என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Numerology"

    • பொதுவாக இந்த 1-ம் எண்ணின் ஆதிக்கம் தொழில், அரசியல், சமூகரீதியாக நல்ல பலன்களைக் கொடுக்கும்.
    • பெயரெண் 55: புதனின் ஆதிக்கம். சூட்சம அறிவு, ஞானம் திட்டமிடுதல், ராஜ தந்திரம் மிகைப்படுத்தலாக இருக்கும்.

    சூரியன். ஒன்று என்ற எண் சூரியனுடைய ஆதிக்கத்தைக் குறிக்கின்றது. யாருக்கும் வளைந்து கொடுக்காதவர்கள். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாதவர்கள். பழகுவதற்கும், பார்வைக்கும் கம்பீரமானவர்கள். தன்னம்பிக்கை அதிகமானவர்கள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் பிரச்சினைகளைக் கூடத்தாங்களே சமாளித்துக் கொள்ளும் திறமையுடையவர்கள்.

    அடுத்தவர்களுடன் விவாதித்தால் கவுரவம் போய்விடும் என்று நினைப்பவர்கள். ரகசியங்களை பாதுகாக்கும் வல்லமை உண்டு. ஏட்டுக் கல்வியை விட அனுபவ பாடம் அதிகம் கற்றவர்கள். இந்த எண் சுறுசுறுப்பையும், படிப்பில் ஆர்வத்தையும் கொடுக்கும். 1,10,19,28,37,46,55,64,73,82,91,100 ஆகிய எண்களில் பெயர் அமைந்தவர்களும் 1,10,19,28ம் தேதிகளில் பிறந்தவர்களும் சூரியனின் ஆதிக்கம் பெற்றவர்கள்.

    பெயரெண் 10: சூரியனின் தனித்தன்மை நிறைந்த எண் என்பதால் புகழ், தன்னம்பிக்கை, நேர்மை, நாணயம், ஒழுக்கம் ஆகிய பண்புகள் நிறைந்திருக்கும்.

    பெயரெண் 19: சூரியன், செவ்வாயின் ஆதிக்கம் கலந்து இருப்பதால் சுயமுடிவு, சுய கவுரவம் இவர்களின் தனித்துவமாக இருக்கும்.

    பெயரெண் 28: சந்திரன், சனியின் ஆதிக்கம் நிறைந்த எண் என்பதால் கடின முயற்சிக்குப்பிறகு வெற்றியுண்டு. அதிர்ஷ்டம் குறைவுபடும்.

    பெயரெண் 37: குரு மற்றும் கேதுவின் ஆதிக்கம் நிறைந்த எண் என்பதால் சுயநல மற்றவர்கள். மகா உன்னத பலன் உண்டு. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கடனாளியாவார்கள்.

    பெயரெண் 46: ராகு மற்றும் சுக்கிரன் ஆதிக்கம் கலந்த எண். சிறு வயதில் மனசபலம் மிகுதியாக இருக்கும். வாழ்வின் பிற்பகுதியில் பலன் தரும்.

    பெயரெண் 55: புதனின் ஆதிக்கம். சூட்சம அறிவு, ஞானம் திட்டமிடுதல், ராஜ தந்திரம் மிகைப்படுத்தலாக இருக்கும்.

    பெயரெண் 64: சுக்கிரன், ராகு ஆதிக்கம் ஒருங்கே சேர்ந்து இருக்கும். நண்பர்களையும் எதிரிகளையும் எளிதில் அடையாளம் காண முடியாது. சில எதிர்பிற்குப் பின் வெற்றி உண்டு.

    பெயரெண் 73: கேது, குரு ஆதிக்கம் சேர்ந்து இருப்பதால் தெய்வ பக்தி மிகுதியால் நினைத்ததை சாதிப்பவர்கள். 50 வயதிற்கு மேல் இருப்பதை எல்லாம் இழப்பார்கள்.

    பெயரெண் 82: சனி, சந்திரன் ஆதிக்கத்தை பிரதிபலிப்பதால் கடின உழைப்பால் சாதாரண மனிதனும் சக்ரவர்த்தியாகுவார்கள்.

    பெயரெண் 91: செவ்வாய், சூரியன் ஆதிக்கம் நிறைந்த எண் என்பதால் உலகப் புகழ், சரித்திரத்தில் இடம் பெறும் யோகம் உண்டாகும்.

    பெயரெண் 100: சூரியனின் ஆதிக்கத்தை மட்டும் கொண்டு இருந்தாலும் பூஜ்யம் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தாது. உப்பு, சப்பு இல்லாத மன நிறைவற்ற வாழ்க்கையே நீடிக்கும். பலர் 100 சதம் நல்ல பலன் தரும் என்ற மனக்கணக்கில் இந்த எண்ணில் பெயர் வைத்து கவிழ்கிறார்கள்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

     

    பிறவி எண் என்பது ஒருவர் பிறந்த தேதியைக் குறிக்கும் எண் ஆகும். விதி எண் என்பது ஒருவரின் முழு பிறந்த தேதி மாதம், வருடம் அனைத்தையும் கூட்டி வரும் ஒற்றை இலக்க எண் ஆகும்.

    பிறவி எண்:1 விதி எண்.1

    சூரியனின் ஆதிக்கம் நிறைந்த ஒன்றாம் எண் ஆதிக்கத்தில் பிறவி எண்ணும் விதி எண்ணும் அமைவது சிறப்பு. சுய ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்றால் ஆன்ம பலம் ஆளுமைத் தன்மை, நிர்வாகத் திறன், சுய கவுரவம், கம்பீரத் தோற்றம் நிறைந்தவர். புகழ், முன்னேற்றம், அந்தஸ்து அனைத்தும் தேடி வரும். அரசியல் ஆதாயம் உண்டு. எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை தீமைகளை முன்பே அறியும் ஞானம் இருக்கும்.தந்தையின் ஆதரவு உண்டு. ஏதாவது ஒரு துறையில் நிச்சயம் முன்னேற்றம் உண்டு. சூரியன் பகை நீசம் அஸ்தமனம் பெற்று இருந்தால் புகழ், அந்தஸ்து கவுரவம் மட்டுப்படும். முன்னேற்றம் கிடைக்காது. தாய், தந்தையின் ஆதரவு குறையும். தலை, கண், இருதயம் சார்ந்த பாதிப்பு உண்டு.

    பிறவி எண் 1- விதி எண் 2

    சூரியனின் 1ம் எண் ஆதிக்கத்தில் பிறந்து சந்திரனின் 2ம் எண் ஆதிக்கத்தில் விதி எண் அமைந்தால் சுய ஜாதகத்தில் சூரியன், சந்திரன் பலம் பெற வேண்டும். இவர்கள் இருவரும் பலம் பெற்றால் தாய், தந்தையின் ஆதரவு மற்றும் ஆதாயம் உண்டு. சிந்தித்து செயல் ஆற்றுவதில் வல்லவர்கள். அரசியல், அரசு சார்ந்த தொழில் உத்தியோகங்கள் அமையும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை உண்டு. தாராள தன வரவு இருக்கும். திரண்ட சொத்து உண்டு. பேச்சுத் திறமையால் அனைவரையும் கவர்வதில் வல்லவர்கள். சூரியன், சந்திரன் பலம் குறைந்தால் தாய், தந்தையின் ஆதரவு கிடைக்காது. பொருளாதார தட்டுப்பாடு அதிகம் இருக்கும். வெப்ப நோய், ஜீரணக் கோளாறு, பார்வை குறைபாடு, தண்ணீர் கண்டம், வீசிங் தொந்தரவு இருக்கும்.

    பிறவி எண் 1- விதி எண்.3

    சூரியனின் 1ம் எண் ஆதிக்கத்தில் பிறந்து குருவின் 3ம் ஆதிக்கத்தில் விதி எண் அமைந்தால் அதிர்ஷ்ட சாலிகள். சூரியனும் குருவும் பலம் பெற்றால் பேரதிர்ஷ்டம் நிறைந்தவர்கள். தெய்வ பக்தி நிறைந்தவர்கள். பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்கள். பொருளாதாரத்திலும், குடும்ப வாழ்க்கையிலும் தன்னிறைவு உண்டு. அரசருக்கு உரிய அந்தஸ்துடன் வாழ்வார்கள். சொந்த வாழ்க்கையை விட பொது வாழ்க்கையில் அதிக ஆர்வம் இருக்கும். சூரியனும் குருவும் பலம் குறைந்தால் அரசியல் ஈடுபாடு இருக்கும் ஆனால் ஆதாயம் இருக்காது. பல சமயங்களில் பிறருக்காகவே உழைப்பார்கள். தொழில் மந்தம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, மனக்கஷ்டம் ஏற்படும். மஞ்சள் காமாலை, எலும்பில்லாத உறுப்புகளில் அடிக்கடி தொந்தரவு இருக்கும்.

    பிறவி எண் 1, விதி எண் 4

    சூரியனின் ஓன்றாம் எண் ஆதிக்கத்தில் பிறந்து ராகுவின் 4ம் எண் ஆதிக்கத்தில் விதி எண் அமைவது சிறப்பான பலன் அல்ல. தந்தைக்கு முன்னேற்றம் குறையும். அல்லது தந்தையை பிரிந்து வாழ்வார்கள். சாண் ஏறினால் முழம் சறுக்கும். முயற்சிக்கு தகுந்த முன்னேற்றம் இருக்காது. பலருடைய விரோதமும் எதிர்ப்பும் இருக்கும். பூர்வீகத்தில் வாழும் வாய்ப்பு குறைவு. அல்லது பூர்வீகச் சொத்து விரயமாகும். திடீர் ஏற்றம் அல்லது எதிர்பாராத இறக்கம் அமையும். தன் சக்திக்கு மீறிய காரியத்தில் ஈடுபட்டு மன வேதனை அடைவார்கள், இவர்களின் உழைப்பு பிறருக்கே பயன்படும். சுய ஜாதகத்தில் சூரியன், ராகு பலம் பெற்றால் அரசாங்க ஆதரவு, சுகபோக வாழ்க்கையுண்டு. அதன் மூலம் பெரும் புகழும் செல்வமும் அடைவார்கள்.

    பிறவி எண் 1, விதி எண் 5

    சூரியனின் 1ம் எண் ஆதிக்கம் பிறவி எண்ணாகவும் புதனின் 5-ம் எண் விதி எண்ணாகவும் அமைந்தவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். சுய ஜாதகத்தில் சூரியனும் புதனும் சுப வலுப்பெற்றால் நல்ல கல்வி அறிவு உண்டு. கற்ற கல்வியால் பயன் உண்டு. பெரும்பாலும் ஆசிரியர், வங்கிபணி, கல்வி நிறுவனம், ஜோதிடத்தில் புகழ் அடைகிறார்கள். சமுதாய அந்தஸ்து நிறைந்த நண்பர்கள் உண்டு. அவர்கள் மூலம் கூட்டுத் தொழில், ஆதாயம் உண்டு. கவுரவமான காதல் பின்னணி உள்ளவர்கள். சூரியனும் புதனும் அசுப வலுப்பெற்றால் கல்வி அறிவு குறைவுபடும். ஆனால் படிக்காத மேதை. கண் அளவு, கை அளவு என பார்த்த மாத்திரத்தில் எதையும் கணிக்கும் நிபுணத்துவம் உண்டு. தண்ணீர் இல்லாத காட்டையும் விலை பேசும் தந்திரவாதிகள்.

    பிறவி எண் 1 விதி எண் 6

    சூரியனின் 1ம் எண் ஆதிக்கம் பிறவி எண்ணாகவும் சுக்கிரனின் 6ம் எண் விதி எண்ணாகவும் அமைந்தால் சாதகமும் பாதகமும் கலந்தே இருக்கும். சூரியன், சுக்ரன் சுப வலுப்பெற்றவர்களுக்கு அழகு, ஆடம்பரம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும். அதிகார பதவிகள் தேடி வரும். மனித நேயமும் தொழில் நியாயமும் இவர்களது நோக்கமாக இருக்கும். சூரியன், சுக்ரன் அசுப வலிமை பெற்றால் தொழில், அரசியல், சமூகரீதியாக நல்ல பலன்களைக் கொடுத்தாலும் திருமண வாழ்க்கை மன நிறைவு தருவதில்லை. தம்பதிகளுக்குள் கவுரவ பிரச்சினையால் அன்யோன்யம் குறைந்து பிரிவினை ஏற்படுகிறது. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து வாழும் தன்மை இருக்காது. கடன் பெற்று நிர்வாகச் செலவு, ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள்.

    பிறவி எண் 1 விதி எண் 7

    சூரியனின் 1ம் எண் ஆதிக்கம் பிறவி எண்ணாகவும் கேதுவின் 7ம் எண் விதி எண்ணாகவும் அமைவது பொது வாழ்க்கைக்கும், சந்நியாசிகளுக்கும் சிறப்பு. நாணயமான அரசியல்வாதிகள் என்று பெயர் எடுப்பார்கள். சிவ வழிபாட்டில் ஆர்வம் அதிகம். பலருக்கு திருமணம் நடக்காது. திருமணம் நடந்தவர்கள் விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்கிறார்கள். அல்லது திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் பற்று குறைந்து இல்லற சந்நியாசியாக வாழ்கிறார்கள். இளமையில் வறுமையுடன் வாழ்கிறார்கள். இந்த அமைப்பை பெற்ற பலர் குழந்தையின்மையால் அவதிப்படுகிறார்கள். பலர் ஆன்மபலம் இழந்து சூழ்நிலை கைதியாக வாழ்கிறார்கள். பல திறமைசாலிகள் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் கடனால் வம்பு, வழக்கால் பாதிப்பு அடைகிறார்கள்.

    பிறவி எண் 1 விதி எண்.8

    சூரியனின் 1ம் எண் ஆதிக்கம் பிறவி எண்ணாகவும் சனியின் 8ம் எண் விதி எண்ணாகவும் அமைவது பொது வாழ்க்கை, அரசியல்வாதிகளுக்கும் சிறப்பு. சூரியன், சனி பலம் பெற்றால் நீதிபதிகள், வக்கீல்கள், பேராசிரியர்கள் ஆகிய பெரும் பதவிகளை வகிப்பவர்கள். பார்ப்பதற்கு கடுமையானவர்களாகத் தோன்றினாலும் கள்ளம், கபடம் இல்லாமல் வெள்ளை மனதுடன் அன்பாக மற்றவர்களிடம் பழகுவார்கள். சூரியன், சனி பலம் குறைந்தால் கடின உழைப்பில் குறைந்த ஊதியம் பெறுவார்கள். நடுவயதில் இவர்கள் பல வாழ்க்கைப் பிரச்சினைகளை சந்திப்பார்கள். ஆரோக்கிய குறைவு உண்டு. இவர்களின் உழைப்பு பிறருக்கே பயன்படும். வாழ்வின் பிற்பகுதியில், தாங்கள் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, ஆனந்தமான வாழ்க்கை வாழ்வார்கள். தந்தை மகன் கருத்து வேறுபாடு உண்டு. வெளியூர் அல்லது வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பு.

    பிறவி எண்.1 விதி எண்.9

    சூரியனின் 1ம் எண் ஆதிக்கம் பிறவி எண்ணாகவும் செவ்வாயின் 9ம் எண் விதி எண்ணாகவும் அமைவது மிகச் சிறப்பான பலன். நிர்வாகத் திறன் கொண்ட சூரியனும் அதிகார தோரணை நிறைந்த செவ்வாய் ஜாதகத்தில் பலம் பெற்றவர்கள் அன்பிற்கு அடிபணிவார்கள். அதிகாரத்திற்கும், ஆணவத்திற்கும் அடிபணிய மறுப்பார்கள். புகழ் பெற்றவர்களாகவும் தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும், தங்களது ஆலோசனைகளை கேட்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். ராணுவம், போலீஸ் போன்ற துறையில் தனித் திறமையுடன் மிளிர்வார்கள்.

    எல்லாம் எனக்குத் தெரியும் என்ற கர்வத்துடன் எல்லா விசயத்திலும் தனித்து செயல்படுவார்கள். சூரியன், செவ்வாய் பலம் குறைந்தால் வாழ்க்கையில் தனியாக போராட பிறந்தவர்கள். தாய், தந்தை, உறவினர்கள், உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்காது. முயற்சிக்கு தகுந்த முன்னேற்றம் கிடைக்காது. பலருடைய விரோதமும் எதிலும் அவசரமும் ஆத்திரமும் உண்டு. தங்கள் முயற்சியில் அடுத்தவர் தலையீட்டை விரும்ப மாட்டார்கள். பொதுவாக இந்த 1-ம் எண்ணின் ஆதிக்கம் தொழில், அரசியல், சமூகரீதியாக நல்ல பலன்களைக் கொடுக்கும்.

    செல்: 98652 20406

    • சாதாரண மனிதர்கள் முதல் சாதனையாளர்கள் வரை அனைவருக்கும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று தேவைப்படுகிறது.
    • எண் கணிதம் வேறு ஜோதிடம் வேறு கிடையாது.

    எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்பது அவ்வையாரின் வாக்கு.

    ஒரு உடலுக்குக் கண்கள் எவ்வளவு முக்கியமோ, அதேபோல மனித வாழ்க்கைக்கு எண்களும் எழுத்துகளும் மிக முக்கியம். நமது அன்றாட தேவை மற்றும் பயன்பாட்டில் பணம், நேரம், தூரம், வயது, மற்றும் அளவீடுகள் என அனைத்திலும் எண்களின் பங்களிப்பு இன்றியமையாதது. ஒருவரின் வாழ்க்கையை முறைப்படுத்தவும், அன்றாடச் செயல்பாடுகளில் சரியான முடிவுகளை எடுக்கவும் எண்கள் வழிகாட்டுகின்றன. எண் கணிதம் பற்றிய முழுமையான விழிப்புணர்வு உள்ளவர்களே வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள். சிறப்பான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

    சாதாரண மனிதர்கள் முதல் சாதனையாளர்கள் வரை அனைவருக்கும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று தேவைப்படுகிறது. உலகில் பல்வேறு விதமான அதிர்ஷ்ட வாய்ப்புகள் மனிதருக்கு பல வரப்பிரசாதமாக உள்ளது. அதில் ஒன்றுதான் என் கணிதம். இதை சில பேர் நக்கல் நையாண்டித்தனமாக இரண்டு எழுத்தை மாற்றி வைத்தால் தலைவிதி மாறிவிடுமா என்று கேட்பார்கள். நம்பிக்கை இல்லாதவர்களைப் பற்றி நாம் கவலைபடக் கூடாது. உலகில் சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்த பலர் தங்களது பெயரை எண் கணித முறையில் மாற்றி அமைத்த பிறகு வாழ்வாதாரம் உயர்ந்து உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் எண் கணிதம் வேறு ஜோதிடம் வேறு கிடையாது. ஜோதிடத்தின் பல்வேறு உட்பிரிவுகளில் எண்கணிதமும் ஒன்றாகும். சுய ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளுக்கு ஏற்ப பெயரை அமைத்துக் கொள்வது அனைவரின் சுவாசக் காற்றான மொபைல் போன் எண்கள் மற்றும் வாகன எண்களை அதிர்ஷ்டத்திற்கு தகுந்தார் போல் மாற்றிக் கொள்வது உயர்வான நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். அதிர்ஷ்டம் என்பது புதையல் யோகம் அல்ல. ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் எப்படி வேண்டுமானாலும் தேடி வரலாம். பூமியை பிளந்து தான் அதிர்ஷ்டத்தை பெற வேண்டும் என்ற கணக்கு இல்லை.

    தொழில், உத்தியோக ரீதியான அதிர்ஷ்ட லாபமும் புதையல் யோகமே. உண்மையான உழைப்பின் மூலம் வருவது தான் நிலையான நிரந்தரமான அதிர்ஷ்டமாகும். எனக்கு அதிர்ஷ்டம் இல்லை ஜாதகம் சரியில்லை என்று புலம்பிக் கொண்டு ஒரே இடத்தில் நின்றால் அதற்குப் பெயர்சோம்பேறித்தனமாகும். அதிர்ஷ்ட எண்களை வங்கி கணக்கு எண், வாகன எண், வீட்டு எண், மொபைல் எண், பெயர் எண் அல்லது முக்கியமான வேலைகளைத் தொடங்கும் தேதிகளாகவும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்.

    பிறந்த தேதி மற்றும் பெயர் எண்ணுக்கு ஏற்றவாறு தொழில், திருமணம், மற்றும் பெயர் திருத்தம் போன்றவற்றைச் செய்வதன் மூலம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இதன் மூலம் ஒருவர் தன் ஆளுமை, பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொண்டு சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்.

    நல்ல வாய்ப்புகளை அடைய தேவையான அதிர்ஷ்டத்தை அதிகரித்துக் கொண்டு வெற்றியை நோக்கி ஓட வேண்டும். அதேபோல் உழைக்காமல் அதிர்ஷ்டம் வராது. அதிர்ஷ்ட போன் நம்பர் அதிர்ஷ்ட பெயர் வைத்துக் கொண்டால் மட்டும் அதிர்ஷ்டத்தை அடைய முடியாது முறையான உழைப்பாளிகளுக்கு சரியான திட்டமிடுதல் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் துணை நிற்கும். நிற்கும் குதிரைக்கு மதிப்பு இல்லை. ஓடும் குதிரைக்கு மட்டுமே மதிப்பு. வெற்றியை நோக்கி ஓடுபவர்களுக்கு தோல்வி இல்லை வெற்றி புதையலாக மாறும். புதையலை நோக்கி ஓடி காலத்தை நகர்த்துவதை விட உழைப்பை நோக்கி ஓடினால் ஏராளமான தனவரவும் வாய்ப்புகளும் உண்டாகுவது உறுதி. கற்பனையில் அதிர்ஷ்டத்தை நம்பினால் வாழ்க்கை கெட்டுவிடும் என்பது முன்னோர்களின் அனுபவ உண்மை.

    பல வெளிநாடுகளில் எண்ணியதை பிரதான சக்தியாக பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். பல புதிய உண்மைகளை உலகிற்கு வழங்கியுள்ளார்கள். தற்போது மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த எண்ணியல் கலை சிலருக்கு அசுர வளர்ச்சியையும் பலருக்கு வீழ்ச்சியையும் தருகிறது.

    பொதுவாக ஜோதிடம் அறியாத நியுமராலஜி நிபுணர்கள் பிறந்த தேதியை அடிப்படையாக வைத்து ஒரு தனி மனிதன் அல்லது நிறுவனத்தின் பெயரை தேர்வு செய்து தருகிறார்கள். இது காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதையாக சிலருக்கு நல்ல ஒரு மாற்றத்தை கொடுத்து விடுகிறது. தவறான அதிர்ஷ்ட எண்ணில் பெயர் மாற்றி வைத்துக் கொண்டால் நிலையான, நிரந்தமான புகழ், பணம், உயர்வு கிடைக்காது. பலர் தவறு எங்கே என்ற புரிதல் இன்றி தொடர் தோல்வியை சந்திக்கிறார்கள். சிலருக்கு பெரிய பெயர் மாற்றத்தைத்தரும் நீயுமராலஜி பலருக்கு ஏன் வெற்றி தருவதில்லை என்ற காரணத்தையும் எல்லோருக்கும் நியூமராலஜி பயன்தர அதை எப்படி பயன் தருவது போன்ற அறிய தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

     

    ஒருவருடைய ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் அமைந்தாலும் அதை சிறப்பாக பெற வேண்டுமானால் உடல் எண் உயிர் எண்ணிற்கு ஏற்றவாறு பெயர் வைப்பது அவசியம். ஒருவருடைய ஜாதகத்தில் மோசமான யோகம் இருந்தாலும் உடல், உயிர் எண்ணுக்கு ஏற்ற பெயர் வைப்பதால் கெடுதலை ஓரளவு குறைக்கலாம். ஆனால் முழுவதும் நீக்க முடியாது.

    ஆகவே வாழ்க்கையில் வெற்றி பெற பிறந்த ஜாதகம் நன்றாக இருக்க வேண்டும். அல்லது பிறந்த தேதியின் உடல், உயிர் எண்ணிற்கு ஏற்ற படி பெயர் வைத்துக் கொள்வது உத்தமம். இயலாதவர்கள் உடல், உயிர் எண்களை ஆதிக்கம் செய்யும் கிரகங்களை வழிபாடு செய்வதன் மூலமும் நல்ல பலன்களை பெற முடியும். சிலர் அதிர்ஷ்ட பெயரை பிறந்த ஜென்ம நட்சத்திரப்படியும், சிலர் பிறவி எண் படியும், சிலர் விதி எண் படியும், சிலர் விதி எண்ணிற்கு பொருத்தமான நட்பு எண்ணிலும், பொதுவாக அதிர்ஷ்டம் தரக்கூடிய 1,5,9 ஆகிய எண்ணிலும் பெயரை அமைக்கிறார்கள். இந்த முறைகள் வெகு சிலருக்கு பலன் தருகிறது. பலருக்கு நேர்மறையான பலன்களை மட்டுமே தருகிறது.

    ஜாதகப்படி பெயர் அமைத்தல் பலர் ஜோதிடத்தையும், எண்ணியலையும் பிரித்துப் பார்க்கிறார்கள். அது தவறு. ஒருவருக்கு சுய ஜாதகத்தை மீறிய நற்பலன்கள் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு. பிறவி எண், விதி எண் இவற்றோடு ஒருவருடைய ஜாதக ரீதியாக யோகத்தை தரக்கூடிய கிரகத்தின் எண்ணில் பெயரை அமைத்துக் கொண்டால் பலன் நூறு சதவிகிதம் உறுதி. பிறவி எண், விதி எண் இவற்றோடு ஜாதகத்தையும் ஒப்பிட்டு, அந்த ஜாதகப்படி எந்த கிரகம் நன்மை தரும் என்பதை ஆய்வு செய்து அந்த கிரகத்திற்குரிய எண், பிறந்த தேதி எண்ணிற்கு பொருத்தமாக இருக்கிறதா என ஆராய்ந்து அதற்கு பொருத்தமான எண்ணில் பெயரை அமைப்பதே மிக உன்னத முறையாகும். ஜாதகத்தில் வலிமை பெற்ற கிரகத்தின் எண்ணை அல்லது அதன் நட்பு எண்ணின் அடிப்படையில் பெயர் வைக்கும் போது நல்ல பலன் கிடைக்கும்.

    இவ்வாறு தேர்வு செய்யும் எண் ஜாதகரின் சுய ஜாதக லக்ன ரீதியான அசுபர்களாக உள்ள கிரகத்தின் எண்ணின் பெயராக இருக்க கூடாது. ஒருவரின் ஜாதகத்தில் பலமாக உள்ள கிரகம் வாழ்நாள் முழுவதும் ஜாதகத்தை இயக்கும். அதே கிரகம் லக்ன ரீதியான சுபர் எனில் ஜாதகருக்கு சுபபலன்கள் மிகுந்து கொண்டே இருக்கும்.

    ஜோதிடமும் நியூமராலஜியும்

    ஒரு குழந்தை பிறக்கும் பொழுதுவான மண்டலத்திலுள்ள கிரகங்களில் சில கிரகங்கள் வலிமையாக இருக்கலாம். சில கிரகங்கள் வலிமை இழந்து நிற்கும். லக்ன ரீதியான அசுப கிரகம் வலிமை இழந்தால் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் லக்ன ரீதியான சுபர் எனில் அதன் தசா புக்தி காலங்களில் நற்பலன்களை அனுபவிக்க முடியாமல் போய்விடும். வலிமையற்ற கிரகத்தை பலப்படுத்த பல்வேறு பூஜை பரிகாரமுறைகள் ஜோதிட சாஸ்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தாலும் பரிகாரம் குறுகிய காலத்திற்கு மட்டுமே பலன்கள் தரும். ஆனால் நிரந்தரமான பலன்களைத் தருவதில் எண் கணித பெயர்கள் என்றால் அது மிகைப்படுத்தலாகது. வெறும் அதிர்ஷ்டப் பெயரை மட்டும் அமைத்துக் கொண்டால் 25 சதவீதம் மட்டுமே பலன் கிடைக்கும். அந்த நல்ல பெயரை ஜாதகம் பார்த்து பிறந்த எண், விதி எண் இவற்றோடு ஒப்பிட்டு ஒருவருடைய ஜாதகத்திற்கு யோகத்தை அளிக்கக்கூடிய எண்ணில் பெயரை வைத்துக் கொண்டால் வாழ்க்கை ஒளிமயமாகும்.

    உடல் எண்: ஒருவருடைய பிறந்த தேதியைக் கூட்டினால் வருவது உடல் எண் எனப்படும்.

    உயிர் எண்: ஒருவருடைய பிறந்த, தேதி, மாதம், வருடம் இவைகளை கூட்டினால் வருவது உயிர் எண் எனப்படும்.

    பெயரெண்: ஒருவருடைய பெயருக்கு உண்டான எழுத்துக்களுக்கான எண்களை கூட்ட வருவது பெயரெண் எனப்படும்.

    எண்ணும் எழுத்தும்

    ஆங்கில மொழியே உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தும் எண் என்பதால் ஆங்கில எழுத்துக்களே எண் கணித சாஸ்திரத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மனிதனையும் நவ கிரகங்கள் ஆள்வது போல் சில எண்களும் ஆளும். அதன்படி ஒருவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தக்கூடிய அதிர்ஷ்ட எண்களை கண்டறிந்து அதன்படி பெயரை திருத்தி அமைத்துக் கொண்டால் வாழ்க்கை வசந்தமாகும். உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் 9 எண்களுக்கு மேல் எழுத்துக்கள் இல்லை. ஒவ்வொரு எழுத்தும் ஒரு கிரகத்தைச் சார்ந்துள்ளது.

    எழுத்துக்கள் எண்கள்

    A,I,J,Q,y 1

    B,K,R 2

    C,G,L,S 3

    D,M,T 4

    E,H,N,X 5

    U,V,W 6

    0, Z 7

    F, P 8

    9ம் எண்ணிற்கு எந்த எழுத்தும் கிடையாது. நவகிரகங்களும் 1 முதல் 9 வரையான எண்களின் ஆளுமைக்கு உட்பட்டது.

    எண்கள் கிரகங்கள்

    1. சூரியன்

    2. சந்திரன்

    3. குரு

    4. ராகு

    5. புதன்

    6. சுக்கிரன்

    7. கேது

    8. சனி

    9. செவ்வாய்

    பெயரில் சில எழுத்துக்களை மட்டும் மாற்றம் செய்வதால் வாழ்க்கை மாறாது. ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஒரு ஆளும்கிரகம் உண்டு அந்த ஆளும் கிரகத்திற்கு ஏற்ற எண்களை சூட்சும முறையில் பெயரில் சேர்க்கும் பொழுது வலுவான வாழ்வியல் மாற்றம் நடக்கும். இன்று உலகத்தில் மொபைல் போன் இல்லாதவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு நபரிடம் இரண்டு முதல் மூன்று செல்போன்கள் உள்ளது. இவ்வளவு ஏன் பிறந்த குழந்தைக்கு கூட சாப்பாடு ஊட்ட செல்போன் தேவைப்படுகிறது. பிறந்த குழந்தையின் பெயரில் தனி யூடியூப் சேனல் ஆரம்பித்து அவர்கள் தகவல் தொடர்பு சாதனங்களுடன் தங்களது குழந்தைகளின் வாழ்வாதாரத்தை இணைத்து விடுகிறார்கள். மொபைல் எண் ஜோதிடம் என்பது பிறவி எண் அல்லது விதி எண்ணுடன் மொபைல் எண்களின் கூட்டுத்தொகையை பொருத்தி அதிர்ஷ்டத்தை அடையும் முறையாகும். பத்து இலக்க எண்களையும் கூட்டி ஒற்றை எண்ணாக மாற்ற வேண்டும்,

    உதாரணமாக கூட்டு எண் ஒன்று எனில் தலைமை பண்பு அரசியல் அரசாங்க வெற்றி உண்டு. ஐந்து எனில் நல்ல நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வியாபார வளர்ச்சி தொழில் விருத்தி ஆகியவை உண்டாகும். இதுபோல் ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு.

    சரியான மொபைல் எண் அமைந்தவர்களின் வாழ்க்கையில் மன நிம்மதி நல்ல பொருளாதார வளர்ச்சி நிலையான நிரந்தரமான தொழில் உத்தியோக வாய்ப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்தி தரும். அவரவரின் பிறந்த தேதிக்கு ஏற்றவாறு எண்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்ல முடியும்.

    இனி வரும் வாரங்களில் நவகிரகங்களின் எண்களில் பெயர்கள் அமைந்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது பற்றிய கட்டுரையை நீங்கள் படிக்க முடியும்.பிறந்த நேரம் சரியாக இல்லாவிட்டால் எண் கணிதப் படி பெயர் மொபைல் எண்களை மாற்றி அமைக்கும் போது நல்லது நடக்கும் நல்லது மட்டுமே நடக்கும்.

    செல்: 98652 20406

    • வாரத்தின் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு குணத்துடன் திகழ்கின்றது.
    • ஒருவரின் கிழமையின் மூலமாக அவர்களின் குண நலன்கள், அவர்களின் சிறப்பு பற்றி கூற முடியும்.

    பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவாக அவர்களுடைய செயல்பாடுகளின் பலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு. ஒருவரின் கிழமையின் மூலமாக அவர்களின் குண நலன்கள், அவர்களின் சிறப்பு பற்றி கூற முடியும்.

    வாரத்தின் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு குணத்துடன் திகழ்கின்றது. ஆனால், ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிழமையில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொருவிதமான குணம் இருக்கும்.

    ஞாயிற்றுக்கிழமை

    ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள், எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும், அதில் வென்று முடிக்கும்வரை ஓயமாட்டார்கள். எதிலும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையான குணமுள்ளவர்களாக இருப்பார்கள். ''இங்கே என்ன தோணுதோ அத பேசறேன், இங்க என்ன தோணுதோ அதைச் செய்றேன்'' என்கிற டைப். இவர்கள்,சொல்வதைத்தான் செய்வார்கள் செய்வதைதான் சொல்வார்கள். மற்றவர்கள் கடினமாகச் செய்யும் செயல்களைக்கூட இவர்கள் போகிறபோக்கில் செய்துவிடுவார்கள். ஆளுமைத் திறன் மிக்கவர்கள்.

    திங்கள்கிழமை

    திங்கள்கிழமை பிறந்தவர்கள், வசீகரமான தோற்றத்தாலும், நகைச்சுவைமிக்க பேச்சாலும் மற்றவர் மனதில் எளிதில் இடம்பிடித்து விடுவார்கள். இவர்களுக்கு நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள். வீட்டில் இருக்கும் நேரத்தைவிட நண்பர்களுடன் பொழுதுபோக்குவதில்தான் இவர்களுக்கு ஆர்வம் அதிகம். எங்கு இருந்தாலும், இவர்கள் அந்தச் சூழ்நிலையைத் தனதாக்கிக்கொள்வார்கள். உதவி என்று யார் வந்து கேட்டாலும், உடனே செய்துவிடுவார்கள். பிறகு தங்களின் கைச் செலவுக்கு இல்லாமல் அவதிப்படுவதும் உண்டு.

    செவ்வாய்க்கிழமை

    செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள், வம்புசண்டைக்குப் போக மாட்டார்கள். வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். இவர்களுடன் பேசும்போது மற்றவர்கள் கவனமாக இருக்கவேண்டும். மற்றவர்களுடன் பேசும்போது இவரும் கவனமாக இருக்க வேண்டும். சூடம் காண்பித்துக் கொண்டே மணி அடிப்பது போல் விவாதம் செய்யும்போது மிகச் சரியாக எதிராளியை உரிய ஆதாரங்களுடன் வீழ்த்திவிடுவார்கள். முணுக் முணுக்கென இவர்களுக்குக் கோபம் வருவது வாடிக்கை. ஆனால் கோபம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும் என்பது போல் இவர்களாகவே வலிய வந்து ஸ்நேகமாகி விடுவார்கள்.

    புதன்கிழமை

    புதன்கிழமை பிறந்தவர்கள், எதையாவது எழுதிக்கொண்டும் படித்துக்கொண்டும் இருப்பார்கள். தங்களுக்குத் தேவை இல்லையென்றாலும்கூட, அதை அறிந்து வைத்துக்கொள்வதில் அதிகம் ஆர்வமுள்ளவர்கள். இயல்பிலேயே கொஞ்சம் ரிசர்வ் டைப்பான இவர்கள், கொஞ்சம் கூச்ச சுபாவமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். நண்பர்களைத் தேர்ந்தெடுத்துத்தான் பழகுவார்கள். பழகிவிட்டால் நட்புக்காக உயிரையும் கொடுப்பார்கள். திடுக்கெனப் பறந்து சென்று மீனைக் கவ்விடும் மீன்கொத்திப் பறவையைப்போல் தங்களுக்கான இடத்தை எந்தச் சபையிலும் பெற்று விடுவார்கள்.

    வியாழக்கிழமை

    வியாழக்கிழமையில் பிறந்தவர்கள், நன்நெறிகளுக்கு இருப்பிடமாகத் திகழ்வார்கள். அதனால், இவர்கள் பெரும்பாலும் தேவையில்லாத பிரச்னைகளில் அத்தனை எளிதாகச் சிக்கமாட்டார்கள். தன்னடக்கம் மிக்கவர்களாக இருப்பார்கள். இருந்த இடத்திலிருந்துகொண்டே எல்லா விஷயமும் அறிந்தவர்களாக இருப்பார்கள். இதனால் சிலர் இவரைக் கர்வம் பிடித்தவர் என்றுகூட எண்ணுவார்கள். தெய்வ வழிபாட்டிலும், ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேட்பதிலும் அதிகம் ஆர்வம் இருக்கும். வாழ்க்கை குறித்த தெளிவான திட்டமிடலும் முறையான அணுகுமுறையும் இவரை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்லும்.

    வெள்ளிக்கிழமை

    வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் வாழ்க்கையின் சகல சுகங்களையும் அனுபவிக்கப் பிறந்தவர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ்பவர்கள். அதனால், தங்கள் மனதுக்கு எது பிடிக்கின்றதோ அதை எந்தச் சூழ்நிலையிலும் அடைந்தே தீருவார்கள். சுற்றுலா பிரியர்களான இவர்கள், காலில் சக்கரம் கட்டாத குறையாக அலைந்துகொண்டிருப்பார்கள். ஆனால், இவரது உழைப்பு முழுவதும் மற்றவர்களுக்கே சென்று சேரும். புகழ்ச்சியை விரும்பும் இவர்கள் எதையும் எல்லோரையும் எளிதாக நம்பி விடுவார்கள். எல்லா மதநம்பிக்கையாளர்களும் புனிதமான நாளாக நினைப்பது வெள்ளிக்கிழமையைத்தான்.

    சனிக்கிழமை

    சனிக்கிழமை பிறந்தவர்கள், தூங்கினால் கும்பகர்ணன், எழுந்து நின்றால் இந்திரஜித் போன்றவர்கள். சோம்பலும், தள்ளிப்போடுவதும் இவர்களது பிறவிக்குணம். நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணம் உள்ளவர்கள். எதிலும் ஒரு அலட்சியப் போக்கு எதைப் பற்றியும் கவலைப்படாத கடைசி பெஞ்ச் மனோபாவம். 'எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் 'என்கிற டைப். எதிலும் ஷார்ட் கட் ரூட்டை ஃபாலோ பண்ணுவார்கள். மேற்கிலிருந்து கிழக்கைப் பார்ப்பார்கள். மற்றவர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டு இருப்பார்கள். ஆனால், எல்லோரிடமும் ஒரு 'பர்சனல் டச்' வைத்திருப்பார்கள். அதனாலேயே இவரைப் பலரும் விரும்புவார்கள்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • ஒருவரது அதிர்ஷ்டத்தை அதிகரிக்க பயன்தரும் பல்வேறு முறைகளில் நியுமராலஜியும் ஒன்று.
    • பலர் ஜோதிடத்தையும், எண்ணியலையும் பிரித்துப் பார்க்கிறார்கள்.

    ஒரு குழந்தை பிறக்கும் பொழுது வான் மண்டலத்திலுள்ள கிரகங்களில் சில கிரகங்கள் வலிமையாக இருக்கலாம். சில கிரகங்கள் வலிமை இழந்து நிற்கும். லக்ன ரீதியான அசுபகிரகம் வலிமை இழந்தால் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் லக்ன ரீதியான சுபகிரகம் எனில் அதன் தசா புக்தி காலங்களில் நற்பலன்களை அனுபவிக்க முடியாமல் போய்விடும்.

    வலிமையற்ற கிரகத்தை பலப்படுத்த பல்வேறு பூஜை பரிகாரமுறைகள் ஜோதிட சாஸ்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தாலும் பரிகாரம் குறுகிய காலத்திற்கு மட்டுமே பலன்கள் தரும். ஆனால் நிரந்தரமான பலன்களைத் தருவதில் எண் கணித பெயர்கள் என்றால் அது மிகைப்படுத்தலாகாது. வெறும் அதிர்ஷ்டப் பெயரை மட்டும் அமைத்துக் கொண்டால் 25 சதவீதம் மட்டுமே பலன் கிடைக்கும். அந்த நல்ல பெயரை ஜாதகம் பார்த்து பிறந்த எண், விதி எண் இவற்றோடு ஒப்பிட்டு ஒருவருடைய ஜாதகத்திற்கு யோகத்தை அளிக்கக்கூடிய எண்ணில் பெயரை வைத்துக் கொண்டால் வாழ்க்கை ஒளிமயமாகும்.

    ஒருவருக்கு பெயர் எண் அதிர்ஷ்டத்தை தருவதும் துரதிர்ஷ்டத்தை தருவதும் அவரவர் கர்ம வினையே காரணம். இந்த முறையில் பெயர் அமையாதவர்கள் அவர்களுடைய பிறந்த எண்ணிற்குரிய வழிபாட்டு முறையை கடைபிடித்தால் வெற்றி நிச்சயமாகும்.

    பலர் ஜோதிடத்தையும், எண்ணியலையும் பிரித்துப் பார்க்கிறார்கள். அது தவறு. ஒருவருக்கு சுய ஜாதகத்தை மீறிய நற்பலன்கள் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு. பிறவி எண், விதி எண் இவற்றோடு ஒருவருடைய ஜாதக ரீதியாக யோகத்தை தரக்கூடிய கிரகத்தின் எண்ணில் பெயரை அமைத்துக் கொண்டால் பலன் நூறு சதவிகிதம் உறுதி. பிறவி எண், விதி எண் இவற்றோடு ஜாதகத்தையும் ஒப்பிட்டு, அந்த ஜாதகப்படி எந்த கிரகம் நன்மை தரும் என்பதை ஆய்வு செய்து அந்த கிரகத்திற்குரிய எண், பிறந்த தேதி எண்ணிற்கு பொருத்தமாக இருக்கிறதா என ஆராய்ந்து அதற்கு பொருத்தமான எண்ணில் பெயரை அமைப்பதே மிக உன்னத முறையாகும்.

    ஜாதகத்தில் வலிமை பெற்ற கிரகத்தின் எண்ணை அல்லது அதன் நட்பு எண்ணின் அடிப்படையில் பெயர் வைக்கும் போது நல்ல பலன் கிடைக்கும். இவ்வாறு தேர்வு செய்யும் எண் ஜாதகரின் சுய ஜாதக லக்ன ரீதியான அசுபர்களாக உள்ள கிரகத்தின் எண்ணின் பெயராக இருக்க கூடாது. ஒருவரின் ஜாதகத்தில் பலமாக உள்ள கிரகம் வாழ்நாள் முழுவதும் ஜாதகத்தை இயக்கும். அதே கிரகம் லக்ன ரீதியான சுபர் எனில் ஜாதகருக்கு சுபபலன்கள் மிகுந்து கொண்டே இருக்கும்.

    உங்கள் பெயரின் முதல் எழுத்தை போலவே உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தும் உங்கள் குணத்தையும், ஆளுமையையும் கூறக்கூடும். இந்த பதிவில் உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து உங்களை பற்றிக்கூறும் ரகசியம் என்னவென்று பார்க்கலாம்.
    நமது அடையாளமாக இருந்து நமக்கு சமூகத்தில் ஒரு அங்கீகாரத்தையும் பெற்றுத்தருவது நமது பெயர்தான். இப்பொழுது நமது பெயரை மாற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால் நமக்கு கிடைத்த முதல் இயற்பெயர் என்பது தானாக அமைந்துவிடுவதில்லை. அதற்கு பின்னால் நிச்சயம் ஒரு காரணம் இருக்கிறது. ஏனெனில் நமது பெயர் நமது குணத்தையும், எதிர்காலத்தையும் பிரதிபலிப்பதாகும்.

    பொதுவாக பெயரின் முதல் எழுத்தை வைத்து உங்கள் பலத்தையும், பலவீனத்தையும் கண்டறியலாம் என்பார்கள். அது உண்மைதான், ஆனால் முதல் எழுத்தை போலவே உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தும் உங்கள் குணத்தையும், ஆளுமையையும் கூறக்கூடும். ஒருவேளை முதல் எழுத்தும், மூன்றாவது எழுத்தும் ஒரே எழுத்தாக இருந்தால் கூட அவை இருக்கும் இடத்தை பொறுத்து அதன் அர்த்தம் மாறுபடும். இந்த பதிவில் உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து உங்களை பற்றிக்கூறும் ரகசியம் என்னவென்று பார்க்கலாம்.

    மூன்றாம் எழுத்து A

    உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து A வாக இருந்தால் இயற்கையிலேயே நீங்கள் காதல் உணர்வு மிகுதியவர்களாக இருப்பீர்கள். அதுமட்டுமின்றி A என்பது ஆற்றலின் அடையாளமாகும், இவர்கள் துணிச்சலானவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருப்பார்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனம் இரண்டுமே உங்களுடைய தன்னம்பிக்கைதான். உங்களுடைய திறமையையும், சாகசத்தையும் எப்போதும் பிறருக்கு காண்பிக்க விரும்புவீர்கள்.

    மூன்றாம் எழுத்து B

    உங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து B ஆக இருந்தால் உங்களுடைய அடிப்படை குணம் பாசம் ஆகும். நீங்கள் எப்பொழுதும் உங்கள் அனைத்து உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவதில் வல்லவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களை எப்படி அக்கறையாகவும், பாதுகாப்பாகவும் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் சிலசமயம் உங்களுக்குள் எழும் பேராசை உங்களை பலவீனமாக்கும்.

    மூன்றாம் எழுத்து C

    C என்ற எழுத்து மூன்றாவது எழுத்தாக உள்ளவர்கள் இனிமையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களின் அப்பாவியான குணத்தாலும், இனிமையாக பழகுவதன் மூலமும் அனைவருடனும் எளிதில் நன்கு பழகக்கூடியவர்கள். அதேசமயம் நீங்கள் காயப்பட்டுவிட்டால் நிச்சயம் அதற்கு பழிவாங்காமல் இருக்கமாட்டார்கள். அனைத்திற்கும் மேலாக உங்களிடம் இருக்கும் ஒரு சிறந்த குணம் நேர்மை ஆகும்.

    மூன்றாம் எழுத்து D

    D எழுத்தானது சமநிலை, கடின உழைப்பு மற்றும் பாதுகாப்பை குறிக்கும். இவர்கள் எப்பொழுதும் இருக்கும் இடத்தை சுத்தமாகவும், பொருட்களை அதற்குண்டான இடத்தில் வைப்பதிலும் அக்கறை செலுத்துவார்கள். இவர்கள் இயற்கையிலேயே தலைமைப்பண்பு மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைவராலும் விரும்பப்படுபவர்களாக இருப்பார்கள். உங்களின் எதிர்மறை குணம் என்பது பிடிவாதம் ஆகும்.



    மூன்றாம் எழுத்து E

    பெயரில் மூன்றாம் எழுத்தை E ஆக வைத்திருப்பவர்கள் இயற்கையிலேயே கருணையும், மென்மையான குணமும் கொண்டவர்கள். எந்தவித சிக்கலையும் எளிதாக தீர்க்கக்கூடியவர்கள், விரைவான சிந்தனையாளர்கள், வாழ்க்கை மீதான ஆழமான எண்ணம் கொண்டவர்கள். உங்களுடைய வசீகரிக்கும் குணம் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கு நண்பர்களை பெற்றுத்தரும். ஆனால் காதல் உறவுகளில் உங்கள் மீது நம்பிக்கை வருவது கடினம்.

    மூன்றாம் எழுத்து F

    இவர்கள் குடும்பத்தின் மீது அதிக அன்பு கொண்டவர்களாகவும், பொறுப்பானவர்களாகவும் இருப்பார்கள். காதல் உறவுகளில் இறுதிவரை நேர்மையாக இருப்பார்கள். ஆனால் பழிவாங்கும் எண்ணமும், வேஷமிடும் குணமும் இவர்களுக்கு அதிகம்.

    மூன்றாம் எழுத்து G

    இவர்கள் தனக்கென ஒரு தனிவழியில் வாழ்பவர்கள், அதீத கற்பனைதிறன் மிக்கவர்கள். நீங்கள் அரிவுரையை வெறுப்பவர்கள், உங்கள் எண்ணம்போல வாழ்க்கையை வாழ நினைப்பீர்கள். திறமையாலும், புத்திசாலித்தனத்தாலும் ஆசீர்வதிக்கப்பட்ட உங்களின் பலவீனம் சந்தேகம் ஆகும்.

    மூன்றாம் எழுத்து H

    இவர்கள் வாழ்க்கையை எப்பொழுதும் எதார்த்தமாக பார்ப்பார்கள், அதேசமயம் பணவிஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். அடிப்படையிலேயே இருக்கும் வியாபார குணத்தால் இவர்கள் எளிதில் தலைவர்களாக வரமுடியும். தன் இலட்சியத்தை அடைய எந்த எல்லைக்கும் செல்வார்கள். இவர்கள் உறவுகளில் அதிக பொறாமை படுவார்கள்.

    மூன்றாம் எழுத்து I

    இவர்கள் இயற்கையிலேயே உதவும் குணம் கொண்ட தூய ஆத்மாக்கள். மற்றவர்களை சார்ந்து இருந்தாலும் ஆழமாக யோசிக்க கூடியவர்கள், இல்லாதவர்களுக்கு யோசிக்காமல் உதவக்கூடியவர்கள்.இவர்களின் பலவீனமும் இதுதான் பலசமயங்களில் எளிதில் ஏமாறக்கூடியவர்கள்.

    மூன்றாம் எழுத்து J


    சுறுசுறுப்பும், ஆர்வமும் இவர்களின் கூட பிறந்த குணங்களாகும். வாழ்க்கையில் தனக்கு என்ன வேண்டும், என்ன வேண்டாம் என்று சிந்தித்து ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழக்கூடியவர்கள். இவர்களை புரிந்து கொள்ளும் வாழ்க்கை துணை அமைந்தால் இவர்களின் வாழ்க்கை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்.



    மூன்றாம் எழுத்து K

    மிகவும் இரகசியமான குணம் கொண்ட இவர்கள் மற்றவர்களின் கவனம் எப்பொழுதும் தன் மீதே இருக்கவேண்டுமென்று நினைப்பார்கள். இதனால் சிலசமயம் மற்றவர்களுக்கு எரிச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் இவர்கள் எப்பொழுதும் சமநிலைக்கும், மகிழ்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். உறவுகளில் விளையாட்டுத்தனமாக இருப்பது இவர்களுக்கு பிடிக்காது.

    மூன்றாம் எழுத்து L

    இவர்களுக்கு வாழ்க்கை மீது எப்பொழுதும் ஒரு வித்தியாசமான அதேசமயம் தனித்துவமான கண்ணோட்டம் இருக்கும். இவர்களின் துணைதான் இவர்களுக்கு வாழ்க்கையிலே மிகவும் முக்கியமானவர்கள். இவர்கள் கூடவே பிறந்த சுட்டித்தனம் இவர்களை அனைவரும் விரும்புபவர்களாக வைத்திருக்கும்.

    மூன்றாம் எழுத்து M

    இவர்கள் எப்பொழுதும் நேர்மையாகவும், கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் வேலைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை கவர்வதற்கு என எதையும் செய்யமாட்டார்கள், தன் வாழ்க்கையை தன்னுடைய விதிகளின் படி வாழ்வார்கள். இவர்களின் பிடிவாதமும், முன்கோபமும்தான் இவர்களின் பலவீனம்.

    மூன்றாம் எழுத்து N

    N எழுத்து மூன்றாவதாக உள்ளவர்கள் எப்பொழுதும் தான் செய்யும் காரியங்கள் முழுமையானதாக இருக்கவேண்டுமென்று ஆசைப்படுவார்கள். இவர்கள் இயற்கையிலேயே அதிகமாக பேசும் சுபாவம் கொண்டவர்கள். மற்றவர்களின் வாழ்க்கை முறையை பின்பற்றாமல் தனக்கென ஒரு வழியை உருவாக்குபவர்கள்.

    மூன்றாம் எழுத்து O

    இரக்கமும், பிரியமும் கொண்டவர்கள் இவர்கள். இவர்களை கண்ணைமூடிக்கொண்டு நம்பலாம். தனக்கான பாதையை தானே கண்டறிந்து அதனை வடிவமைத்து அதில் செல்லக்கூடியவர்கள். மற்றவர்களின் முயற்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள்.

    மூன்றாம் எழுத்து P

    இவர்கள் வாழ்க்கையின் மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள் அனைத்திலும் தான்தான் முன்னிலையில் இருக்கவேண்டுமென்று நினைப்பவர்கள். தன்னை சுற்றி இருப்பவர்களை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமென நினைப்பவர்கள். அதற்காக எந்தவித வேடிக்கையான செயலையும் செய்ய தயங்கமாட்டார்கள்.



    மூன்றாம் எழுத்து Q

    இவர்களை சுற்றி எப்பொழுதும் ஒரு மர்மம் இருக்கும். இவர்கள் மற்றவர்கள் பின்பற்றும் எந்தவொரு நடைமுறையையும் பின்பற்றமாட்டார்கள். நேர்மையான இவர்கள் எப்போதும் சிறந்த நண்பர்களாகவும், அறிவுரையாளர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் தங்கள் சுயத்தை இழக்க விரும்பமாட்டார்கள். இதுவே சிலசமயம் பலவீனமாகவும் அமையும்.

    மூன்றாம் எழுத்து R

    இவர்கள் அதிகளவு ஞானத்தையும், உள்ளுணர்வையும் கொண்டவர்கள். மற்றவர்களின் மனக்காயங்களை குணப்படுத்துவதற்கெனவே பிறந்தவர்கள். அமைதியை விரும்பும் உங்கள் குணமும், வாழ்க்கையை எதார்த்தமாக பார்க்கும் குணமும் அனைவரையும் விரும்பவைக்கும். இவர்கள் எளிதில் கோபப்படக்கூடியவர்கள்.

    மூன்றாம் எழுத்து S

    இவர்களை போல சிறந்த நேர்மையானவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை, ஆனால் அவர்களுக்கு காதல் உணர்வு கொஞ்சம் குறைவுதான். இயற்கையாகவே தலைமை குணம் கொண்ட இவர்களின் வசீகரம் எப்பொழுதும் இவர்களை சுற்றி ஆட்களை இருக்க வைக்கும். தங்களுக்கான இலட்சியங்களை எப்பொழுதும் உயர்ந்ததாகவே வைப்பார்கள். உண்மையான இரக்கமும், அரவணைக்கும் குணமும் இவர்கள் கூடவே பிறந்தது.

    மூன்றாம் எழுத்து T

    இராஜதந்திர குணம் அதிகமிக்கவர்கள் இவர்கள், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க கூடியவர்கள். அதிர்ஷ்டத்தை விட உழைப்பை அதிகம் நம்புபவர்கள். உங்களின் வெகுளித்தனமும், உதவும் குணமும் அனைவரும் உங்களை விரும்ப வைக்கும். அவர்கள் விரும்பும்படி செயல்கள் நடைபெறாவிட்டால் இவர்கள் எளிதில் மனதளவில் பாதிக்கப்படுவார்கள்.

    மூன்றாம் எழுத்து U

    இவர்கள் எப்பொழுதும் வசதியான ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார்கள். வலிமையான உள்ளுணர்வு மற்றும் மனநிலையை கொண்ட இவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். எப்பொழுதும் புதிய யோசனைகளை செய்ய தயங்கமாட்டார்கள். இவர்களின் ஈகோ காரணமானாக அடிக்கடி தங்கள் உடனிருப்பவர்களை காயப்படுத்துவார்கள்.

    மூன்றாம் எழுத்து V


    இவர்களை போன்றவர்களை பார்ப்பது மிகவும் அரிது. அந்த அளவிற்கு இவர்கள் உண்மையாக இருப்பார்கள். இவர்களின் சிறப்பே இவர்களின் அதீதமான நினைவாற்றல்தான். உறவில் இவர்கள் எப்பொழுதும் பொறாமைபடுபவர்களாக இருப்பார்கள். இவர்களின் அதீதமான அர்பணிப்பே இவர்களுக்கு சிலசமயம் பலவீனமாக அமையும்.



    மூன்றாம் எழுத்து W

    இவர்கள் இயற்கை மீது அதிக காதல் கொண்டவர்கள். உறவுகளில் அடிக்கடி நீங்கள் சிக்கல்களை சந்திப்பீர்கள், அதனை சரிசெய்ய உங்களுக்கு நீண்ட காலம் தேவைப்படும். உங்களின் செயல்கள் சிலசமயம் மற்றவர்களை அதிக வெறுப்படையச்செய்யும்.

    மூன்றாம் எழுத்து X

    இவர்கள் எந்தவொரு உறவுகளிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் இருக்க விரும்பமாட்டார்கள். ஆனால் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புவார்கள். இவர்களின் பேராசைதான் இவர்களின் மிகப்பெயய பலவீனம்.

    மூன்றாம் எழுத்து Y

    இவர்கள் தங்களின் சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். இவர்கள் சமூகத்தில் தங்கள் நிலை குறித்து அதிக கவலைப்படுவார்கள். இவர்கள் தங்கள் இடத்தில் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள், மற்றவர்களின் இடம் இவர்களுக்கு ஏற்றதல்ல.

    மூன்றாம் எழுத்து Z


    இவர்கல் மிகவும் தன்னம்பிக்கை மிகுந்தவர்கள் தன்னால் எதையும் செய்ய முடியும் என்று நினைப்பவர்கள். இலட்சியத்தை பற்றியே எப்போதும் நினைத்துக்கொண்டிருப்பார்கள், சிறந்த முதலாளிகளாக இருக்க இவர்களுக்கு நிறைய வாய்ப்புள்ளது. மற்றவர்களிடம் இருந்து எப்படி வேலை வாங்கவேண்டும் என்று நன்கு தெரிந்தவர்கள்.
    ×