாவது ஒரு துறையில் நிச்சயம் முன்னேற்றம் உண்டு. சூரியன் பகை நீசம் அஸ்தமனம் பெற்று இருந்தால் புகழ், அந்தஸ்து கவுரவம் மட்டுப்படும். முன்னேற்றம் கிடைக்காது. தாய், தந்தையின் ஆதரவு குறையும். தலை, கண், இருதயம் சார்ந்த பாதிப்பு உண்டு.

    பிறவி எண் 1- விதி எண் 2

    சூரியனின் 1ம் எண் ஆதிக்கத்தில் பிறந்து சந்திரனின் 2ம் எண் ஆதிக்கத்தில் விதி எண் அமைந்தால் சுய ஜாதகத்தில் சூரியன், சந்திரன் பலம் பெற வேண்டும். இவர்கள் இருவரும் பலம் பெற்றால் தாய், தந்தையின் ஆதரவு மற்றும் ஆதாயம் உண்டு. சிந்தித்து செயல் ஆற்றுவதில் வல்லவர்கள். அரசியல், அரசு சார்ந்த தொழில் உத்தியோகங்கள் அமையும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை உண்டு. தாராள தன வரவு இருக்கும். திரண்ட சொத்து உண்டு. பேச்சுத் திறமையால் அனைவரையும் கவர்வதில் வல்லவர்கள். சூரியன், சந்திரன் பலம் குறைந்தால் தாய், தந்தையின் ஆதரவு கிடைக்காது. பொருளாதார தட்டுப்பாடு அதிகம் இருக்கும். வெப்ப நோய், ஜீரணக் கோளாறு, பார்வை குறைபாடு, தண்ணீர் கண்டம், வீசிங் தொந்தரவு இருக்கும்.

    பிறவி எண் 1- விதி எண்.3

    சூரியனின் 1ம் எண் ஆதிக்கத்தில் பிறந்து குருவின் 3ம் ஆதிக்கத்தில் விதி எண் அமைந்தால் அதிர்ஷ்ட சாலிகள். சூரியனும் குருவும் பலம் பெற்றால் பேரதிர்ஷ்டம் நிறைந்தவர்கள். தெய்வ பக்தி நிறைந்தவர்கள். பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்கள். பொருளாதாரத்திலும், குடும்ப வாழ்க்கையிலும் தன்னிறைவு உண்டு. அரசருக்கு உரிய அந்தஸ்துடன் வாழ்வார்கள். சொந்த வாழ்க்கையை விட பொது வாழ்க்கையில் அதிக ஆர்வம் இருக்கும். சூரியனும் குருவும் பலம் குறைந்தால் அரசியல் ஈடுபாடு இருக்கும் ஆனால் ஆதாயம் இருக்காது. பல சமயங்களில் பிறருக்காகவே உழைப்பார்கள். தொழில் மந்தம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, மனக்கஷ்டம் ஏற்படும். மஞ்சள் காமாலை, எலும்பில்லாத உறுப்புகளில் அடிக்கடி தொந்தரவு இருக்கும்.

    பிறவி எண் 1, விதி எண் 4

    சூரியனின் ஓன்றாம் எண் ஆதிக்கத்தில் பிறந்து ராகுவின் 4ம் எண் ஆதிக்கத்தில் விதி எண் அமைவது சிறப்பான பலன் அல்ல. தந்தைக்கு முன்னேற்றம் குறையும். அல்லது தந்தையை பிரிந்து வாழ்வார்கள். சாண் ஏறினால் முழம் சறுக்கும். முயற்சிக்கு தகுந்த முன்னேற்றம் இருக்காது. பலருடைய விரோதமும் எதிர்ப்பும் இருக்கும். பூர்வீகத்தில் வாழும் வாய்ப்பு குறைவு. அல்லது பூர்வீகச் சொத்து விரயமாகும். திடீர் ஏற்றம் அல்லது எதிர்பாராத இறக்கம் அமையும். தன் சக்திக்கு மீறிய காரியத்தில் ஈடுபட்டு மன வேதனை அடைவார்கள், இவர்களின் உழைப்பு பிறருக்கே பயன்படும். சுய ஜாதகத்தில் சூரியன், ராகு பலம் பெற்றால் அரசாங்க ஆதரவு, சுகபோக வாழ்க்கையுண்டு. அதன் மூலம் பெரும் புகழும் செல்வமும் அடைவார்கள்.

    பிறவி எண் 1, விதி எண் 5

    சூரியனின் 1ம் எண் ஆதிக்கம் பிறவி எண்ணாகவும் புதனின் 5-ம் எண் விதி எண்ணாகவும் அமைந்தவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். சுய ஜாதகத்தில் சூரியனும் புதனும் சுப வலுப்பெற்றால் நல்ல கல்வி அறிவு உண்டு. கற்ற கல்வியால் பயன் உண்டு. பெரும்பாலும் ஆசிரியர், வங்கிபணி, கல்வி நிறுவனம், ஜோதிடத்தில் புகழ் அடைகிறார்கள். சமுதாய அந்தஸ்து நிறைந்த நண்பர்கள் உண்டு. அவர்கள் மூலம் கூட்டுத் தொழில், ஆதாயம் உண்டு. கவுரவமான காதல் பின்னணி உள்ளவர்கள். சூரியனும் புதனும் அசுப வலுப்பெற்றால் கல்வி அறிவு குறைவுபடும். ஆனால் படிக்காத மேதை. கண் அளவு, கை அளவு என பார்த்த மாத்திரத்தில் எதையும் கணிக்கும் நிபுணத்துவம் உண்டு. தண்ணீர் இல்லாத காட்டையும் விலை பேசும் தந்திரவாதிகள்.

    பிறவி எண் 1 விதி எண் 6

    சூரியனின் 1ம் எண் ஆதிக்கம் பிறவி எண்ணாகவும் சுக்கிரனின் 6ம் எண் விதி எண்ணாகவும் அமைந்தால் சாதகமும் பாதகமும் கலந்தே இருக்கும். சூரியன், சுக்ரன் சுப வலுப்பெற்றவர்களுக்கு அழகு, ஆடம்பரம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும். அதிகார பதவிகள் தேடி வரும். மனித நேயமும் தொழில் நியாயமும் இவர்களது நோக்கமாக இருக்கும். சூரியன், சுக்ரன் அசுப வலிமை பெற்றால் தொழில், அரசியல், சமூகரீதியாக நல்ல பலன்களைக் கொடுத்தாலும் திருமண வாழ்க்கை மன நிறைவு தருவதில்லை. தம்பதிகளுக்குள் கவுரவ பிரச்சினையால் அன்யோன்யம் குறைந்து பிரிவினை ஏற்படுகிறது. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து வாழும் தன்மை இருக்காது. கடன் பெற்று நிர்வாகச் செலவு, ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள்.

    பிறவி எண் 1 விதி எண் 7

    சூரியனின் 1ம் எண் ஆதிக்கம் பிறவி எண்ணாகவும் கேதுவின் 7ம் எண் விதி எண்ணாகவும் அமைவது பொது வாழ்க்கைக்கும், சந்நியாசிகளுக்கும் சிறப்பு. நாணயமான அரசியல்வாதிகள் என்று பெயர் எடுப்பார்கள். சிவ வழிபாட்டில் ஆர்வம் அதிகம். பலருக்கு திருமணம் நடக்காது. திருமணம் நடந்தவர்கள் விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்கிறார்கள். அல்லது திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் பற்று குறைந்து இல்லற சந்நியாசியாக வாழ்கிறார்கள். இளமையில் வறுமையுடன் வாழ்கிறார்கள். இந்த அமைப்பை பெற்ற பலர் குழந்தையின்மையால் அவதிப்படுகிறார்கள். பலர் ஆன்மபலம் இழந்து சூழ்நிலை கைதியாக வாழ்கிறார்கள். பல திறமைசாலிகள் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் கடனால் வம்பு, வழக்கால் பாதிப்பு அடைகிறார்கள்.

    பிறவி எண் 1 விதி எண்.8

    சூரியனின் 1ம் எண் ஆதிக்கம் பிறவி எண்ணாகவும் சனியின் 8ம் எண் விதி எண்ணாகவும் அமைவது பொது வாழ்க்கை, அரசியல்வாதிகளுக்கும் சிறப்பு. சூரியன், சனி பலம் பெற்றால் நீதிபதிகள், வக்கீல்கள், பேராசிரியர்கள் ஆகிய பெரும் பதவிகளை வகிப்பவர்கள். பார்ப்பதற்கு கடுமையானவர்களாகத் தோன்றினாலும் கள்ளம், கபடம் இல்லாமல் வெள்ளை மனதுடன் அன்பாக மற்றவர்களிடம் பழகுவார்கள். சூரியன், சனி பலம் குறைந்தால் கடின உழைப்பில் குறைந்த ஊதியம் பெறுவார்கள். நடுவயதில் இவர்கள் பல வாழ்க்கைப் பிரச்சினைகளை சந்திப்பார்கள். ஆரோக்கிய குறைவு உண்டு. இவர்களின் உழைப்பு பிறருக்கே பயன்படும். வாழ்வின் பிற்பகுதியில், தாங்கள் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, ஆனந்தமான வாழ்க்கை வாழ்வார்கள். தந்தை மகன் கருத்து வேறுபாடு உண்டு. வெளியூர் அல்லது வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பு.

    பிறவி எண்.1 விதி எண்.9

    சூரியனின் 1ம் எண் ஆதிக்கம் பிறவி எண்ணாகவும் செவ்வாயின் 9ம் எண் விதி எண்ணாகவும் அமைவது மிகச் சிறப்பான பலன். நிர்வாகத் திறன் கொண்ட சூரியனும் அதிகார தோரணை நிறைந்த செவ்வாய் ஜாதகத்தில் பலம் பெற்றவர்கள் அன்பிற்கு அடிபணிவார்கள். அதிகாரத்திற்கும், ஆணவத்திற்கும் அடிபணிய மறுப்பார்கள். புகழ் பெற்றவர்களாகவும் தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும், தங்களது ஆலோசனைகளை கேட்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். ராணுவம், போலீஸ் போன்ற துறையில் தனித் திறமையுடன் மிளிர்வார்கள்.

    எல்லாம் எனக்குத் தெரியும் என்ற கர்வத்துடன் எல்லா விசயத்திலும் தனித்து செயல்படுவார்கள். சூரியன், செவ்வாய் பலம் குறைந்தால் வாழ்க்கையில் தனியாக போராட பிறந்தவர்கள். தாய், தந்தை, உறவினர்கள், உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்காது. முயற்சிக்கு தகுந்த முன்னேற்றம் கிடைக்காது. பலருடைய விரோதமும் எதிலும் அவசரமும் ஆத்திரமும் உண்டு. தங்கள் முயற்சியில் அடுத்தவர் தலையீட்டை விரும்ப மாட்டார்கள். பொதுவாக இந்த 1-ம் எண்ணின் ஆதிக்கம் தொழில், அரசியல், சமூகரீதியாக நல்ல பலன்களைக் கொடுக்கும்.

    செல்: 98652 20406

    Next Story
    ×