என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் சக உயிரினத்திடம் அன்புகாட்ட வேண்டும்.
    • உலகிலுள்ள உறவின்முறைகள் மற்றும் உணர்வின்முறைச் சொந்தங்கள் அனைத்திலும் உயர்ந்தது நட்பு.

    நல்ல நண்பர்களாலேயே உலகம் இன்னும் நலமாக இருக்கிறது என்பதை நம்பும் இனிய நண்பர்களே! வணக்கம்.

    "நட்பு" என்னும் மூன்றெழுத்துச் சொல்லுக்கு இணையாக, அன்பு, பண்பு, பாசம், கருணை, அறம், உறவு, காதல், ஈரம், வீரம், அறிவு, திறமை, உரிமை, எளிமை, இனிமை, புதுமை, நன்மை, என்று தமிழில் எத்தனை மூன்றெழுத்துச் சொற்களைக் கொண்டுவந்து வைத்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி உயரச் சிகரத்தில் நிற்கக் கூடிய உன்னத உணர்வு 'நட்பு" ஒன்றே!.

    "காதல்" என்னும் உணர்வை, நட்புக்குக் கொஞ்சம் நெருங்கிய உணர்வாகச் சொல்லலாம்; அதனால்தான் நமது சங்கத்தமிழில் நட்பு என்பது சில இடங்களில் காதலுக்கு மாற்றுச் சொல்லாகவும் இடம்பெற்றிருக்கிறது. ஆயினும் காதலுக்கும் மேம்பட்ட புனிதத்தன்மை உடையது நட்பு.

    நட்புக்கு எந்தக் கட்டுப்பாட்டு விதிமுறைகளும் கிடையாது. யாரும் எவர் மீதும் நட்புக்கொள்ளலாம்; காதலும் அப்படித்தான் என்றாலும் காதல் மலர்வதற்கு அடிப்படைத் தேவை ஒருவர் பெண்ணாகவும் ஒருவர் ஆணாகவும் இருக்க வேண்டும். ஆனால் நட்பு என்பது எல்லாத் தடைகளையும் தாண்டி, காற்றைப்போல எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றது.

    நட்பிற்கு ஆண் பெண் பேதம் கிடையாது; வயதில் இளையவர் மூத்தவர் பேதம் கிடையாது; வசதியில் ஏழை பணக்காரர் பேதம் கிடையாது; தோலில் கறுப்பு வெள்ளை நிற பேதம் கிடையாது; நகர கிராம வாழிட பேதம் கிடையாது; சாதி மத, இன, மொழி பேதம் கிடையாது; படித்தவர் படிக்காதவர் பேதம் கிடையாது; முட்டாள் புத்திசாலி பேதம் கிடையாது; தலைவர் தொண்டர் பேதம் கிடையாது; ஏன்? கடவுள் பக்தர் பேதம் கூடக் கிடையாது.

    நாயன்மார்களில் ஒருவராகிய சுந்தரர் என்னும் சுந்தரமூர்த்தி சுவாமிகள், சிவனாகிய இறைவனுடன் நட்பு என்னும் தோழமை நெறி மேற்கொண்டே பக்திப் பயிர் தழைக்கச் செய்தவர். ஏழைப் புலவனாகிய பிசிராந்தையாரும், சோழப் பேரரசனாகிய கோப்பெருஞ் சோழனும் காணாமலேயே நட்புப் பூண்டு காவிய உலகில் நிலைத்த புகழோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவ்வையார் அதியமான், பாரி கபிலர் என்று இலக்கிய உலகில் வாழும் நட்பிற் சிறந்த பெருமக்களால் நட்பின் பேதமிலாப் பெருமை மேலும்மேலும் புகழ்விளங்கத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

    மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் சக உயிரினத்திடம் அன்புகாட்ட வேண்டும்; பிற உயிரினங்கள் என்னும்போது, புல்பூண்டு தொடங்கி, வள்ளல்பெருமான் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியதுபோல அனைத்து ஜீவராசிகள் மீதும் உயிர் இரக்கத்தோடு அன்பு காட்ட வேண்டும்.

    எல்லா உயிரினங்கள் மீதும் என்பது பரந்து விரிந்து பலதிறப்பட்டதாகத் தோன்றினால், மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் சக மனிதன்மீதாவது அன்பு காட்ட வேண்டும்.

    அன்பு காட்டப் பல நிலைகள் மனிதர்களுக்குள் இயல்பாகவே இருக்கின்றன; ஒரு குடும்பத்தில் பிறந்தோர், அப்பா, அம்மா, மகன், மகள், அண்ணன், தம்பி, அக்காள், தங்கை எனும் உறவுமுறைகளால் அன்புகாட்டுவது இயல்பு. இக்குடும்ப நிலையே குடிமுறையாக மாறும்போது, தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சித்தி, அண்ணி, மாமா, அத்தை, தாய்மாமன், மைத்துனர், கொழுந்தனார், கொழுந்தியாள், நாத்தனார், மாமியார், மாமனார், மருமகள், மருமகன், பேரன், பேத்தி எனக் கிளைவிட்ட விழுதுவிட்ட உறவுநிலைகளில் அன்புப் பெருக்கெடுக்கிறது.

    குடிமுறைக்கு அப்பால், இனம், ஊர், சாதி, மதம், மொழி, தொழில் ஆகிய நிலைகளிலும் தொடர்புமுறைகள் பெருகும்போது அதற்கேற்ற இணக்கத்தோடு மனிதர்கள் அன்பு காட்டவும் உறவைப் பேணவும் முற்படுகின்றனர்.

    சுந்தர ஆவுடையப்பன்

    சுந்தர ஆவுடையப்பன்

    இந்த வகையில் குருதித் தொடர்பாலும் வாழிடத் தொடர்பாலும் மனிதர்கள் அன்புடன் இணங்கி வாழும் உறவுநிலைகள் வலுப்பெறுகின்றன. ஆயினும், இந்த வகையான நேர்நிலைத் தொடர்புக் கோடுகளைத் தாண்டி, குறுக்கும் நெடுக்குமாக, யார் எந்த நிலையிலும், எவரோடும் எப்போதும், எவ்விடத்தும் கொள்ளுவதே நட்பு என்னும் உணர்வுநிலை ஆகும்.

    மனிதர்களுக்கு இடையேயான உறவுநிலை உடம்பு ரத்தம் சதை நிலையிலானது; ஆனால் நட்பு என்பதோ உணர்வு நிலையில் உயிரோடு இயைந்த உன்னதத் தன்மையது. அதனால்தான் திருவள்ளுவரும், "உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்!"என்கிறார். ஆம்! மனிதர்களுக்கு இடையிலான உறவு உடம்பு சார்ந்தது என்றால், நட்பு என்பது உடம்பைத் தாண்டிய உயிரை அடிப்படையாகக் கொண்ட உணர்வு.

    உலகிலுள்ள உறவின்முறைகள் மற்றும் உணர்வின்முறைச் சொந்தங்கள் அனைத்திலும் உயர்ந்தது நட்பு. அதனால்தான் உலகர் அனைவருக்குமான மறைதந்த திருவள்ளுவர் நட்புக்கு என 4 அதிகாரங்கள் தந்துள்ளார்; நட்பு, தீ நட்பு, கூடா நட்பு, நட்பாராய்தல், பழைமை என்பவை அவை.

    நட்பு என்பது மனிதர்கள் கூடிமகிழ்ந்து சிரித்துக், களித்துக் கொண்டாடுவதற்கு மட்டுமன்று; தேவைப்பட்டால் நண்பர்கள் நெறி பிறழ்ந்து செல்லும் தருணங்களில் அவர்களை உணர்த்தித் திருத்தி வழிக்குக் கொண்டுவரும் நியாயக் கடமைகளும் உண்டு. நண்பர்களின் உணர்வு அலைவரிசை ஒன்றியதாகவே இருப்பதால், ஒருவருக்குத் துன்பம் என்றால், மற்றவர் கூறாமலேயே ஓடிச் சென்று உதவிநிற்பர். நண்பனுக்குத் தவிர்க்க முடியாத துன்பம் என்றால், அத்துன்பத்தைத் தாமும் பங்குபோட்டுக் கொண்டு அனுபவிப்பதே உண்மை நட்பு.

    நட்பு என்பது உயிர்சார்ந்த உணர்வு என்பதால், முகத்தளவில் சிரித்து உடலளவில் வெளிக்காட்டுவதல்ல அது; இதயத்தின் ஆழத்தில் இருந்து மகிழ்வதும் இடையறவு படாமல் அதனைப் பாதுகாப்பதுமே நட்பு. அதனால்தான் நட்புக்கொள்வதற்குமுன் தீயநட்பு எது? கூடா நட்பு எது? என நட்பை ஆராய்ந்து கொள்ள வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

    சொல்வது ஒன்று செய்வது வேறாகச் சிலர் செயல்படுவர்; சிலர் முகமெல்லாம் சிரித்து இனிப்பாகப் பேசி, நெஞ்சமெல்லாம் வஞ்சம் கொண்ட நஞ்சாக இருப்பர்; சிலர் வில்லைப்போல வளைந்து நெளிந்து பணிவாக வணக்கம் செய்துவிட்டு, அதிலிருந்து புறப்படும் கூரிய அம்புபோலத் தீமைகள் செய்வதற்கு அஞ்ச மாட்டர்; கும்பிடும் கரங்களுக்குள்ளும் கொடிய குறுவாளை ஒளித்து வைத்திருக்கும் கொடியவர்களும் உண்டு ; காரியம் ஆகும்வரை நண்பரைப்போல நடித்துக், காரியம் முடிந்தவுடன் கழன்றுகொள்ளும் கயவர்களும் உண்டு.

    இப்படிப்பட்டவர்களை இனம்கண்டு ஒதுக்கிப் பண்புடையவர்களோடு நட்புக்கொள்ள வேண்டும். நம் நண்பர்களே நமது நற்செயல்களுக்கும் தீய செயல்களுக்கும் வெளிப்படையான சான்றுகள். நல்ல நூல்களைப் படிக்கப் படிக்க நமக்குள் நயமான சிந்தனைகள் பெருகுவதுபோல நல்ல நண்பர்களோடு பழகப் பழக ஒழுக்கமிகு பண்புகள் வளரும். பழகத் தொடங்கிய பின் நண்பர்கள் எல்லாரும் சமம்; அவர்களுக்குள் ஒப்பீடுகள் தோன்றினால் நட்புப் பழுதுபட்டுப் போகும்

    ஒரு காட்டில் ஒரு யானைக்குத் திடீரென நண்பர்களை உருவாக்கிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்ற ஆசை தோன்றியது. நண்பர்களைத் தேடிக் காட்டிற்குள் சென்றது. முதலில் ஒரு குரங்கை அது பார்த்தது;" நாம் இருவரும் நண்பர்களாக இருப்போமா? என் நட்பை நீ ஏற்றுக் கொள்கிறாயா?" எனக் கேட்டது. உட்கார்ந்திருந்த கிளையில் இருந்து அடுத்த கிளைக்குத் தாவி அமர்ந்துகொண்ட குரங்கு சொன்னது," யானையே! நீ உருவத்தில் மிகப் பெரியதாக இருக்கிறாய்!. என்னோடு நண்பனாக இருந்தால் மரத்துக்கு மரம், கிளைக்குக் கிளை தாவ வேண்டும்.!. அது உன்னால் இயலாது; அதனால் நட்புக் கொள்ள முடியாது" என்றது.

    யானை அடுத்து ஒரு முயலைப் பார்த்தது;" நண்பனாக என்னை ஏற்றுக்கொள்வாயா?" என்று கேட்டது. "யானையே! யானையே! என்னைவிட உருவத்தில் பெரியவனாக நீ இருக்கிறாய்! என்னோடு ஓடிப்பிடித்து விளையாடவும் உன்னால் முடியாது; என்னுடைய வளைக்குள்ளும் வந்து விளையாட உன் உருவம் பெரியதடையாக இருக்கும்; அதனால் நட்புக்கொள்ள முடியாது" என்று முயலும் சொல்லி விட்டது.

    அடுத்துக், காட்டில் ஒரு குளத்தங் கரையோரமாக ஒரு தவளையைப் பார்த்து அதனிடம் நட்பு வேண்டுகோள் விடுத்தது யானை. தவளையோ, " உருவத்தில் நீ பெரிய அளவில் இருக்கிறாய்!; என்னைப் போல மளிச்! மளிச்! என்று தாவிக் குதித்துச் செல்ல உன் கனத்த உடம்பால் முடியாது; அதனால் நட்புக்கொள்ள உகந்த அளவு உனக்குக் கிடையாது!" என்று மறுதலித்து விட்டது.

    அதன் பின்னர் யானை, கரடி, நரி எனச் சில மிருகங்களிடமும் நட்பு வேண்டுகை வைத்தது; ஆயினும் அவையெல்லாம் யானை பெரியதாக இருக்கிறது என்கிற ஒற்றைக் காரணத்தைச் சொல்லி நட்பை ஏற்க மறுத்து விட்டன.

    சில நாட்கள் கழிந்தன. ஒருநாள் காலையில் காட்டில் உள்ள விலங்குகள் எல்லாம் அச்சத்துடன் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தன. ஓடிக்கொண்டிருந்த ஒரு கரடியைப் பார்த்து என்ன விசயம்? என யானை கேட்டது. அந்தக் காட்டிலுள்ள புலியொன்று கடும் பசியோடு வேட்டைக்குக் கிளம்பி வந்து கொண்டிருப்பதாகவும், கண்ணில் அகப்படும் எந்த விலங்காக இருந்தாலும் அது கொன்று உண்டுவிடும் என்றும் கரடி கூறி ஓடியது .

    யானை அந்தப் புலியைத் தேடிக் காட்டுக்குள் சென்றது. பசியொரு பக்கம், எந்த மிருகமும் சிக்காத கோபம் ஒருபக்கமுமாகப் புலி கர்ஜனை செய்துகொண்டே வந்து கொண்டிருந்தது . வழி மறித்த யானை, " புலியே! புலியே! திரும்பிப் போய்விடு! அடுத்த உயிர்களை வேட்டையாடுவது பாவம்!" என்று அறிவுரை கூறியது. " யானையே! தடுக்காதே! போய்விடு! இல்லையென்றால் உன்னையே கொன்று விடுவேன்!" என்று புலி முழக்கமிட்டது.

    புலியைத் திருத்த நினைத்த யானை, தனது பெருத்த உருவத்தைத் திருப்பிவைத்துக் கொண்டு, தனது பின்னங்கால்களால் புலியை ஒரு எத்து எத்தியது!. அவ்வளவுதான்; புலி அந்தக் காட்டை விட்டே ஓடிவிட்டது. மகிழ்ந்த யானை ," புலி காட்டை விட்டே ஓடிவிட்டது!. எல்லாரும் வாருங்கள்" என்று அழைத்தது. எல்லா விலங்கினங்களும் யானை இருந்த இடத்திற்கு வந்து நின்றன;" இனி இங்குள்ள எங்கள் எல்லாருக்கும் நீ நண்பன்!" என்றன. "என்னுடைய உடல் அளவு பெரியதாக இருக்கிறதே!" என்று யானை கேட்டது. "நட்பிற்கு ஏது அளவீடு!?" என்று அசரீரியாய் வானம் பதில் ஒலித்தது.

    தற்போது, நவீன சமூக ஊடகக் காலத்தில் உலகத்தின் எந்த மூலையில் இருப்பவரோடும் முகநூல் வழியாகவும், வாட்ஸ் அப் வழியாகவும் அபரிமிதமாக நட்புப் பெருகி வழிந்து கொண்டிருக்கின்றன. என்றாலும் அதற்கிணையான கூடாநட்புச் செயல்பாடுகளும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

    நட்பாராய்தலே நட்பின் முதல் படியாக இருக்கட்டும்.

    தொடர்புக்கு- 9443190098

    • உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 50 சதவீதம் தமிழ்நாடு பயன்படுத்துகிறது.
    • சின்னஞ்சிறு தொழில்கள் உருவாகின்றன. பெரிய தொழிற்சாலைகள் அமைவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

    ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பல காரணிகள் அடிப்படையாக அமைந்தாலும் சில முக்கியமான காரணிகள் அவசியமாக தேவைப்படுகின்றன.

    அரசியல், பொருளாதாரம், சமூகம், தொழில்கள், தொழில்நுட்பம், என பல காரணிகள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

    பல ஆண்டுகளாக தரிசு நிலங்களாகவும், தொழில் வளர்ச்சியற்ற பகுதியாகவும், கருதப்பட்ட தென் தமிழகம், தற்போது நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் மேம்பாட்டுக்கும் உறுதுணையாய் அமைகிறது. கடந்த சில ஆண்டுகளாக, தென் தமிழகத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    குறிப்பாக, மின்சார தேவைக்கு அதிகமாக பயன்படும் கூடங்குளம் அணுமின் நிலையம், விஜயநாராயணம் ஐ என் எஸ் கட்டபொம்மன், உடன்குடி அனல் மின் நிலையம், குலசேகரப்பட்டணம் ஐ.எஸ்.ஆர்.ஓ ஸ்பேஸ் போர்ட் போன்றவை தென் தமிழக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    இந்திய அரசும் சோவியத் அரசும் இணைந்து உருவாக்கிய அணுமின் நிலையம் கூடங்குளம் அணுமின் நிலையம். 1988-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் நாள் இந்த அணுமின் நிலையம் உற்பத்திக்கான உடன்படிக்கை கையெழுத்தானது. அப்போதைய இந்திய பிரதம மந்திரி ராஜீவ் காந்தி மற்றும் சோவியத் நாட்டின் தலைமை பொறுப்பில் இருந்த மிக்ஹைல் கோர்பச்சேவ் ஆகியோர் இணைந்து இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்கள்.

    இந்தியாவில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் மிகப்பெரியது திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைந்துள்ள அணு மின் நிலையம் ஆகும்.


    இந்து அணுமின் நிலையத்தின் கட்டுமான பணிகள் 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கப்பட்டாலும் பல்வேறு எதிர்ப்புகளால் இதன் கட்டுமான பணிகள் நிறைவேற தாமதமானது. இருந்த போதும் 2013-ம் ஆண்டு அக்டோபர் 22ஆம் நாள் யூனிட் 1 ஆரம்பிக்கப்பட்டு ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

    ரஷிய நாட்டோடு இணைந்து தொடங்கப்பட்ட இந்த அணுமின் நிலையம் 2015-ம் ஆண்டு யூனிட் 2 செயல்பட ஆரம்பித்தது. 2017ஆம் ஆண்டு யூனிட் 3மற்றும் யூனிட் 4 மின் உற்பத்தி அலகுகள் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் செயல்பட ஆரம்பித்தன. தற்போது யூனிட் 5 மின் உற்பத்தி அலகு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. 2026-ம் ஆண்டு டிசம்பர் மாதம் யூனிட்-5 மின் உற்பத்தி அலகு செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 60 ஆண்டுகள் தடையில்லா மின்சாரத்தை வழங்கும் வசதி கூடங்குளம் அணு மின் நிலையம் மூலம வழங்கப்படுகிறது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 50 சதவீதம் தமிழ்நாடு பயன்படுத்துகிறது. 35 சதவீத மின்சாரம் அருகில் உள்ள மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள 15% மின்சாரம் மத்திய அரசு தேவைகளுக்காகவும், அவசர தேவைகளுக்காகவும் பயன்படுத்தும் விதத்தில் மின்சார பங்கீடு செய்யப்படுகிறது. இதேபோல் யூனிட் 6 மின் உற்பத்தி கட்டுமான பணிகள் 2027-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவு பெற உள்ளது.

    ஐ என் எஸ் கட்டபொம்மன்: திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் என்னும் ஊரில் சுமார் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் ஐஎன்எஸ் கட்டபொம்மன் என்னும் பெயர் கொண்ட விஎல்எப் ட்ரான்ஸ்மிஷன் ஃபெசிலிட்டி இந்திய கப்பற்படையால் உருவாக்கப்பட்டுள்ளது.

    1984-ஆம் ஆண்டு ஐஎன்எஸ் கட்டபொம்மன் என்னும் அமைப்பின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டாலும் 1996-ம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட ஆரம்பித்தது. இந்திய தேசிய சுதந்திரத்திற்காக பாடுபட்ட மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பெயரில் இது அமைக்கப்பட்டுள்ளது.

    ரஷியாவுக்கு அடுத்ததாக இந்தியாவில் தொடங்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பு இது ஆகும்.

    உடன்குடி அனல் மின் நிலையம்: 2012-ஆம் ஆண்டு உடன்குடி பவர் கார்ப்பரேஷன் என்னும் அமைப்பு தொடங்கப்பட்டது. பின்னர் 2018-ம் ஆண்டு இந்த அனல் மின்சார உற்பத்தி திட்டம் நடைமுறைப்படுத்துவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.

    நெல்லை கவிநேசன்

    நெல்லை கவிநேசன்

    2019-ம் ஆண்டு பணிகள் நடைபெறும் போதே ஏற்பட்ட மழை வெள்ளத்தால் கட்டுமான பணிகள் தாமதமானது. தற்போது மிக வேகமாக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

    நிலக்கரியின் துணையோடு இயங்க வசதியாக இந்த குலசேகரபட்டினம் அனல் மின் நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் கடற்கரையில் நிலக்கரியை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த அனல் மின் நிலையம் தமிழ்நாட்டின் மின்சார தேவையை பூர்த்தி செய்யவும் ரெயில்வே போக்குவரத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தப்பட்ட சாலை வசதிகளை உருவாக்கவும் மிகவும் உதவியாய் அமைகிறது.

    இந்தியாவில் ஐ.எஸ்.ஆர்.ஓ. எனப்படும் இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன் இரண்டாவதாக உருவாக்கிய ஸ்பேஸ் போர்ட் ஆகும். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சுமார் 2350 ஏக்கர் நிலத்தில் இந்த ஸ்பேஸ் போர்ட் உருவாக்கப்படுகிறது.

    ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டர் 1971-ம் ஆண்டு இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன் ஆல் உருவாக்கப்பட்டது.


    நாட்டின் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட இந்த அமைப்பு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான செயல் திட்டங்களை வகுத்து வங்காள விரிகுடாவில் சிறந்த பாதுகாப்பை உருவாக்கியது.

    கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ம் நாள் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பாதுகாப்பை அதிகப்படுத்த தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள குலசேகரப்பட்டினம், மாதவன் குறிச்சி, பள்ளக்குறிச்சி, படுக்கப்பத்து போன்ற கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 2,223 ஏக்கர் பரப்பளவில் ஐ.எஸ்.ஆர்.ஓ. தொடங்க அடிக்கல் நாட்டினார்.

    ரேடார் லாஞ்சஸ் மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் ஆகிய வசதிகளோடு ஐ.எஸ்.ஆர்.ஓ. புதிதாக ரோகினி சவுண்டிங் ராக்கெட் ஆர் ஹெச் 200 என்னும் புதிய பாதுகாப்பு வசதியை உருவாக்கியுள்ளது.

    ஸ்பேஸ் போர்ட் என அழைக்கப்படும் முதல் விமானம் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதிஅனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    ஐ.எஸ்.ஆர்.ஓ. என அழைக்கப்படும் இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன் சாட்டிலைட்களை உருவாக்கி அதனை விண்ணுக்கு அனுப்பி இந்த மண்ணுலகம் செழித்து வாழ பல்வேறு வகையில் உதவி வருகிறது.

    ஐ.எஸ்.ஆர்.ஓ. தொழில்நுட்பம் தற்போது குறிப்பாக வேளாண்மை வளர்ச்சிக்கு மிகவும் உதவியாய் அமைகிறது.

    வானிலை முன்னறிவிப்பின் மூலம் வேளாண் பயிர்களை சரியான காலத்தில் பயிரிடவும் அதன் மூலம் அதிக பலன் பெறவும் உதவுகிறது. கோதுமை, சணல், பருத்தி, நெல், கரும்பு, பயறு வகைகள் போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிட உதவும் சரியான காலத்தை திட்டமிட்டு முன்கூட்டியே வேளாண் விவசாயிகளுக்கு கணித்துச் சொல்லுகிறது.

    ரெயில்வே துறையிலும் கடந்த சில ஆண்டுகளாக ஸ்பேஸ் டெக்னாலஜி பெருமளவில் உதவி வருகிறது. ரெயில் தண்டவாளங்களில் ஏற்படும் தடைகளை முன்கூட்டியே கணித்து அறிவிக்கிறது. ஆளில்லா லெவல் கிராஸிங் விபத்துகளைத் தடுப்பதற்கு இது உதவுகிறது.

    சாட்டிலைட் இமேஜிங் மூலம் வெளிநாட்டவர்களுடைய ஆக்கிரமிப்பை தடுக்கவும் நமது இந்திய நாட்டின் எல்லைகளை கண்காணித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தவும் இது உதவுகிறது. இன்று நாம் அனுபவிக்கும் பல்வேறு வசதிகள் ஐ.எஸ்.ஆர்.ஓ. அனுப்பிய சேட்டிலைட் மூலம் தான் நமக்கு கிடைத்திருக்கிறது.

    இன்டர்நெட் வசதிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உடனுக்குடன் பார்க்கும் வசதி, செல்போன் இயங்கும் வசதி, போன்ற மனித உலகிற்கு பயன் தரும் வசதிகள் இன்டர்நெட் மூலம் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    டெலி எஜுகேஷன், டெலி ஹெல்த் கேர், லேண்ட் அண்ட் வாட்டர் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், இண்டராக்டிவ் அட்வைசரி சர்வீசஸ், டெல பிஷ்ஷரி, இ கவர்னன்ஸ் சர்வீசஸ், வெதர் சர்வீசஸ், டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் சப்போர்ட், ரிமோட் சன்சிங் அப்ளிகேஷன்ஸ் போன்ற பல்வேறு சேவைகளை சேட்டிலைட் மூலம் பெறுவதற்கு ஐ.எஸ்.ஆர்.ஓ. துணை நிற்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் பாதுகாப்புக்கு அடித்தளமாக ஐ.எஸ்.ஆர்.ஓ. அமைகிறது. கடல் வழியிலும், வான் வெளியிலும், பாதுகாப்பை பலப்படுத்த குலசேகரப்பட்டினத்தில் இந்த ஐ.எஸ்.ஆர்.ஓ. நிறுவப்பட்டுள்ளது.

    இதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகமாக உருவாக்கப்படுகிறது. ஐ.எஸ்.ஆர்.ஒ.வை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டு நகர்ப்புறத்திற்கு ஈடாக அந்த பகுதி வளர்ச்சி பெறுகிறது. போக்குவரத்து வசதிகள் அதிகப்படுத்தப்படுகின்றன.

    இசிஆர் என அழைக்கப்படும் ஈஸ்ட் கோஸ்ட் ரோடு கிழக்கு கடற்கரை சாலையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை அமைக்கப்படும். இதனால் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப் பட்டு குறைந்த பயண நேரத்தில் பயணம் செய்யும் வசதி உருவாக்கப்படும்.

    அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் பல்வேறு வேலை வாய்ப்புகள் உருவாவதால், குலசேகரப்பட்டினம் சுற்றியுள்ள பகுதிகள் வளர்ச்சி பெற்று வருகின்றன. நிலங்களின் விலைமதிப்பு அதிகமாகின்றது. சின்னஞ்சிறு தொழில்கள் உருவாகின்றன. பெரிய தொழிற்சாலைகள் அமைவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

    தொடர்புக்கு: nellaikavinesan25@gmail.com

    Cell:94438 72528

    • எதிர்காலத்தை பற்றி நாம் திட்டமிடலாம், தவறு எதுவும் இல்லை. அதையே நினைத்து கொண்டும் ஏங்கிக்கொண்டும் இருக்க கூடாது.
    • துறவு என்றால் நாம் நினைப்பது எல்லாவற்றையும் விட்டு விட்டு அப்படியே காவி உடை உடுத்தி கொண்டு துறவு செல்வது அல்ல.

    அன்பார்ந்த வாசகர்களே, மனிதர்களாகிய நாம், வாழும் காலத்திலேயே தன்னை அறிதலுக்கு வழி வகுக்கும் ஒரு உள் நோக்கிய பயணம் ஆகும். இந்த பயணத்திற்கு முதற்படி, புற உலகத்தோடு இருக்கும் தொடர்பு ஆனது துண்டித்தல் அல்லது அந்த தொடர்பு ஆனது நம் மனதை ஒரு போதும் பாதிக்காமல் இருத்தல் அவசியம். இதற்கு அடிப்படையாக இருப்பது நமது உடல் நலம் ஆகும். அதற்கு உடலுக்கும் உயிருக்கும் ஒத்த உறவு வேண்டும். இந்த உறவு நம்முடைய இறுதி மூச்சு இருக்கும் வரை வேண்டும்.

    ஏனென்றால் நம்மோடு உறவாடி கொண்டு இருக்கின்ற பொருள்களும் உறவுகளும் ஒவ்வொறு நாள் ஒவ்வொன்றாக நம்மை விட்டு பிரியும். ஆனால் இறுதி மூச்சு வரை நம்மோடு வரக்கூடியது நம் உடல் மட்டுமே. எனவே நம்முடைய வாழும் காலத்திலே ஆனந்தம் அமைதி பெற ஒரே வழி தான் உள்ளது. உண்மையான இறை உணர்வு பெறாதவருக்கு, கட்டுப்பாடு உடைய மனமோ, நிலையான அறிவோ இருப்பது இல்லை. இவைகள் இல்லை என்றால் ஆனந்தம் கிடைக்காது. அந்த உன்னதமான உணர்வாக அறியப்படும் பொருள், உன்னை நீ ஆராய்ச்சி செய்தால் மட்டுமே முடியும்.

    குறிப்பாக இந்த அண்டத்திலே உள்ளது, பிண்டத்திலும் உள்ளது என்று சொல்லும் வேதாந்தம் மற்றும் சித்தாந்தம் ஆனது, அண்டத்திலும், பிண்டத்திலும் உள்ள மூல பொருள் ஒன்றே என்ற கோட்பாட்டை முன் வைக்கிறது. மகான்கள் இந்த கோட்பாட்டை ஏற்று கொண்டாலும், தங்கள் அறிவின் திறத்தால், சுய ஆராய்ச்சி மூலமாக தனது சிந்தனையை வேறு விதமாக செலுத்தி ஒரு பேருண்மையை கண்டறிந்தார்கள்.

    அந்த பேருண்மை, அண்டத்தில் உள்ள எந்த சக்தியாக இருந்தாலும், அவை அனைத்தும் ஏதோ ஒரு நிலையில் மனித உடலில் செயல்படுகிறது என்ற முதல் பேருண்மையை உணர்ந்தார்கள். ஒரு மனிதருடைய சக்தியின் அளவு மற்றும் செயல்திறன் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறதே ஒழிய, நம் உடலோடு தொடர்பு இல்லாத சக்திகள் என்பது நம்மிடம் இல்லை என்பதை மகான்கள் அடுத்த கட்டமாக உணர்ந்தார்கள். எனவே அறிபவருக்கு மூலமாக உள்ள இந்த உடலையும் அதன் இயக்கங்களையும் ஆராய்ந்து பார்த்த மகான்கள் அது 96 தத்துவங்களாக இயங்குவதை மூன்றாவதாக கண்டறிந்தார்கள். இந்த 96 தத்துவங்களை சீராக செயல்பட வைப்பது எவ்வாறு என்பது குறித்து, அறிபவர்.

    சுய ஆராய்ச்சி செய்து, அறியப்படுபவருடைய சக்தியை, கால நேரம் மற்றும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு மாற்றி, நம் உடலில் செயல்பட செய்து, 96 தத்துவங்களை சீராக இயங்க செய்து, அறிபவருடைய தேகத்திலே எப்படி அழியா வண்ணம் நீண்ட ஆயுளாக மாற்றுவது என்பதை நான்காவதாக கண்டறிந்தார்கள்.

    இயற்கை சக்திகளின் இயக்கம் மாறி கொண்டே இருக்கும். நம்மையும் அதற்கு தகுந்தாற் போல் மாற்றி கொண்டு, நாம் ஒவ்வொருவரும், இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழும்போது, உடலில் இயற்கையாக நடைபெற வேண்டிய செயல்கள், தங்கு தடையின்றி செயல்படுவதும், நோய் நொடி இன்றி நீண்ட காலம் வாழவும் முடியும். மேலும் அந்த நிலையிலே அறியப்படும் பொருளை வாழும் காலத்திலேயே உணரலாம் என்பதை மகான்கள் கண்டறிந்தார்கள். அந்த நிலையிலேயே நாம் ஒவ்வொறு நிமிடமும், நம்மையும், நம்மை சுற்றி உள்ளவைகளையும், கவனித்து கொண்டே இருக்க பழகி கொள்ள வேண்டும். அப்படி பழகி கொள்ளும்போது ஒரு உண்மை வெளிப்படும்.

    அது என்னவென்றால், நான் இந்த உடல் அல்ல, மனமும் அல்ல, இந்த உலகை பார்வையிட வந்த ஒரு பார்வையாளர் மட்டுமே. அதாவது வெறும் சாட்சி மட்டுமே. எதுவும் செய்கிறவன் நான் அல்ல என்கின்ற நிலமை விளங்கும். இதில் இருந்து என்ன புரிகிறது? குரு வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும்போது, பேருலகம் என்கின்ற சத்திரத்திற்கு வரும்போது, எவரும் எதுவும் கொண்டு வருவது இல்லை. அதே போல இதில் இருந்து புறப்பட்டு போகும்போது, எதுவும் நாம் கொண்டு போக போவதில்லை. இதில் உலகிலே மக்கள் பற்று, குடும்ப பற்று எங்கே? சொத்து பற்றோ, பொருள் பற்றோ எங்கு இருக்கிறது?

    இன்னும் கொஞ்சம் விரிந்து உணர்வோம். எவ்வளவோ பொருட்களை தனது என்று உரிமை பாராட்டுகிறோம். இருக்கட்டும்! நம் குடல் சீரணிக்கும் அளவுக்கு மேல் நம்மால் உண்ண முடியுமா? சுமக்கும் அளவுக்கு மேல் நம்மால் ஆடையை உடுத்த முடியுமா? உடல் பருமனுக்கு மேல் நாம் நிலத்தை அனுபவிக்க முடியுமா? இந்த உண்மைகளை அறிபவராகிய நாம், விளங்கி கொண்டு அடிக்கடி நினைத்து, அறிவில் அழுத்தமாக பதிவு செய்து கொண்டு, குடும்பத்திலே அவரவர் கடமைகளை ஆற்றினால், இது பற்று அற்ற வாழ்வாக மாறும். அப்போது அறிபவராகிய நாம் அறியப்படுபவராகிய இறைவனை உணர முடியும்.

    அந்த நிலையிலே, எந்த சிக்கலையும், எளிதில் தீர்க்கக்கூடிய கூர்மையும், அறிவுக்கு எப்போதும் இருக்கும். நிறைவும், அமைதியும் இந்த நிலையில் தான் அறிபவருக்கு கிடைக்கும். அதே மன அலை சுழல் வேகத்தில், தினமும் உடலுக்கு, மனதுக்கு, உயிருக்கு ஆன பயிற்சிகள் மற்றும் சுய ஆராய்ச்சி செய்தால், அறியப்படுபவரை அறியும் தகுதி நமக்கு கிடைக்கும். அந்த நிலையில், புலன்களை, புற உலகோடு தொடர்பு கொள்ளாமல், இருக்க பழகி கொள்ளும் பயிற்சி நமக்கு கிடைக்கும். அப்போது நம்மால் நினைத்த மாத்திரத்தில், எண்ணம் உதிக்கின்ற இடத்தில் நம்மால் நிற்க முடியும். அந்த நிலையிலே மனதின் எஜமானராகிய ஆத்மாவுடன் இணையும் தரிசனம் கிடைக்கும்.

    இந்த நிலையில், அறிபவராகிய நாம், அறியப்படும் இறைவனை உணரும்போது, அந்த நொடியிலேயே முக்தி கிடைக்கும். இந்த நிலையை உணர்வதற்கு குரு அருள் இல்லாமல் சாத்தியம் இல்லை, அந்த குருவின் பயிற்சிகள் மூலமாக, இந்த அறியப்படும் பிரம்ம வித்தையை பயிலும்போது தான் நாம் இல்லறத்தில் இருந்து கொண்டே குடும்ப வாழ்க்கையில் எந்த சிக்கலும் இல்லாமல், இறை உணர்வு பெற்ற யோகியாக மாறுகிறோம்.


    மனவளக்கலை பேராசிரியர்கள் கி.சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன், போன்: 9444234348

    மனவளக்கலை பேராசிரியர்கள் கி.சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன், போன்: 9444234348

    இந்த நிலையில் நாம் வாழும்போது நமது கர்மாவின் பதிவுகளை உணர்ந்து அதன்படி நமது வாழ்க்கையின் செயல்களை செய்வதால், அறிபவரும் அறியப்படுபவரும் ஒன்றே என்பது வாழும் காலத்திலேயே விளங்கும். வேதாந்த சித்தாந்த ஞானிகள், இதை மூன்று நிலைகளாக பிரிக்கிறார்கள். பொது நிலை, அமைப்பு நிலை, தத்துவ நிலை.

    பொது நிலை: என்பது நமது அன்றாட வாழ்க்கையில் செய்ய வேண்டிய செயல்கள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மூலம் இறைவனை உணர்வது ஆகும்.

    அமைப்பு நிலை: என்பது, ஆலய வழிபாடு மற்றும் தர்மம், கர்மம், மோட்சம், முக்தி ஆகிய நிலைகளில் இறைவனை உணர்வது ஆகும்.

    தத்துவ நிலை: என்பது தன்னிடம் உள்ள அறிவின் மூலமாக மற்றவர்கள் கூறுகின்ற அனுபவத்தையும் வைத்து, அறுதி உண்மையை அறிவது அல்லது ஆராய்வது தான் உயர்ந்த பிரணவ நிலை. இந்த நிலையை தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் தவம், தற்சோதனை மற்றும் மௌனம் மூலம் பயிற்சிகளாக கொடுத்து இருக்கிறார்கள். வேதங்களும் இதை தான் நான்கு நிலைகளில் உபதேசமாக சொல்லி இருக்கிறது.

    ரிக் வேதத்தில், மந்திரத்தின் மூலமாக இறைவனையே தியானிப்பது ஒரு நிலை.

    யஜீர் வேதத்திலே, யாகத்தின் மூலமாக இறைவனையே தியானிப்பது ஒரு நிலை.

    சாம வேதத்திலே, இசையின் மூலமாக, சத்சங்கத்தின் மூலமாக தியானிப்பது ஒரு நிலை.

    அதர்வன வேதத்திலே, மாந்திரிகம் மற்றும் ஹடயோகம் மூலமாக தியானிப்பது ஒரு நிலை.

    இப்படி வேதத்திலே அறியப்படுபவரை அறிய, உணர உபதேசங்கள் கொடுத்தார்கள்.

    ஏனென்றால் நாம் காணுகின்ற இந்த உலகம் என்பது உண்மையில் போலியானது. அதாவது நாம் காணுகின்ற அனைத்துமே நம் கண்களால் பார்க்கும்போது அவை உண்மை என்று தோன்றினாலும், அவை அனைத்தும், இறையின் பிம்பங்களே. இந்த உணர்வு எப்போது நமக்கு வருகிறதோ அது தான் ஞானம்.

    ஆனால் நாம் அனைவரும் நம் கடந்த காலத்தில் நடந்ததையே நினைத்துக்கொண்டு இருக்கிறோம், அல்லது எதிர்காலத்தை நினைத்து கற்பனை கனவுகளை வளர்ந்து கொள்கிறோம். உண்மையில் சொல்ல வேண்டுமானால், கடந்து போன காலத்தை பற்றி நினைப்பவர்கள், மரித்தவர்கள் ஆகிறார்கள். எதிர்காலத்தை பற்றி நினைத்து கொண்டு இருப்பவர்கள், இன்னும் பிறக்கவில்லை என்று சித்தர்கள் சொல்கிறார்கள். ஏனென்றால் நேற்றைய பொழுது என்பது இல்லாதது. நம் கையை மீறி சென்றுவிட்டது.

    எதிர்காலத்தை பற்றி நாம் திட்டமிடலாம், தவறு எதுவும் இல்லை. அதையே நினைத்து கொண்டும் ஏங்கிக்கொண்டும் இருக்க கூடாது.

    இப்போது நம் கையில் இருப்பது இன்று என்கின்ற நிகழ்காலம் மட்டுமே நிஜம். எனவே எவர் ஒருவர், தன் ஐந்து புலன்கள் (தோல், நாக்கு, மூக்கு, கண், காது) உணர்வுகளோடு வாழ்க்கையை எதிர்கொண்டு பற்று அற்ற நிலையில் தனது ஆன்மானவ உணர முற்படுகிறாரோ, கூடவே புத்தியையும் இணைத்து எவர் ஒருவர் அந்த நிலைக்கு செல்கிறாரோ அவராலே ஞானத்தை அடைய முடியும்.

    இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், நாம் இல்லற வாழ்வில் இருந்து கொண்டே, ஒரு சந்நியாசியாக இருக்கும் மனம் எப்போது நமக்கு வருகிறதோ அதுவே ஞானம், அவரே ஞானி ஆவார். ஞானத்தின் சொரூபம் சந்நியாசம், நம் ஆத்மா தான் சந்நியாசி. சந்நியாசி ஆகாமல் ஞானம் வராது. நாம் ஆத்மாவாக இருந்து பழக வேண்டும். ஞானம் என்பது சந்நியாச லச்சணம் என்கிறது.

    சந்நியாசம் என்றால் பொதுவாக துறவிகள் என்போம். துறவு என்றால் நாம் நினைப்பது எல்லாவற்றையும் விட்டு விட்டு அப்படியே காவி உடை உடுத்தி கொண்டு துறவு செல்வது அல்ல. உண்மையான துறவு என்பது எதையும் விட்டுவடுவது இல்லை இருப்பதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்வது தான் உண்மையான துறவு ஆகும். உண்மையான துறவின் ஆராய்ச்சி தொடரும்.

    • வாக்குப் பதிவுக்கு முன்பு நடந்த இரண்டு சம்பவங்கள் மேலும் பரபரப்பைக் கூட்டின.
    • இந்தியாவின் புராதன ஆலயங்கள் பலவற்றில் இது போன்ற நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

    தமிழ்நாடு-பாண்டிச்சேரி உள்ளிட்ட 102 எம்.பி. தொகுதிகளின் வாக்குப் பதிவு நிறைவு! 2024 மக்களவைத் தேர்தலின் முதல் கட்டம் இது!!

    நடப்பு தேர்தல் ஏ.ஐ. தேர்தல் என்று வர்ணிக்கப்படுகிறது. 2019-ல் சமூக ஊடக ஆதிக்கம் நிறைந்திருந்தது. இது செயற்கை நுண்ணறிவுக் காலம்.

    தென் சென்னை பாரதிய ஜனதா வேட்பாளர் தமிழிசை கூட ஏ.ஐ. தொழில் நுட்பப் பரப்புரை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    வாக்குப் பதிவுக்கு முன்பு நடந்த இரண்டு சம்பவங்கள் மேலும் பரபரப்பைக் கூட்டின.

    டெல்லி நார்த் பிளாக் இரண்டாவது மாடியில் 16.4.24 அன்று தீ விபத்து ஏற்பட்டது, அது குறித்த செய்திகளை என்.டி.டி.வி. பரபரப்பாக வெளியிட்டது.

    ஏனென்றால் மைய அரசின் மிக முக்கிய கேந்திரம் அது. அங்கு தான் உள்துறை இயங்கி வருகிறது. விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி எப்படி மர்ம விபத்து ஏற்பட்டது என்ற அய்யமும் கோப்புகளை எரிக்கிறார்கள் என்ற வதந்தியும் உருவாகியது.

    அடுத்தது சூரிய திலகம். பகவான் ஸ்ரீராமர் ரகு வம்சத்தைச் சேர்ந்தவர். சூரிய வழிபாடு அதன் பிரதான கோட்பாடு.

    முதல்கட்டத் தேர்தலுக்கு முன் 17.4.24 அன்று "ராம நவமி" வந்தது. வட இந்தியாவில் அது பிரபலப் பண்டிகை.

    அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் மூலவர் சிலை நெற்றியில் ராமநவமி அன்று 'சூரிய திலகம்' வைத்தால் இந்து ஓட்டு வங்கி கூர்மைப்படும் என்று வாக்கரசியல் கணக்கு பிறந்தது.

    இந்தியாவின் புராதன ஆலயங்கள் பலவற்றில் இது போன்ற நிகழ்வுகளைப் பார்க்கலாம். அவை எல்லாமே பழங்கால கட்டிடக் கலைச் சிறப்புகள்.

    ஆனால் அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நடந்து கொண்டிருந்தபோது சூரிய திலகச் சிந்தனை எழவில்லை.


    எனவே அயோத்தி ராமர் கோவில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ராவுடன் ஆலோசனை நடத்தி வானவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    ரூர்க்கி நகரில் ஐஐடி வான் இயற்பியல் சிறப்பு விஞ்ஞானிகள் ஆலோசனை செய்தனர். பெரிய லென்ஸ்கள், கண்ணாடிகள் மற்றும் குழாய்களை வைத்து சூரியக் கதிர்களைத் திருப்பினார்கள். சுமார் மூன்று நிமிடங்கள் அயோத்தி ராமர் சிலையின் நெற்றியில் சூரிய திலகம் வைத்தனர். சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.

    இந்த நிகழ்வு பற்றிய ஒளிபரப்பைப் பிரதமர் மோடி கையடக்கக் கணினியில் கண்டு தரிசித்தார். அதன் பின்னர் ஒரு எமோஷனல் டுவிட்டும் வெளியிட்டார்.

    சென்ற 2019 தேர்தல் இறுதிக் கட்ட வாக்குப் பதிவின்போது செயற்கையாக வடிவமைக்கப்பட்ட குகை ஒன்றில் மோடி தியானம் செய்தது நினைவுக்கு வருகிறதா?

    கோவில் கட்டிடக்கலை மற்றும் நகரத் திட்டம் ஆகியவை முன்கூட்டியே பழங்காலத்தில் திட்டமிடப்பட்டது. இது போன்ற நிகழ்வுகள் இயற்கையாக நடைபெறுமாறு வடிவமைத்தனர். எந்த லென்சும் தேவையில்லை. நிபுணர்களும் வரவேண்டியது கிடையாது.

    உலகின் மிகப் பெரிய இந்துக் கோவிலான கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் வானவியல் கண்காணிப்பு மையமாகச் செயல்பட்டது, அங்கு உத்தராயணம் மற்றும் சங்கராந்தி நாட்களில் கோவிலின் மேற்கு நுழைவாயிலுடன் சூரிய உதயம் இணைகிறது.

    இப்படி சூரிய சந்திர உதயம் மற்றும் நகர்வுகளைப் பருவகாலமாக அவதானிக்கும் பார்வைக் கோடுகளை இந்தியாவின் பல்வேறு ஆலயங்களில் இன்னமும் தரிசிக்கலாம்.

    இந்தியாவிலேயே கதிரவன் ஒளி அபிஷேகத்திற்குப் புகழ் பெற்றது ஒரிசா கோனார்க் சூர்ய தேவன் ஆலயம். திருவனந்தபுரம் பத்மநாபர் ஆலயமும் இதற்கு பேமஸ்.

    தராசு ஷ்யாம்

    தராசு ஷ்யாம்


    ஆனால் அனைத்துமே இயற்கை நிகழ்வுகள். இந்தியக் கட்டிடக் கலையின் தொன்மைகள்!

    அயோத்தி ராமர் கோவிலில் இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் 'சூர்ய திலகம்' விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி. விஞ்ஞானிகளுக்கு நல்ல வேலை!

    சென்ற 2019 வாக்குப் பதிவில் பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சங்கரநாராயணன் நடுநிலைப்பள்ளியில் 196-வது எண் ஓட்டுச்சாவடியில் மாதிரி ஓட்டுகளை அழிக்க மறந்துவிட்டனர். ஆனால் வாக்குப்பதிவு தொடர்ந்தது.

    ஒரு மணி நேரத்தில் 63 ஓட்டுகள் பதிவாகியும் விட்டன. ஈ.வி.எம். திடீர் மக்கர். புது மெஷின் வர 2 மணி நேரம் லேட்!

    புதிய இயந்திரம் எடுத்துவந்தபின் மேற்படி 63 ஓட்டுகளைக் கணக்கிடுவதில் பிரச்சனை ஏற்பட்டது! ஏற்கனவே வாக்களித்த 63 பேரை மீண்டும் வரவழைத்து ஓட்டளிக்க வைப்பது என்ற ஐடியாவுக்கு ஏஜெண்டுகள் ஓகே!

    வீடுவீடாகப் போய் 49 பேரை மறு ஓட்டளிக்க வைத்தார்கள். ஆனாலும் கடைசி வரை 17 பேர் ஆப்சென்ட். ஓட்டுப்பதிவு முடியும் வரை அவர்கள் வரவேயில்லை. ஒரு தடவை கேஷ் வாங்கினால் ஒருமுறை தானே ஓட்டுப் போட முடியும்?

    மீதி ஓட்டுகளைக் கட்சிகளுக்குள் பிரித்து பொத்தான்களை அமுக்கிக் கொள்ளுமாறு அதிகாரிகள் முகவர்களிடம் சொல்லிப் பார்த்து இருக்கின்றனர். அதற்கு யாரும் சம்மதிக்கவில்லை.

    எனவே "டேலி" செய்வதற்காக 17 ஓட்டுகளை நோட்டாவுக்குப் பதிவு செய்து கணக்கை முடித்து விட்டனர். அதில் பிரச்சனையாகி மேட்டர் அம்பலப்பட்டது. 2024-ல் எத்தனை வடுகபட்டிகளோ?

    ஈரோடு காங்கேயம் அருகே 2019 தேர்தலில் இன்னொரு கூத்து! வெள்ளகோவிலில் திருமங்கலம் சாவடி எண் 248. மாதிரி ஓட்டை அழிக்காமல் தொடர்ந்து ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.

    ஆகையால் மாதிரி ஓட்டு 50 சேர்த்து ஈ.வி.எம்.மில் கணக்கு வந்தது. ஆனால் மொத்தம் பதிவானது 736 மட்டுமே! மாதிரி வாக்கு 50 சேர்த்தால் 786 வர வேண்டும். ஆனால் ஒன்பது குறைவாக 777 மட்டுமே காட்டியது ஈவிஎம். விவரங்களைச் சரிபார்க்கும் போது தான் பிரச்சனை தெரியவந்தது. எப்படி இந்தத் தவறு வந்தது என்று யாருக்கும் புரியவில்லை. எனவே மறு ஓட்டுப்பதிவு நடந்தது.

    தர்மபுரி, கடலூர், திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் 10 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல்!!. கள்ள ஓட்டுப் பிரச்சனை! ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    சென்ற 2019 தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை நிறுத்தி வைத்துக் ஜனாதிபதி ஆணையிட்டார்.

    ஆனால் அதற்கு உட்பட்ட ஆம்பூர் மற்றும் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. அப்பகுதி வாக்காளர்களுக்கு "டபுள் தமாக்கா!" மற்றவர்கள் அக்னி மூச்சு விட்டனர்.

    இந்த முறை இது வரை எந்தத் தொகுதியிலும் தேர்தல் ரத்து ஆகவில்லை. ஆனால் வாக்குப்பதிவிற்குப் பின் கள்ள ஓட்டு மற்றும் பணப் பட்டுவாடா புகார்கள் கிளம்பும் வேகத்தைப் பார்த்தால் இன்னமும் அதற்கு வாய்ப்பு உள்ளது. அதாவது டபுள் தமாக்கா வைபவததுக்கு இப்போதும் சான்ஸ் உள்ளது.

    சென்ற தேர்தலின் போது தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அட்டவணையோடு அறிவிக்கப்பட்டது.

    அப்போது ஈ.பி.எஸ். ஆட்சி. அதன் பெரும்பான்மை குறித்த அய்யம் பொதுவெளியில் இருந்தது.

    எனவே எம்.பி. தொகுதிகளில் செலுத்தப்பட்ட கவனிப்பை விட அதிகம் எம்.எல்.ஏ. இடைத்தேர்தல்களுக்குத் தரப்பட்டது. இரண்டாம் கட்டத்தில் வாக்குப்பதிவு முடிந்தது. அதன் பின் எடுக்கப்பட்ட பிரைவேட் சர்வே அபாயச் சங்கு ஊதியது.

    எனவே நிலுவையில் இருந்த மேலும் 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களை இறுதிக் கட்ட வாக்குப் பதிவின்போது அறிவித்தது தேர்தல் ஆணையம். கடைசி வரை தமிழகத் தேர்தல் களத்தில் அனல் பறந்தது.

    நடப்பு 2024 தேர்தலில் அட்டவணையோடு விளவங்கோடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. வாக்குப்பதிவும் ஓவர். ஆனால் அதன் பின் தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார். அவரது விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    நடப்புத் தேர்தல் அட்டவணையோடு அதை நடத்துவதாக ஆணையம் முடிவெடுக்கலாம்! இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிற ஜூன் முதல் தேதி வரை அதற்கு வாய்ப்பு உள்ளது.

    அப்படியானால் அதுவரை இங்கு தேர்தல் பரபரப்பு இருக்கும். செய்திகளுக்குப் பஞ்சம் இருக்காது.

    வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதில் எந்தக் கட்சியும் சளைக்கவில்லை. கரண்ட் கட் செய்து கொடுக்கும் பேச்சு கூட இல்லை. எல்லாமே வெரி ஓப்பன்.

    தமிழ்நாட்டில் கட்டிடப் பணிகள் உள்ளிட்ட எல்லா வேலைகளுக்கும் 2-3 நாள் லீவ். வீட்டில் இல்லாமல் போனால் கொடுக்காமல் போய் விடுவார்களோ? இந்த அச்சத்தில் ஏராளமான "பணிப் புறக்கணிப்புகள்!" ஒரே தேசம்..ஒரே பார்முலா!

    செலவுக்குக் கொடுக்கப்பட்ட பணம் முறையாக சென்றடைந்ததா என்று எல்லாக் கட்சிகளும் ரகசிய விசாரணை நடத்துகின்றன. இனி உரிய கணக்கு வழக்குகளைக் கேட்டு முடிவுகளுக்குப் பின் தண்டனை வழங்கும் படலம் துவங்கும்.

    சரித்திரம் திரும்புவது வாக்கரசியல் வாடிக்கை தானே!

    • சின்னக் குழந்தைகள் சிறுநீர் போகும்போது அழுவது, விட்டுவிட்டு சிறுநீர் போவது, தங்களையே அறியாமல் சிறுநீர் போவது இதன் அறிகுறிகளாகும்.
    • சிறுநீர் கிருமி தொற்று உள்ள குழந்தைகள் அதிகமாக நீராகாரம் உட்கொள்ள வேண்டும்.

    பொதுவாகவே குழந்தைகள் பல்வேறு நோய்கள் மற்றும் உடல் நல பிரச்சனையால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள். எனவே பெற்றோர்கள், குழந்தைகளை ஆரோக்கியமாகவும், கவனமாகவும் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

    சிறுநீர் கிருமி தொற்று பெரியவர்களுக்கு மட்டும் தான் ஏற்படும் என்று நினைத்து விடக்கூடாது. அது வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வரக்கூடியது.

    சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் வெளியேறும் துவாரம் வரை உள்ளதுதான் சிறுநீர்ப்பாதை. இந்தப் பாதையில் ஏற்படும் தொற்றைத்தான் சிறுநீர்ப்பாதைதொற்று என்கிறோம்.

    நோய் தொற்றுகள் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் கூட காணப்படுகின்றன. சிறுநீர்ப் பாதையில் இத்தொற்று எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இதன் விளைவாக, சிறுநீர்ப்பாதையில் எரிச்சல், அரிப்பு உண்டாகலாம். இந்த தொற்று என்பது பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகள் மற்றும் பச்சிளம் சிசுக்களுக்கும் கூட ஏற்படுகிறது.

    குழந்தைகளுக்கு சிறுநீர்ப் பாதையில் கிருமித்தொற்று வருவது என்பது பொதுவான பாதிப்பு ஆகும். குழந்தைகள் சிறுநீர் கழிப்பதற்கு சிரமப்பட்டாலோ, சீராக சிறுநீர் போகவில்லை என்றாலோ பெற்றோர் அலட்சியம் காட்டக் கூடாது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

    அறிகுறிகள் என்னென்ன?

    சின்னக் குழந்தைகள் சிறுநீர் போகும்போது அழுவது, விட்டுவிட்டு சிறுநீர் போவது, தங்களையே அறியாமல் சிறுநீர் போவது இதன் அறிகுறிகளாகும். இதுமட்டுமின்றி, குழந்தைகள் சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் கலந்து வரும். சிறுநீர் கழித்த பிறகு துர்நாற்றம் வீசக்கூடும். சிறுநீர் கலங்கலாக இருக்கும், அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்வார்கள்.

    குழந்தைகள் சிறுநீர் கழிக்கும்போது சிரமப்படுவார்கள். அதிலும் குறிப்பாக முக்கி போவார்கள். அல்லது போகாமல் அடைத்துக் கொள்ளவும் வாய்ப்புள்ளது. இந்த தொந்தரவுகள் இருந்தால் குழந்தைகளின் பெற்றோர் அவர்களை முதலில் குழந்தைகள் மருத்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனை பெற வேண்டும்.

    சின்னக்குழந்தைகளுக்கு சிறுநீர் கிருமி தொற்று இருக்கும்போது காய்ச்சல் மட்டும் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இதனை நீங்கள் வழக்கமான காய்ச்சல் என்று நினைத்து விட்டு விடக்கூடாது. குழந்தைகளுக்கு எந்தவித காரணமும் இல்லாமல் காய்ச்சல் வந்தால் சிறுநீர் பாதையில் சிறுநீர் கிருமி தொற்று பாதிப்புகள் இருக்கிறதா? என்பதை டாக்டரிடம் சென்று சிகிச்சை செய்து தெரிந்து கொள்ள வேண்டும். இதுதவிர குமட்டல் உணர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவையும் இருக்கக்கூடும். இந்த அறிகுறிகள் தொடர்ந்தால், குழந்தைகள் சிறுநீர் கழிக்கும்போது கவனித்து வந்தால் ஆரம்ப நிலையில் சிகிச்சை அளிக்கலாம்.

    பரிசோதனைகள்

    சிறுநீர் தொற்று அறிகுறி இருக்கும்போது மருத்துவரை அணுகினால் யூரின் கல்ச்சர் டெஸ்ட் எனப்படும் சிறுநீர் பரிசோதனை செய்யப்படும். குழந்தைகளின் வயதினை பொறுத்து பரிசோதனைகளும் மாறுபடும். இந்த பரிசோதனையில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் தகுந்த ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுத்து தொற்று சரி செய்யப்படும். இது பாதிப்பை குணப்படுத்தும் சிகிச்சை. இந்த சிகிச்சையானது தொற்றுக் கிருமிகளை முழுவதுமாக வெளியேற்றுகிறது.

    சிறுநீர் பரிசோதனையோடு நிறுத்தி விடாமல் எதனால் இந்த பாதிப்பு வந்தது என்பதை முழுமையாக ஆராய வேண்டும். பொதுவாக சிறுநீர் கழிப்பதில் தொந்தரவு ஏற்படும் குழந்தைகளுக்கு பிறப்பதற்கு முன்பே சிறுநீரகத்தில் ஏதாவது பாதிப்புகள் இருந்திருக்கலாம். அதனை நாம் கண்டுபிடித்ததற்கு பிறகு சிறுநீரக பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து விரிவாக பரிசோதனை செய்யப்படும்.

    சிறுநீர் தொற்று ஏற்படுபவர்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்படும். அதில் சிறுநீரகத்தில் வீக்கம் அல்லது குறைபாடுகள் இருந்தாலும் சிறுநீர் பையில் குறைபாடுபாடுகள் இருந்தாலும் கண்டறியப்பட்டு விடும். அதற்கு எம்.சி.யு.ஜி என்ற பரிசோதனை செய்யப்படும். சிறுநீர் தொற்று பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு கட்டாயமாக இந்த பரிசோதனையை செய்ய வேண்டும்.

    ஒருமுறை தொற்று நேர்ந்தால் மீண்டும் பிள்ளைகளுக்கு அடிக்கடி தொற்று நேரிட வாய்ப்புண்டு. அதனால் மிக கவனமாக குழந்தைகளை கையாள வேண்டும்.. தொற்று சரியான பிறகும் கூட பிள்ளைகளை உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.

     

    டாக்டர் பரணிகுமார்

    டாக்டர் பரணிகுமார்

    பாதிப்புகள் என்னென்ன?

    சிறுநீரகத்தின் பாதையில் அடைப்பு, ரிப்ளக்ஸ் எனப்படும் சிறுநீர் மூத்திரப் பையில் இருந்து மேலே செல்லும் பிரச்சினை, சிறுநீர் வெளிவரும் பாதையில் அடைப்பு, ஆண் குழந்தைகளுக்கு முன் தோல் மூடல் போன்ற தொந்தரவுகள் இருந்தால் சிறுநீர் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

    இதில் பெரும்பாலானவை வளர்ச்சிக் குறைபாடு காரணத்தால் பிறவியிலேயே ஏற்படும் பிரச்சினைகள் ஆகும். இவற்றை பூரணமாக சரி செய்வதற்கான வழி வகைகளும் இருக்கத் தான் செய்கிறது.

    எம்.சி.யு.ஜி என்ற(சிறுநீர்பை மற்றும் கீழ் சிறுநீர் பாதை பற்றிய விரிவான எக்ஸ்ரே ஆய்வு) பரிசோதனை செய்து, சிறுநீரக செயல்பாட்டுக்கான நியூக்ளியர் ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும். பரிசோதனைகளின் முடிவில் நமக்கு தேவைப்படும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

    பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள்:

    சிறுநீர் கிருமி தொற்று உள்ள குழந்தைகள் அதிகமாக நீராகாரம் உட்கொள்ள வேண்டும். குழந்தைகள் பெரும்பாலும் சிறுநீரை அடக்கி வைத்து போவார்கள். அந்த மாதிரியான செயல்களை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.

    ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தைகளை சவுகரியமாக உட்கார வைத்து சிறுநீர் கழிக்க வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு தினமும் மலம் கழிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தி வைக்க வேண்டும்.

    இரவு தூங்குதவற்கு முன்பாக குழந்தைகளை அழைத்து சென்று சிறுநீர் கழிக்க வைக்க வேண்டும். சிறுநீர் கழித்த பின்பே தூங்க வைக்கும் பழக்கத்தையும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.

    சிறுநீர்ப்பாதை பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு இரவு தூங்கும் முன்பு பால் மற்றும் நீர் கொடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இதனை நிறுத்த சொல்வதற்கு முக்கிய காரணம் சிறுநீர் பையில் நீர் தங்கும்போது தொற்று பாதிப்பு ஏற்படும். அதனை தவிர்ப்பதற்காகவே குழந்தை தூங்கும் முன்பு பால், நீர் கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்துகிறோம்.

    சிறுவயது முதல் குழந்தைகளுக்கு சரியான முறையில் சிறுநீர் கழிப்பதற்கு பயிற்சி கொடுக்க வேண்டும். குழந்தைகள் வளர ஆரம்பித்ததும் டயப்பர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளை குளிக்க வைக்கும்போது சிறுநீர்ப்பாதை உறுப்புகளை நன்றாக சுத்தம் செய்து விடுங்கள்.

    அதுமட்டுமின்றி ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போது, முடித்தவுடன் குழந்தைகளின் பிறப்பு உறுப்பை சுத்தம் செய்து விடுங்கள். துரித உணவுகள், கடினமான, காரமான, மசாலா அதிகம் நிறைந்த உணவுகளை தவிர்த்து மென்மையான உணவுகளை வழங்குங்கள்.

    சிகிச்சைகள்

    சிறுநீர் தொற்று ஏற்பட்டால் சரியான ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொண்டு, காரணங்களை கண்டறிந்து சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் பாதிப்பு அதிகமாவதோடு, சிறுநீரக பாதிப்பினையும் ஏற்படுத்தி விடும். இதனால் பிற்காலத்தில் குழந்தைகளுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. எனவே வரும்முன் காப்போம் என்பது போல தொற்று பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொண்டு சரி செய்ய வேண்டும்.

    குழந்தைகள் தங்கள் அறியாத வயதில் படுக்கையிலேயே சிறுநீர் போவார்கள். பெரியவர்களானதும் இந்த பிரச்சினையானது சரியாகிவிடும் என்று நாம் நினைப்பது இயல்பானது தான். ஆனால் 5 வயதுக்கு மேல் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தால் உடனே மருத்துவரை அணுகி இதனை எடுத்து கூறி பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

    படுக்கையில் சிறுநீர் போய் விட்டது என்பதற்காக குழந்தையை தண்டிக்க கூடாது. அப்படி நாம் செய்யும் செயல் அவர்களுக்கு தேவையற்ற தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடும். அதனால் பெற்றோர் இதில் மிக கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக பாதிப்புகளுக்கான சிகிச்சைகள், பாதிப்பின் தன்மையை பொறுத்து வேறுபடும். அடைப்பு இருக்கும் பட்சத்தில் அடைப்பை எண்டோஸ்கோபி வழியாக சரி செய்யப்படும்.

    ரிப்ளக்ஸ் பாதிப்பு இருந்தால் அதற்கும் எண்டோஸ்கோபி வழியாக மருந்து செலுத்தப்படும். அல்லது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

    ஆண் குறியில் முன்தோல் மூடல் பாதிப்பிற்கு, பிறந்த குழந்தைகளை குளிக்க வைக்கும்போது முன் தோலை விலக்கி அதனை சுத்தம் செய்ய வேண்டும். விலக்க முடியவில்லை என்றால் மருத்துவரை அணுகி சுன்னத் சிகிச்சை செய்து கொள்வது நல்லது. இதனை இளம் வயதிலேயே செய்து கொள்வது சிறந்ததாகும். இது எந்தவிதமான பாதிப்புகளையும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

    எங்கள் மருத்துவமனையிலும் குழந்தைகளுக்கான அனைத்து நவீன மருத்துவ சிகிச்சைகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக எண்டாஸ்கோபி சிகிச்சை, ரோபோடிக் சிகிச்சை ஆகியவை அனுபவமிக்க மருத்துவ குழுவினர் மூலம் மிக சிறப்பாக செய்து வருகிறோம். சரியான சிகிச்சையோடு உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையிலும் நாம் தெளிவாக கவனம் செலுத்தினோம் ஆனால் சிறுநீர் தொற்று வராமல் தடுத்து நல் ஆரோக்கியமாக வாழலாம்.

    தொடர்புக்கு:

    73393 33485, 0422 4323707

    • மூக்கின் மேல் பகுதியில் கண்ணுக்குத் தெரியாத ரோம அமைப்பில் வாசனையை அறியும் உணர் இழைகள் அமைந்துள்ளன.
    • ஜாதிக்காயை குழம்பு போல் அரைத்து மூக்கின் மேல் பற்றுப் போட்டாலும் மூக்கில் நீர் வடிதல், தும்மல் குணமாகும்.

    சுவாச மண்டலத்தின் முக்கியமான பகுதி மூக்கு. அதோடு வாசனையைப் பகுத்தறியும் உறுப்பும் மூக்குதான். மூக்கு முகத்திற்கு அழகைத்தருவதில் பெரும் பங்கு வகிக்கிறது எனலாம். செவிமடல்களைப் போல் மூக்கின் வெளிப்பகுதி மடியக்கூடிய தன்மையுள்ள குறுத்தெலும்பால் ஆக்கப்பட்டுள்ளது. உட்பகுதி மென்மையான சிலேத்தும் படலத்தால் உண்டாக்கப்பட்டுள்ளது. பக்கத்திற்கு ஒன்றாக அமைந்துள்ள மூக்குத் துவாரம் தொண்டையில் இணைகிறது. காதுத் துவாரமும் தொண்டையில் குழாய் போன்ற அமைப்புடன் இணைகிறது.

    மூக்கின் மேல் பகுதியில் கண்ணுக்குத் தெரியாத ரோம அமைப்பில் வாசனையை அறியும் உணர் இழைகள் அமைந்துள்ளன. அவை நுண்ணிய நரம்புகள் மூலம் மூளையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. இவ்வுணர் இழைகள் ஆயிரக்கணக்கில் சிலேத்தும் படலத்தில் பதித்து வைக்கப்பட்டுள்ளன. மண்டை ஓட்டிற்கும் மூக்கின் இணைப்புத் தசைகளுக்கும் இடையே மூக்கைச் சுற்றி வெற்றிடங்கள் உண்டு. இவைகளைத்தான் சைனஸ் (காற்றறைகள்) என அழைக்கிறோம்.

    மூக்கு வாசனை அறிய உதவும் உணர்ச்சி மிகுந்த உறுப்பாக இருப்பதால் உட்பகுதியில் சிலேத்தும் படலத்திற்கு அருகே நிறைய ரத்தக் குழாய்களும் நரம்புக்கற்றைகளும் நிறைந்துள்ளன. இவை காற்றை வடிகட்டி அனுப்பும் தன்மையைக் கொண்டவை. அவ்வாறு வடிகட்டப்பட்ட காற்றில் நச்சுக் கிருமிகள் இருந்தால் அவற்றைத் தடுத்து அழிக்கவே மூக்கின் பின் பகுதியில் தொண்டைக்கு அருகே அடிநாய்டு என்னும் தசைக்கோளம் உள்ளது.

    நுண்ணிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்ட மூக்கை பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. சளிதான் மூக்கை அடிக்கடி பிடிக்கும் நோய். காற்றில் உள்ள வைரஸ் கிருமிகள் மூச்சுக்காற்றுடன் மூக்கினுள் சென்று சிலேத்துமப் படலங்களில் படிகிறது. நோய் எதிர்ப்பாற்றல் சக்தி இயற்கையிலேயே மனிதனுக்கு இருப்பதால் அவை வைரஸ்களை அழிக்கும். அச்சக்தி சிலருக்கு அல்லது சில நேரங்கள் குறைவு பட்டிருக்கும்போது வைரசின் ஆதிக்கம் அதிகமாகும். அதனால் மூக்கினுள் சிலேத்துமப் படலங்கள் அழற்சியுற்று சளி உண்டாகிறது. முதல் அறிகுறியாக தும்மல், மூக்கில் நீர்வடிதல், கண்களின் நீர் கட்டுதல், மூக்கில் வலி, அடைப்பு போன்றவை தோன்ற ஆரம்பித்துவிடும், சளிக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது ஆங்கில மருத்துவர்களின் கூற்றாகும். மூலிகை மருத்துவத்தில் சளியை ஆரம்பத்திலே கண்டு சிகிச்சை செய்தால் விரைவில் சரி செய்யலாம்.

    அடிநாய்டு என்னும் மூக்கில் உள்ள கோளம் நோயுற்றால் வாசனைத் திறனை மூக்கு இழந்துவிடும். மூக்கு, காது, தொண்டை துவாரங்கள் சந்திக்கும் இடத்திற்கு சற்று பின்பக்கம் இக்கோளம் அமைந்துள்ளது. இது நிணநீர் திசுக்களால் ஆனது. வெளிக்காற்றில் இருந்து வரும் கிருமிகளை இது தடுத்து நிறுத்தும், அப்போது ஏற்படும் போரின் விளைவாக அடிநாய்டு வீங்கும். இது குழந்தைகளை அடிக்கடி பாதிக்கும் பிரச்சனையாகும். இதன் பாதிப்பு வாயில் மூச்சுவிடச் செய்யும், காதில் தொற்று நோயை உண்டாக்கும். மூளைவரை கூட இத்தொற்று பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. இது அடிக்கடி நோயற்றால் மூக்கடைப்பு வரும். எனவே இதை அறுவை சிகிச்சையின் மூலம் நவீன மருத்துவத்தில் நீக்கப்படுகிறது. 


    சித்த மருத்துவர் கே.எஸ்.சுப்பையாபாண்டியன், 9994932121

    சித்த மருத்துவர் கே.எஸ்.சுப்பையாபாண்டியன், 9994932121

    மூக்கின் அருகில் உள்ள காற்றறைகளில் அழற்சி, கிருமித்தொற்று, சளி தங்குதல் போன்றவற்றை சைனஸ் என அழைப்பதாகப் பார்த்தோம். இதைத்தான் சித்த மருத்துவத்தில் வாதம், பித்தம், கபம் என்ற முக்குற்ற அடிப்படையில் பீனிசம் என்று அழைக்கப்படுகிறது. இப்பீனிச நோயில் 8 வகை இருப்பதாகவும் அறிகிறோம். மேலும் இந்நோய்க்கு சளி மட்டுமே காரணமல்ல, மேக நோயும் காரணம் எனப்படுகிறது. உடலில் உஷ்ணம் அதிகமாகி அது மூலாதாரக் கொதிப்பை உண்டாக்கி, பித்த நீரை உண்டாக்கி, அவைகள் (சைனஸ்) காற்றறைகளில் தங்கி தும்மல், மூக்கில் நீர் வடிதல், மூக்கில், கன்னத்தில், கண்களில் வலி போன்றவற்றை உண்டாக்குவதாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரமற்ற காற்று. புகைப்பழக்கம், பல் நோய், டான்சில் மற்றும் அடினாய்டு தொந்தரவு போன்றவைகளாலும் பீனிசம் வரும். ஒவ்வாமையும் பீனிசத்தை உண்டாக்கும். நாள்பட்ட பீனிசத்தால் காற்றறைகள் புண்ணாகி சளியுடன் கலந்து சீழும் ரத்தமும் துர்நாற்றத்துடன் வெளியேறும். சிலசமயம் கட்டிகள் மற்றும் மூக்கில் சதை வளர்ச்சியைக் கூட இது உண்டாக்கும். இத்தகைய மூக்குப் பிரச்சனைகளுக்கு நம்பகமான சிகிச்சைமுறைகள் உண்டு.

    சளி வந்தால் செய்ய வேண்டியவை

    சளிக்கு ஆரம்பத்திலேயே துளசிச்சாறு 1 தேக்கரண்டி, தூதுவளைச்சாறு 1 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி கலந்து தினமும் மூன்று வேளை குடித்துவந்தால் சளி இரண்டொரு நாளில் குறையும்.

    கப நோய்களுக்கு துளசிச்சாறு 100 மில்லி, ஆடாதோடைச்சாறு 100 மில்லி, வெற்றிலைச்சாறு 100 மில்லி, குப்பைமேனிச்சாறு 100 மில்லி எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி சித்தரத்தை, கண்டு பாரங்கி, ஜடாமாஞ்சில், சுக்கு, மிளகு, அக்ராகாரம், கோஷ்டம் இவைகள் ஒவ்வொன்றும் 5 கிராம் அளவு வாங்கி பொடியாக்கி ½ லிட்டர் நீர் ஊற்றி 100 மில்லி அளவு சுண்டக் காய்ச்சி மூலிகைச் சாறுகளுடன் கலந்து கொள்ள வேண்டும்.1 கிலோ சர்க்கரையை பாகு செய்து மூலிகைச்சாறும், கடைச்சரக்கு கசாயம் கலந்த கலவையை ஊற்றி பாகு கெட்டியாகி முறுகாமல் பதத்தில் (தேன் பதத்தில்) இறக்கி வைத்துக்கொண்டு, காலை, மாலை 10 மில்லி வீதம் கொடுத்துவர கபம் சம்பந்தமான நோய்கள் விலகும்.

    சளியுடன் வரும் இருமலுக்கு

    கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் மூன்றும் சேர்ந்தது திரபலையாகும். இவைகளுடன் அதிமதுரம் சேர்த்து ஒவ்வொன்றும் 50 கிராம் எடுத்து உலர்த்திப் பொடி செய்து வைத்துக்கொண்டு வேளைக்கு ½ டீஸ்பூன் வீதம் காலை, மாலை உண்டுவர சளி இருமல் குணமாகும். அதேபோல் சுக்கு, திப்பிலி, சிவதைவேர், கோஷ்டம், பேரரத்தை, கோரைக்கிழங்கு, அதிமதுரம், சித்தரத்தை இந்த எட்டுச் சரக்கிலும் 10 கிராம் வீதம் வாங்கிச் சூரணமாகச் செய்து வைத்துக்கொண்டு சம எடை சர்க்கரைக்கலந்து மூன்று வேளையும் வேளைக்கு 2 சிட்டிகை அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வர சளி, குத்திருமல் நிற்கும்.

    சளியுடன் தும்மல் இருமலுக்கு மற்றும் மூக்கில் நீர் வடிதலுக்கு திருநீற்றுப் பச்சிலைச் சாறு எடுத்து, 15 கிராம் மிளகு மூழ்கும்வரை விட்டு உலர்த்தி, அதைப் பொடி செய்து, நுண்ணிய பொடியாகச் சலித்து வைத்துக்கொண்டு சளி, தும்மல். இருமல் இருக்கும்போது மூக்குப்பொடிபோல் மூக்கில் விட்டு உறிஞ்ச குணமாகும். தும்பை இலைச் சாற்றைக் கசக்கி மூக்கில் 2 சொட்டு விட்டாலும் கபம் சரியாகும். மூக்கில் நீர்வடிதல் மற்றும் தலைவலியும் குணமாகும். ஜாதிக்காயை குழம்பு போல் அரைத்து மூக்கின் மேல் பற்றுப் போட்டாலும் மூக்கில் நீர் வடிதல், தும்மல் குணமாகும்.

    மூக்கில் ரத்தம் வடிதலுக்கு தோல் சீவிய சுக்கு, மிளகு இரண்டிலும் ஒவ்வொன்றும் 100 கிராம் வீதம் வாங்கி கற்பூரம் 200 கிராமுடன் கலந்து புது சட்டியில் வைத்துக் கொளுத்திவிடவும். இவையாவும் எரிந்து சாம்பலாகிவிடும். இதை அரைத்து புட்டியில் வைத்துக் கொள்ளவும். தினம் ஒரு வேளை 1 சிட்டிகை அளவு தேனில் உட்கொள்ள தும்மல், இருமல், சுரம் குணமாகும்.

    பல்வேறு காரணங்களால் மூக்கில் ரத்தம் வரும். அதற்கு நம்பகமான மூலிகை மருத்துவம், ஆடாதோடை சாறு ½ லிட்டர், மிளகு, சீரகம், ஓமம், சுக்கு, அதிமதுரம், சிற்றரத்தை ஒவ்வொன்றும் 25 கிராம் வீதம் பொடி செய்து, ஆடாதோடைச் சாற்றில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் ½ கிலோ கலந்து மீண்டும் காய்ச்சி குழம்பு பதம் வந்ததும் புட்டியில் பத்திரப்படுத்தவும். தினம் காலை, மாலை தேக்கரண்டி அளவு சாப்பிட மூக்கில் இரத்தம் வடிதல், ஷயரோகம் ஆகியவை குணமாகும்.

    கோஷ்டம், வில்வவேர், திப்பிலி, திராட்சை இவைகள் யாவும் சம எடையாகப் பொடி செய்து நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வைத்துக்கொண்டு தினம் இரண்டு மூக்கிலும் 5 துளி வீதம் விட்டுவர விடாத் தும்மல் விலகும். மூக்கில் ரத்தக் குழாய் உடைந்து கொட்டும் ரத்தத்திற்கு, நெய்யில் நெல்லி வற்றலைப் பொடித்து அதைக் காடியில் அரைத்துப் பிழிந்து இரண்டு மூக்கிலும் இரண்டொரு சொட்டு விட நாசியில் வடியும் ரத்தம் நிற்கும். படிகாரத்தைப் பொரித்து நீரில் கலந்து இரண்டொரு சொட்டு விட்டாலும் ரத்தம் வருவது நிற்கும்.

    சைனஸ் என்ற பீனிச நோய்க்கு

    சைனஸ்தான் மூக்கை வருத்தும் மிகக் கொடிய நோய் எனப் பார்த்தோம். அதற்கான எளிய நிவாரணம் சில. குங்குமப்பூ, இஞ்சி, மிளகு, கோஷ்டம். அதிமதுரம் இவைகளைத் தேவையான அளவு எடுத்துப் பொடி செய்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி இரண்டொரு சொட்டு பீனிசம் உள்ள மூக்கில் விட்டு சிறிது உச்சந்தலையில் தேய்த்துவர நிவாரணம் கிடைக்கும்.

    அதே போல் வட்டத்திருப்பி, மஞ்சள், மரமஞ்சள், மருள், கிழங்கு, திப்பிலி, ஜாதி மல்லிகைக் கொழுந்து இவைகளை, சிறிது எடுத்து நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடித்து நசியமிட பீனிச நோய் சாந்தப்படும்.

    கிராம்பு, வில்வக்காய், திப்பிலி, கோஷ்டம், திராட்சை, சுக்கு இவைகள் ஒவ்வொன்றும் 10 கிராம் வீதம் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து ¼ லிட்டர் பசுநெய்யில் கலந்து, காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு தினமும் காலை, இரவு இரண்டு வேளையும் 5 துளி வீதம் மூக்கில் விட பீனிசம், அதனால் வரும் தும்மல் ஆகியவை போகும்.

    தோல் நீக்கிய சுக்கு, வறுத்த மிளகு. அக்கராகாரம், கோஷ்டம். கண்டங்கத்திரிவேர், ஆடாதோடை வேர், மூக்கிரட்டைவேர், கொடிவேலி வேர், நன்னாரி வேர், அதிமதுரம் ஆகியவைகள் ஒவ்வொன்றும் 5 கிராம் வீதம் நன்றாக இடித்துச் சலித்துச் சூரணமாகச் செய்து வைத்துக்கொண்டு காலை, மாலை வேளைக்கு ½ டீஸ்பூன் வீதம் பாலில் கலந்து உண்டுவர பீனிசம், தலைவலி ஆகியவை குணமாகிவிடும்.

    மூக்கில் சதை வளர்ச்சி

    சதை வளர்ச்சி மூக்கினுள் வந்தால் அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டும் என்ற கருத்து தற்போது நிலவுகிறது. ஆனால் திப்பிலி, தேவதாரு, மஞ்சள், இந்துப்பு, நாயுருவி விதை நல்லெண்ணெயில் பொடி செய்து போட்டுக் காய்ச்சி சதையில் படும்படி மூக்கில் இரண்டொரு துளி விட்டு, தலைக்கும் தேய்த்து வர சதை வளர்ச்சி கரைந்துவிடும்.

    மூக்கில் வரும் முக்கியமான வேறு ஒரு பிரச்சனை மூக்குவிட்ட எலும்பு வளைந்து கொள்ளுதல், அடிபடுதல், தொடர்ந்து ஒரு பக்க மூக்கடைப்பு போன்றவையால் இது உண்டாகும். மூக்கடைப்பால் உண்டான எலும்புக்கோணலை நிவர்த்திக்கலாம். அதற்கான சித்த மருந்துகளும் உண்டு. அவைகளைச் சித்தமருத்துவரை நாடி அவரது மேற்பார்வையில் சிகிச்சை மேற்கொள்வது நலம்.

    மூக்குப் பராமரிப்பு கபரோகங்களுக்கான ஆங்கில மருத்துவத்தில் அதிகமாக உபயோகிக்கப்படும் ஸ்டீராடு சம்பந்தமான மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூக்கில் உள்ள ரோமங்கள் உதிர்ந்து விடுவதாக நம்பப்படுகிறது.

    காற்றை நாம் சுவாசிக்கும்போது வடிகட்டி அனுப்பும் வேலை மூக்கிலுள்ள ரோமத்தினுடையது. எனவே அத்தகைய மருந்துகளை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பது, பொடி போடுவது போன்ற பழக்கங்களால் மூக்கினுள் உள்ள சிலேத்துமப் படலம் பாதிப்படைந்து வாசனை அறியும் தன்மையை இழத்தல், புற்று நோய் மற்றும் ஒவ்வாமைகளை எற்படுத்தி சுவாச சம்பந்தமான பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கி விடுவதால் அத்தகைய பழக்கங்களை விட்டொழிக்க வேண்டும். 



    காது, மூக்கு, தொண்டை மூன்றும் ஒன்றையொன்று தொடர்புடைய பகுதியாக இருப்பதால், இவைகளில் ஒன்று பாதிக்கப்பட்டாலும் மற்ற இரண்டு உறுப்புக்களையும் பரிசோதனை செய்து அதற்காக மருத்துவம் செய்து விடவேண்டும். அவ்வகையில் காது, தொண்டை பிரச்சனைகள் மூக்கைக் கண்டிப்பாக பாதிக்கும். இதை கவனத்தில் கொண்டு மூக்கைப் பராமரிப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

    • சோழ மன்னர்கள் அரியணை ஏறும்போது 5 ஊர்களில் ஏதாவது ஒரு ஊரில்தான் விழாவை நடத்தி பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள்.
    • விசாரசருமன் எப்போதும் சிவசிந்தனையிலேயே இருந்ததால், மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் அத்திமர நிழலின் கீழ் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தான்.

    கும்பகோணம் யாத்திரையின் போது சேங்கனூருக்கு செல்ல அவசியம் நேரம் ஒதுக்குங்கள். கும்பகோணத்தில் இருந்து சென்னை வரும் சாலையில் திருப்பனந்தாள் என்ற இடத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் சேங்கனூர் இருக்கிறது.

    இந்த ஊர் மிகுந்த பழமை சிறப்பு கொண்டது. நாயனார்களில் ஒருவரான சண்டேஸ்வரர் நாயனார் அவதரித்த ஊர். இந்த ஊரில் ஒரு சிவாலயமும், ஒரு பெருமாள் ஆலயமும் உள்ளது. ஆதி காலத்தில் இருந்தே சிவாலயம் புகழ் பெற்று திகழ்கிறது.

    சோழ மன்னர்கள் அரியணை ஏறும்போது 5 ஊர்களில் ஏதாவது ஒரு ஊரில்தான் விழாவை நடத்தி பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள். அந்த 5 ஊரில் முதன்மையான ஊராக சேங்கனூர் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இங்குள்ள சிவாலயத்தில் சகி தேவி அம்மை சமேத சத்தியகிரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தல வரலாற்றை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

    ஒரு காலத்தில் வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் யார் பலம் வாய்ந்தவர் என்கிற போட்டி ஏற்பட்டது. ஆதிசேஷன் பிடியில் இருந்த மேரு மலையை வாயு பகவான் தகர்த்த போது ஒன்பது சிகரங்களாக உடைந்து ஒன்பது கண்டங்களில் விழுந்தது. அதில் கந்தமாதனம் எனும் சிகரம் ஏழு சிகரங்களாக பாரதத்தில் ஏழு இடங்களில் விழுந்தன. அதில் சத்தியம் எனும் சிகரம் இவ்வாலயம் உள்ள இடத்தில் விழுந்தது. விழுந்தது மேருமலை என்பதால் இவ்வூர் புனிதம் மிக்கதாக கருதப்படுகிறது. எனவே முனிவர்களும் மகரிஷிகளும் இங்கு விலங்குகளாகவும் பறவைகளாகவும் மரங்களாகவும் இந்த தலத்தை வழிபட்டு வருகிறார்கள். பிற்காலத்தில் இங்கு கோவில் எழுப்பப்பட்டது.

    விசாரசருமன் எப்போதும் சிவசிந்தனையிலேயே இருந்ததால், மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் அத்திமர நிழலின் கீழ் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தான். அதற்கு பசுக்கள் சொரியும் பாலை அபிஷேகம் செய்தான். இருந்தாலும் பசுவின் சொந்தக்காரருக்கு சரியான அளவு பால் கிடைத்து வந்தது. விசாரசருமரின் இந்த செயலை பார்த்த சிலர், வேள்விக்கு உபயோகப்படுத்தும் பாலை வீணாக்குவதாக கூறினர். இவனது தந்தையும் இதை கேள்விப்பட்டு, மறைந்திருந்து நடப்பதை பார்த்தார். இதையெல்லாம் அறியாத விசாரசருமன் எப்போதும் போல் நீராடி விட்டு தன் பூஜைகளை தொடர்ந்தான். பசுவின் பாலால் அபிஷேகமும் செய்தான். இதைப்பார்த்த தந்தை அவனை அடித்ததுடன், பால்குடங்களையும் தட்டி விட்டார். சிவ பூஜையில் ஆழ்ந்திருந்த விசாரசருமன், பூஜைக்கு இடையூறு செய்தவரை ஒரு கோலால் தாக்க, அதுவே மழுவாக மாறி கால்களை வெட்டியது.


    கால்கள் வெட்டப்பட்டவர் தன் தந்தை என்பதை அறியாத விசாரசருமன் மீண்டும் சிவபூஜையில் ஆழ்ந்தார். இதைக்கண்ட சிவபெருமான் பார்வ தியுடன் தரிசனம் தந்து, "என் மீது கொண்ட பக்தியால் தந்தையின் கால்களை வெட்டினாய். இனி நானே உனக்கு தந்தையாவேன்,"என கூறி தன் கழுத்தில் இருந்த கொன்றை மாலையை விசாரசருமனுக்கு சூட்டி "சண்டிகேஸ்வரர்' ஆக்கினார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 41 வது தேவாரத்தலம் சேங்கனூர். இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சகிதேவியம்மை கோச்செங்கட்சோழன் கட்டிய இந்த மாடக்கோவில் கட்டு மலையின் மேல் உள்ளது.

    கர்ப்பக்கிரகத்தைச் சுற்றிலும் மலை மேல் ஒரு பிரகாரமும் சுற்றிக் கீழே ஒரு பிரகாரமும் உள்ளன. மேருமலையின் ஒரு சிறு பகுதி விழுந்த தலம் ஆகையால் கோவில் சிறு மலையில் அமைந்துள்ளதை போன்ற தோற்றத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலின் மேலே ஒரு பிரகாரம் மற்றும் கீழே ஒரு பிரகாரம் என இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கந்தபுராணம் வழிநடைப்படலம் பகுதியில் இந்த தலம் பற்றிய வரலாறு உள்ளது.

    சூரனை அழிப்பதற்காக வந்த முருகப்பெருமான் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு உருத்திர பாசுபதப் படையைப் பெற்றார். அப்போது தேவதச்சன் இத்தலத்தை ஒரு நகரமாக ஆக்கினான். இதனால் இத்தலம் குமாரபுரம் என்றும் முருகன் வழிபட்டதால் சேய் – முருகன் நல் ஊர் என்பதே – சேய்ஞலூர் என்றும் பெயர் பெற்றது. முருகனுக்கு பெரிய தனி சன்னதி உள்ளது. அனைத்து சிவன் கோவில்களிலும் அருள்பாலிக்கும் சண்டிகேஸ்வரர் இத்தலத்தில் தான் அவதாரம் செய்தார்.

    சிவபெருமான் சண்டிகேஸ்வரருக்கு உன்னை வழிபட்டால்தான் என்னை வழிபட்ட பலன் கிடைக்கும் என்று கூறி சண்டிகேசர் என்ற பட்டமும் அளித்தார். சேக்கிழார் பெரிய புராணத்தில் இத்தல மகிமையை கூறியுள்ளார்.

    நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், சிபிச்சக்கரவர்த்தி, அரிச்சந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இத்தல முருகனை பாடியுள்ளார். சண்டேசுவர நாயனார் வரலாற்றைப் பற்றி தனது பதிகத்தின் 7 வது பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் தேவார பாடல்கள் பாடியுள்ளனர்.

    சத்திய கிரீஸ்வரரை வழிபட்ட பிறகு சீனிவாச பெருமாள் ஆலயத்துக்கும் சென்று வழிபட வேண்டும்.

    வைஷ்ணவர்களின் ஆதாரநூலாக விளங்கும் ஆழ்வார்களால் பாடப்பட்ட நாலாயிர திவ்ய பிரபந்தத்துக்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை பிறந்த ஊராகும். யாமுனசூரி நாச்சியாரம்மாள் தம்பதியினரின் மகனாக வைணவ குடும்பத்தில் அவதரித்தார் பெரியவாச்சான் பிள்ளை, இவர் பெற்றோர் இவருக்கு ஸ்ரீ கிருஷ்ண சூரி என்று பெயரிட்டு அழைத்தனர்.

    சிறு வயது முதலே கல்வி, கேள்விகளில் மட்டுமல்லாமல், இறை உணர்விலும் வழிபாட்டிலும் சிறந்து விளங்கினார் கிருஷ்ண சூரி. பெற்றோர் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்த னர், அவருக்கோ மண வாழ்வில் நாட்ட மில்லை. மனம் எப்பொழுதும் ஏழுமலையானையே நாடியது. பெற்றோர் அவரையும் அவர் மனைவியையும் திருமலை யாத்திரைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சென்று ஏழுமலையானை வழிபட்ட பெரியவாச்சான் பிள்ளை, அங்கேயே இருந்து விட முடிவு செய்தார். அவருக்கு ஏழுமலையானை விட்டுப் பிரிய மனமே இல்லை. ஆனால், அவர் தாய், தந்தையருக்கு ஆற்ற வேண்டிய கடமையை அவருக்கு நினைவூட்டிய இறைவன், ஒரு பிரம்மச்சாரியின் வடிவில் தோன்றி, அவரை ஊருக்குத் திரும்ப உத்தரவிட்டார்.

    ஆனால், பெரியவாச்சான் பிள்ளையோ, சம்சாரம் ஒரு நோய் என்றும் தாம் அதிலிருந்து விடு பட்டு இறைவனை நாட விரும்புவதாகவும் கூறினார். அந்த பிரம்மச் சாரி ஒரு சாளகிராமத்தை அவரிடம் கொடுத்து. "இது சீனிவாச பெருமாள், இதை எடுத்துக் கொண்டு ஊருக்குத் திரும்பு" என்றார். "இதில் உருவ மில்லையே'' என்று பெரியவாச்சான் பிள்ளை கேட்க, "உனக்கு பக்தி இருந்தால் இதில் இறைவன் ஆவிர்பவிப்பார்" என்று கூறினார்.


    சாளகிராமத்தைப் பெற்றுக்கொண்ட பெரியவாச்சான் பிள்ளை மனமின்றி திருப்பதியில் இருந்து புறப்பட்டு வந்தார். சேங்கனூர் அடைந்ததும், கொள்ளிடம் ஆற்றங்கரையில் கணவனும் மனைவியும் நீராடினர். அப்போது ஆற்றங்கரையில் வைத்திருந்த சாளகிராமம் காணாமல் போய் விட்டது. இதைக் கண்டு பெரிய வாச்சான் பிள்ளை பெரும் அதிர்ச்சி அடைந்தார். "பக்தி இருந்தால் இறைவன் ஆவிர்பவிப்பார் என்று பிரம்மச்சாரி கூறினாரே, எனக்கு பக்தியே இல்லை போலும் அதனால்தான் சாளக்ராமம் என்னை விட்டுப் பிரிந்து விட்டது' என்று எண்ணி வேதனைப்பட்டார். இவ்வாறே நாட்கள் கழிந்தன. அப்போது இறைவன் அவர் கனவிலே தோன்றி, "நீ சாளகிராமத்தை தொலைத்த இடத்தில் தான் தோன்றி உள்ளேன்" எனக் கூறினார்.

    உடனே, பெரியவாச்சான் பிள்ளை மகிழ்ச்சியுடன் ஆற்றங்கரைக்குச் சென்று மணலில் இறைவனை தேடினார். ஓரிடத்தில் இறைவனின் முகம் அவருக்கு தென்பட்டது. உடனே அங்கு ஆழமாகத் தோண்ட, சீனிவாச பெருமாள் முழு உருவமாக அங்கு மணலுக்குள் காட்சி அளித்தார். பெரிய வாச்சான் பிள்ளை ஆனந்தக் கூத்தாடினார்.

    ஒரு மாட்டு வண்டியை அமர்த்திக் கொண்டு இறைவனை ஏற்றி வந்தார். தற்சமயம் சீனிவாசர் ஆலயம் அமைந்துள்ள இடம் வந்ததும் வண்டியின் அச்சு முறிந்தது. இங்குதான் இறைவன் வீற்றிருக்க விரும்புகிறார் என்று எண்ணிய பெரியவாச்சான் பிள்ளை, அங்கே இறை வனை பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பினார்.

    பின்னர், அவர் ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கும் ரங்கநாத சுவாமியை தரிசிக்க எண்ணினார். அங்கு அவருக்கு நம்பிள்ளை ஆச்சார்யராக அமைந்தார், அவர் வழி காட்டுதலின் பேரில் நாலாயிர திவ்ய பிரபந்தத்துக்கு பாஷ்யம் அமைத்தார். பெரிய பெருமாளே அவருக்கு, 'அபயபிரதராஜன்' என்றும் ரங்கநாயகித் தாயார் அவருக்கு, வியாக்யான சக்ரவர்த்தி என்றும் விருது வழங்கி கவுரவித்தனர்.

    ஸ்ரீரங்கத்தில் இருந்து பல நூல்களை இயற்றிய அவர் தன் இறுதி காலம் நெருங்குவதை அறிந்து சேங்கனூர் திரும்பினார். அங்கு அவருக்காக அர்ச்சவதாரமாக எழுந்தருளிய சீனிவாசப் பெருமானை அடைந்து, சரணாகதியாக அவர் பாதத்தில், 'அடிக் கீழமர்ந்து புகுந்தேனே' எனக் கூறி ஐக்கியமானார்.

    இன்றும் சீனிவாசப் பெருமானின் பாதத்தில் சாளகிராம ரூபத்தில் பெரியவாச்சான் பிள்ளை காணப்படுகிறார்.

    வழக்கமாக சீனிவாசப் பெருமாள் அபய மற்றும் வரத ஹஸ்தத்துடன் அமைந்திருப்பது வழக்கம். ஆனால் இங்கோ இடுப்பில் கை வைத்து மிக ஒய்யாரமாக பெரியவாச்சான் பிள்ளைக்காக எழுந்தருளி இருக்கிறார். திருப்பதியில் நடக்கும் முக்கிய உற்சவங்கள் இங்கு நடத்தப்படுகின்றன. மேலும், அங்கு செலுத்த வேண்டிய பிரார்த்தனைகளையும் பக்தர்கள் இங்கு நிறைவேற்றுகிறார்கள். பெரியவாச் சான் பிள்ளை திருநட்சத்திரமான ஆவணி ரோகிணியும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    கோவிலுக்கு அடுத்த தெருவில் பெரியவாச்சான் பிள்ளை அவதரித்த திருமாளிகை அமைந்துள்ளது. அதில் அவர் ஒவியம் மற்றும் சுவாமி படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு எதிரே அமைந்துள்ள ஸ்ரீ அண்ணாவின் பூர்வீக இல்லத்தில் பெரியவாச்சான் பிள்ளை ஆராதித்த விக்ரகங்கள் பாதுகாக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் தரிசிப்பது மிகப்பெரிய புண்ணியமாகும்.

    • ஒரு எழுத்தாளன் என்கிற முறையில் அவரிடம் எனக்குப் பிடித்தது பணிவுடைமை என்கிற ஒரு பெருங்குணம்தான்.
    • நமது இந்திய அரசு 2008-ம் ஆண்டு அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி, அவருடைய வெற்றிக் கிரீடத்தில் ஒரு வைரக்கல்லைப் பதித்தது.

    மனித இயல்புகளில் இரண்டு வகை உண்டு. முதல் வகை எதையும் கொடுக்க விரும்பாதவர்கள். இப்படிப்பட்டவர்கள் 'இது வேண்டுமா?' என்று கேட்பார்கள். இரண்டாவது வகையினர் எதையும் கொடுக்க விரும்புபவர்கள். இவர்கள் 'இது போதுமா?' என்று கேட்பார்கள். இதில் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தன் அவர்கள் இரண்டாவது வகை.

    அவருடைய ஈகைக் குணத்தையும், தர்ம சிந்தனையையும் பலரும் சொல்லிக் கேட்டு வியந்து போயிருக்கிறேன். தந்தை சி.பா.ஆதித்தனார் அய்யா அவர்கள் தடம் பதித்த வழியில் தவறாமல் நடந்து 'தினத்தந்தி' நாளிதழை தமிழர்களின் சுவாச மூச்சாக மாற்றியவர். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நிதானமாகச் செயல்பட்டு பத்திரிகை தர்மத்தைக் காத்தவர்.

    ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி உண்டு. 'திறமை இருந்தால் ஒரு தடவை வெல்லலாம். பொறுமை இருந்தால் ஒவ்வொரு தடவையும் வெல்லலாம்.'

    இந்தப் பொன்மொழி சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றாக அமைந்துவிட்டது. ஏனென்றால் அவர் பத்திரிகைத் துறையில் மட்டுமே வெற்றி பெற்றுவிடவில்லை. அதையும் கடந்து கல்வி, விளையாட்டு, தொழில், சமுதாயப் பணி, ஆன்மிகம் என்று பல்வேறு துறைகளையும் தொட்டு வெற்றிக் கனிகளைப் பறித்தவர். இந்தியத் துணைக் கண்டத்தில் பெரும் சாதனையாளராகப் போற்றப்பட்டவர்.

    இவை எல்லாவற்றைக் காட்டிலும் நான் கேள்விப்பட்ட ஒரு தகவல் வியப்பை அளிப்பதாக உள்ளது. அவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது என்.சி.சி. என்று சொல்லப்படும் தேசிய மாணவர் படைக்குத் தலைவராக இருந்தார். அதற்குப் பிறகு சென்னையில் உள்ள ஒட்டுமொத்தக் கல்லூரிகளின் தேசிய மாணவர் படைகளுக்கும் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பதுதான் அந்தத் தகவல்.

    சி.பா.ஆதித்தனார் அவர்கள் அடித்தட்டு மக்களும், ஓரளவு மட்டுமே படித்த எளிமையான மக்களும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் 1942-ம் வருடம் தினத்தந்தி நாளிதழைத் தொடங்கினார். அப்போது சிவந்தி ஆதித்தன் அவர்கள் கல்வி பயிலும் பருவத்தில், ஒரு மாணவனாக இருந்தார். தான் ஒரு பத்திரிகை அதிபரின் மகன் என்கிற உயர்ந்த இடத்தில் இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் அவர் பள்ளியிலிருந்து திரும்பியதும் பத்திரிகை அலுவலகம் சென்று அன்றைய தினம் வெளியாக இருக்கும் செய்திகளைப் படித்து, பிழைத்திருத்தம் செய்து அந்தச் செய்திகளை எல்லோரும் விரும்பிப் படிக்கும்படி செய்வார். மேலும், பணியாட்கள் வேலைக்கு வராத நாட்களில் அவரே செய்தித்தாள்களை நேர்த்தியாய் அடுக்கி, பார்சல் கட்டி, ரெயில் நிலையத்திற்குச் சென்று அனுப்பி வைத்ததும் உண்டு. தன்னுடைய தந்தையாரைப் போலவே தொழிலை ஆழமாக நேசித்த காரணத்தினால்தான் பல்வேறு வெற்றிகளின் உச்சிகளை அவரால் தொட முடிந்தது.

    தன்னுடைய 23-வது வயதில், அதாவது 1959-ம் வருடம் 'தினத்தந்தி'யின் நிர்வாகப் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டபோது, சென்னை, மதுரை, திருச்சி பதிப்புகள் மட்டுமே வந்து கொண்டிருந்தன. அதற்குப் பிறகு அவருடைய நிர்வாகத் திறமையின் காரணமாக, 'தினத்தந்தி' பிரமிக்கத்தக்க வளர்ச்சியடைந்து மும்பை, பெங்களூரு, கோவை உட்பட 15 நகரங்களில் விஸ்வரூபம் எடுத்தது. நாளிதழ்களின் விற்பனையில் ஒரு புரட்சியை உண்டாக்கிய சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார்.

    இத்தனை புகழுக்கும் காரணம் அவர் தன்னுடைய உழைப்பில் காட்டிய வாய்மை, நேர்மை, தூய்மை என்று ஒரு பட்டியலே போடலாம். ஆனால் ஒரு எழுத்தாளன் என்கிற முறையில் அவரிடம் எனக்குப் பிடித்தது பணிவுடைமை என்கிற ஒரு பெருங்குணம்தான்.

    நான் முதன்முதலில் அவரைச் சந்தித்தது 20-9-1987 அன்று சென்னையில் நடைபெற்ற 'ராணி' வார இதழின் வெள்ளி விழா ஆண்டின் மேடையில்தான். 'ராணி' வார இதழில் என்னுடைய தொடர்கதைகள் அதிகமாக வெளிவந்த காரணத்தால் என்னை மேடையில் அமர வைத்து வெள்ளித் தட்டு பரிசாக வழங்கிப் பாராட்டினார். பாராட்டியதோடு நின்றிருந்தால் அது வெறும் ஒரு மரியாதைக்குரிய நிகழ்வாகவே போயிருக்கும். ஆனால், சிவந்தி ஆதித்தன் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.

    அந்த நிகழ்ச்சியில் எனக்குப் பொன்னாடை அணிவித்து, பரிசு ஒப்படைத்தார், தமிழ்நாட்டின் முதன்மைச் செயலாளராக இருந்த வர பத்மநாபன் ஆவார். அவரிடம் சிவந்தி ஆதித்தன் அவர்கள் இப்படிச் சொன்னார்:

    "இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கிற எழுத்தாளர்களில் ராஜேஷ்குமார்தான் நம்பர் ஒன். இவர் தொடர்கதை எழுதாத பத்திரிகையே இங்கு இல்லை. 'தினத்தந்தி'யிலும், 'ராணி'யிலும் நிறைய எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதால் இவரும் எங்கள் பத்திரிகைக் குடும்பத்தில் ஒருவர். நாளைய வெற்றி எழுத்தாளர்" என்றார்.

    இப்படி அவர் சொல்லவும் பத்மநாபன் அவர்கள் என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, "இனிமேல் உங்களுக்கு எவ்வளவு பெரிய விருது கிடைச்சாலும்... சிவந்தி சார் சொன்ன பாராட்டுக்கு இணையாகாது. அவர் ஒரு எழுத்தாளரை இப்படிப் பாராட்டுகிறார் என்றால்... அந்த எழுத்தாளர் தன்னுடைய வாழ்நாளில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தப் போகிறார் என்று அர்த்தம். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    சிவந்தி ஆதித்தன் அவர்கள் சொன்னதை அரசு தலைமைச் செயலாளர் பத்மநாபன் வழிமொழிந்த அந்த வாழ்த்து, அதற்குப் பிறகு வந்த நாட்களில் பலிக்க ஆரம்பித்தது.

    1987-ம் ஆண்டு வரை நூற்றுக்கும் குறைவான நாவல்களை மட்டுமே எழுதியிருந்த நான், அடுத்த 11-வது ஆண்டின் முடிவில் அதாவது 1998-ம் வருடம் 'குமுதம்' வார இதழில் ஆயிரமாவது நாவலை ஒரு தொடர்கதையாக எழுதிக்கொண்டு இருந்தேன். அதைத் தொடர்ந்து இந்த 2024-ம் ஆண்டு வரை 1,500 நாவல்களுக்கும் மேல் எழுதிவிட்டேன். இதனை ஒரு சாதனையாக ஏற்றுக்கொண்ட 'இண்டியன் புக் ரிக்கார்ட்ஸ்' (IBR) அமைப்பு எனக்கு விருது கொடுத்து பெருமைப்படுத்தியது.

    நான் இப்படியொரு சாதனையை நிகழ்த்துவேன் என்று 1987-ம் வருடமே கணித்தவர் டாக்டர் சிவந்தி ஆதித்தன் அவர்கள். அவரிடம் இறையருள் பரிபூரணமாக இருந்த காரணத்தினால்தான் அவர் நினைத்ததெல்லாம் நடந்தது. தொட்டதெல்லாம் துலங்கியது. பட்டங்களும், விருதுகளும், உயர் பதவிகளும் அவரைத் தேடி வந்து தழுவிக் கொண்டன.

    அவருடைய தந்தை ஆதித்தனார், திருச்செந்தூரில் நிறுவிய ஒரு கல்லூரியை பல்கலைக்கழக அந்தஸ்த்துக்கு கொண்டு சென்று கல்வியாளர்களின் புருவங்களை உயர வைத்தார். அது மட்டுமல்ல... தமிழ்நாட்டில் இருந்த அத்தனை பல்கலைக்கழகங்களிலும் செனட் உறுப்பினராகவும், சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்து அந்தப் பதவிகளுக்கு அழகும் பெருமையும் சேர்ந்தார். பல்கலைக்கழகங்கள் போட்டி போட்டுக்கொண்டு 'டாக்டர்' பட்டங்களை அவருக்கு அளித்து தங்களைக் கவுரவப்படுத்திக் கொண்டன. எல்லாவற்றுக்கும் மேலாக, சென்னை மாநகர ஷெரீப் ஆக இரண்டு முறை நியமிக்கப்பட்டார். மிகச் சிறந்த கல்வியாளராக இருந்துகொண்டே, விளையாட்டுத் துறையிலும், ஈடுபாடு கொண்டு, உலக அரங்கில் இந்திய நாட்டின் திறமையை மற்ற நாடுகளுக்கு உணர வைத்தவர். இதன் காரணமாகவே அகில இந்திய கராத்தே பெடரேஷன் அமைப்பின் தலைவராகவும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக மக்களின் உள்ளங்களில் பெருமைமித உணர்வை ஏற்படுத்தினார்.

    எல்லாவற்றுக்கும் மேலாக இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் அவர் செய்த மகத்தான பணிகளைப் பாராட்டி, நமது இந்திய அரசு 2008-ம் ஆண்டு அவருக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி, அவருடைய வெற்றிக் கிரீடத்தில் ஒரு வைரக்கல்லைப் பதித்தது.

    இலக்கியம், கல்வி, விளையாட்டுத் துறைகளில் கவனம் செலுத்தியவரின் பார்வை ஆன்மிகத்தின் மீதும் விழுந்தது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் ஏராளமான ஆலயத் திருப்பணிகள் உயிர்ப்புக்கு வந்து, லட்சக்கணக்கான பக்தர்களின் மனங்களைக் குளிர வைத்தது.

     

    1987-ம் வருடம் 'ராணி' வார இதழின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் அவரைச் சந்தித்த நான், அதற்குப் பிறகு 13-வருடங்கள் கழித்து 2000-மாவது வருடம் 'ராணி முத்து' நாவலின் வெள்ளி விழாவின்போது மீண்டும் சந்தித்தேன். விழா மேடையில் எழுத்தாளர் சுஜாதா, கவிஞர் வைரமுத்து அருகில் எனக்கு இருக்கை போடப்பட்டு இருந்தாலும், மேடையின் மையத்தில் அமர்ந்திருந்த சிவந்தி ஆதித்தன் அவர்கள் இரண்டு முறை என்னருகே வந்து பேசிவிட்டுச் சென்றார்.

    முதல்முறை நலம் விசாரித்தார். இரண்டாவது முறை என்னிடம் பேச வந்தபோது சிரித்துக்கொண்டே இப்படிச் சொன்னார்:

    "ராஜேஷ்குமார்... 'ராணி முத்து' மாத நாவல் இந்த 2000-மாவது வருடம் வெள்ளி விழா கொண்டாடுகிறது. இதுவரை 299 நாவல்கள் வெளிவந்துள்ளன. அடுத்த மாதம் வர இருப்பது 300-வது நாவல். இந்த 300-வது நாவலை நீங்கள்தான் எழுத வேண்டும். விழா முடிந்து போகும்போது 'ராணி' இதழின் ஆசிரியர் அ.மா.சாமி அவர்களிடம் நாவலுக்குரிய தலைப்பைச் சொல்லிவிடுங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இது 300-வது நாவல். சிறப்பாக இருக்க வேண்டும்" என்றார்.

    நான் திகைப்போடு மெல்ல குரலை இழுத்தேன்.

    "சார்... என்னைவிட புகழ்பெற்ற எழுத்தாளர்களெல்லாம் இருக்கும்போது எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறீர்கள். கண்டிப்பாக 300-வது நாவல் சிறப்பானதொரு படைப்பாக அமையும்" என்றேன்.

    உடனே அவர், "அது தெரிந்துதானே உங்களை எழுதச் சொல்றேன்" என்றவாறு என் தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

    விழா நல்லபடியாய் நடந்து முடிந்ததும் 'ராணி' வார இதழின் ஆசிரியர் அ.மா.சாமி அவர்கள் புன்னகையோடு என்னை நெருங்கினார்.

    "என்ன ராஜேஷ்குமார்... 'ராணி முத்து'வின் 300-வது நாவல் பற்றி அய்யா உங்ககிட்ட சொல்லியிருப்பாருன்னு நினைக்கிறேன்" என்றார்.

    "ஆமாம்... சொன்னார்! என் மேல் ரொம்பவும் நம்பிக்கை வெச்சிருக்கார். எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை" என்றேன்.

    "அய்யாவோட சாய்ஸ் எப்பவுமே சரியாத்தான் இருக்கும். நாவலுக்கான தலைப்பைச் சொல்றீங்களா...? இந்த வார 'ராணி' புத்தகத்தில் விளம்பரம் செய்ய வசதியாய் இருக்கும். தலைப்பு கொஞ்சம் புதுமையாய் இருக்கட்டும்" என்று அவர் சொன்னதும், நான் கூறிய தலைப்பு இதுதான்: "ராணி 2000".

    அ.மா.சாமி அவர்கள் திகைத்தார். நான் பேச்சைத் தொடர்ந்தேன்.

    "சார்... இது 2000-மாவது வருடம். 'ராணி முத்து' இதழ் இந்த ஆண்டில் வெள்ளி விழாவைக் கொண்டாடறதால 'ராணி 2000' என்று தலைப்பு வைக்கிறேன். இந்தத் தலைப்புக்கு ஏற்ற மாதிரி புதுமையான கதையாகவும் இருக்கும். இந்தக் கதையில் வரும் கதாபாத்திரத்தின் பெயர் ராணி" என விளக்கம் கொடுத்தேன்.

    "அருமை. நாவல் எப்போது கிடைக்கும்?" எனக் கேட்டார்.

    "பத்து நாளைக்குள்ளே எழுதி அனுப்பிடறேன்" என உறுதி அளித்தேன்.

    சொன்னபடியே அனுப்பி வைத்தேன். நாவல் வெளிவந்து பெரிய வரவேற்பு பெற்றது. இன்றைக்கு நான் எல்லோருக்கும் தெரிந்த ஒரு எழுத்தாளனாக இருப்பதற்குக் காரணம் அன்றைய காலக்கட்டத்தில் எனக்கு எழுத வாய்ப்பளித்த பத்திரிகையாளர்கள்தான் என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனால், பல பத்திரிகைகளை நடத்தி வந்த சிவந்தி ஆதித்தன் அவர்கள் இன்னும் ஒருபடி மேலே போய், என்மீது தனிப்பட்ட கவனம் செலுத்தியதும் என் வெற்றிக்கு ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.

    'ராணி'யில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட தொடர்கதைகளையும், 'ராணி முத்து'வில் 50-க்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதியிருக்கிறேன். ஆரம்பக் காலத்தில் இந்தத் தொடர்கதைகளும், நாவல்களும்தான் என்னை வாசகர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. என் தொடர்கதைகளுக்கான விளம்பரம் 'தினத்தந்தி' நாளிதழில் கால் பக்க அளவுக்கு வண்ணமயமாக வெளிவந்து வெகுவாகப் பிரபலப்படுத்தியது.

    சிவந்தி ஆதித்தன் அவர்கள் என்னை மட்டுமல்ல... மற்ற எழுத்தாளர்களையும் நல்ல முறையில் கவுரவித்துப் பாராட்டுவார். மேடையில் அமர வைத்து, அவர்களைப் பேச வைத்து அழகு பார்ப்பார்.

    ஒரு துறையில் புகழ்பெற்ற ஒரு மனிதர் எல்லாத்துறையில் இருப்பவர்களையும் கவர முடியாது. ஆனால் சிவந்தி ஆதித்தன் அவர்கள் எல்லோரையும் ஈர்க்கும்படியாக நற்பண்புகள் கொண்டவர். 'தினத்தந்தி' இதழை எங்கே யார் பார்த்தாலும் சரி, அவருடைய புன்னகை பூத்த முகம் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சத் திரையிலும் நிழலாடும்.

    அவர் எளிமையின் வடிவமாக இருந்தாலும் புகழில் எவரெஸ்ட் சிகரம். வெறும் காகிதத்தை ஆயுதமாக மாற்றியவர். இறையருளுக்குப் பாத்திரமானவர். காயாமொழி என்னும் விளைநிலத்தில் விளைந்த கனிமரம் அவர்.

    இதுபோன்று எப்படிப் பாராட்டினாலும் அதற்குப் பொருந்திப் போகின்ற உயர்ந்த மனிதர் சிவந்தி ஆதித்தன் அவர்கள்.

    அவர் மறையவில்லை. என்றென்றும் நம் நெஞ்சங்களில் உறைகிறார் என்பதே உண்மையிலும் உண்மை.

    - பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார்

    9789093356

    • விஞ்ஞானி ராமனோ ஒரு கணம் கூடத் தாமதிக்கவில்லை.
    • பையன் கண்ணீர் மல்க பாபாவிடம் வந்து நடந்ததை எல்லாம் சொன்னான்.

    தமிழ்நாட்டில் திருச்சி மாநகருக்கு அருகில் உள்ள திருவானைக்காவலில் ஒரு எளிய பள்ளி ஆசிரியருக்கு மகனாகப் பிறந்து உலகப் புகழ் பெற்ற நோபல் பரிசைப் பெற்ற பெரும் விஞ்ஞானி யார்?, பாரத் ரத்னா பட்டதைப் பெற்றவர் யார் என்று கேட்டால் அனைவரும் மன மகிழ்ச்சியோடுக் கூறும் பெயர் சர் சி. வி.ராமன். அனைத்து இளைஞர்களையும் அறிவியலில் ஈடுபடுத்தப் பாடுபட்டு அவர்களுக்கென இடைவிடாது உழைத்த விஞ்ஞானி இவர்.

    பிறப்பும் இளமையும்: சந்திரசேகர் ராமநாதன் ஐயருக்கும் பார்வதி அம்மாளுக்கும் பிறந்த எட்டு பேரில் இரண்டாவது மகனாக 1888-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி தோன்றியவர் சி.வி,ராமன்.

    தந்தையார் உள்ளூர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர். தந்தையாருக்கு ஆந்திர பிரதேசத்தில் நரசிம்மராவ் கல்லூரியில் இயற்பியல் பிரிவில் வேலை பார்க்க அழைப்பு வந்தது. அவருடன் சென்ற ராமன் விசாகப்பட்டினத்தில் பள்ளிப் படிப்பை முடித்தார். 13 வயதில் இண்டர்மீடியட்டில் தேறினார். பின்னர் பட்டம் பெற்றதும் அரசுப் பணியில் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார்.

    அப்போதே அறிவியலில் மிக்க ஆர்வம் கொண்டு தனிப்பட்ட முறையில் பல சோதனைகளைச் செய்ய ஆரம்பித்தார்.

    கத்தாவில் 1917-ல்,; புதிதாக ஏற்படுத்தப்பட்ட பாலித் பீட இயற்பியல் பிரிவில் பேராசிரியராகச் சேர்ந்தார்.

    1926-ல் இயற்பியல் ஆய்விதழ் ஒன்றை நிறுவி அதன் ஆசிரியராகப் பணியாற்ற ஆரம்பித்தார்.

    கண்டுபிடிப்புகள்:

    இங்கிலாந்திற்கு முதல் தடவையாக மத்தியதரைக் கடலில் கப்பலில் அவர் சென்ற போது கடல் நீர் ஏன் நீல நிறமாகத் தோன்றுகிறது என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றியது. சிதறிய ஒளியாலேயே நீல நிறமாக அது தோன்றுகிறது என்று அப்போது கூறப்பட்ட காரணம் அவருக்கு ஏற்புடையதாக இல்லை. ஒளி ஊருவிச் செல்லும் ஊடகம் திடப்பொருளாகவோ திரவப் பொருளாகவோ அல்லது வாயுப் பொருளாகவோ எதாக இருந்தாலும் சரி, அதில் ஒளி செல்லும் போது ஒளியின் மூலக்கூறு சிதறல் ஏற்படுகிறது என்பதைத் தன் ஆய்வுகளின் மூலமாக அவர் கண்டறிந்தார். இதை ஸ்பெக்டோகிராப் என்ற கருவியைப் பயன்படுத்தி அவர் கண்டார்.

    அவர் கண்டுபிடித்த கண்டுபிடிப்பு ராமன் எபெக்ட் அதாவது – ராமன் விளைவு என்று அழைக்கப்பட்டது.

    1928-ம் ஆண்டு புதிய கதிர்வீச்சு என்னும் தலைப்பில் தனது ஆய்வு முடிவுகளை அவர் வெளியிட்டார். இது அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.

    1930-ம் ஆண்டு உலகின் தலை சிறந்த விருதான நோபல் பரிசு வெள்ளையரல்லாத ஒரு இந்தியரான இவருக்கு அளிக்கப்பட்டது. இதை அறிவியலில் பெற்ற முதல் இந்தியர் இவரே. (ரவீந்திரநாத் தாகூர்1913-ல் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றார்.)

    ச.நாகராஜன்

    ச.நாகராஜன்

    இசைக் கருவிகள் மீது தீரா ஆர்வம் கொண்ட ராமன், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட இசைக் கருவிகள் பற்றியும் அதில் எழுப்பும் அதிர்வலைகள் ஏற்படுத்தும் ஒலியின் நுட்பத்தையும் நுண்மையாக ஆராயலானார்.

    இந்தக் கண்டுபிடிப்புகளும் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.

    பார்க்கின்ற எதையும் அறிவியல் கண் கொண்டு பார்ப்பதே அவரது பழக்கமாக ஆனது.

    அறிவியலில் அனைவரும் ஈடுபட வேண்டும், இந்தியா அறிவியல் நாடாகத் திகழ வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.

    முதன்முதலில் இந்தியன் சயின்ஸ் அகாடமியை ஆரம்பித்து அதன் தலைவராகவும் இருந்து பணியாற்றினார்.

    இவரது வாழ்க்கையில் நூற்றுக் கணக்கான சுவையான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு சம்பவமும் இவரது அரிய குணநலன்களை வெளிப்படுத்துபவையாக அமைந்தவையாகும். எடுத்துக்காட்டிற்குச் சில சம்பவங்கள் இதோ:

    பத்து கிலோவாட் மூளை!

    ஒரு முறை அவரது இந்தியன் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டில் வேலை பார்த்து வந்த விஞ்ஞானியான பிஷரொடி என்பவர் மிகவும் சோர்வுடன் அமர்ந்திருந்தார். அவர் சோர்ந்திருப்பதைப் பார்த்த ராமன் காரணம் என்ன என்று கேட்டார்.

    "இதே போன்று சோதனையை பிரிட்டனில் செய்து வரும் விஞ்ஞானி ஐந்து கிலோவாட் எக்ஸ்-ரே டியூபை வைத்திருக்கிறார். நானோ ஒரு கிலோவாட் எக்ஸ்-ரே டியூபை வைத்திருக்கிறேன்" என்று அவர் தனது சோர்விற்கான காரணத்தைக் கூறினார்.

    "ஓ! இந்தப் பிரச்சனையை சுலபமாகச் சமாளித்து விடலாமே! இந்த சோதனைக்கு புத்து கிலோவாட் மூளையைப் பயன்படுத்து!" என்று சிரித்தவாறே பதில் கூறினார் ராமன்.

    இப்படி பத்து கிலோவாட் மூளை உள்ளவர்களைக் கண்டுபிடிப்பதில் அவர் வல்லவராக இருந்தார்.

    ஹோமி ஜே.பாபா, விக்ரம் சாராபாய் ஆகியோரின் திறனைக் கண்டு அவர்களைப் பாராட்டினார் ராமன். இந்த இருவருமே பின்னால் இந்திய விண்வெளி விஞ்ஞானத்தில் பெரும் சாதனை நிகழக் காரணமாக அமைந்தனர்.

    1967-ம் ஆண்டு உஸ்மேனியா பல்கலைக்கழக கோல்டன் ஜூபிளி கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக ராமன் அழைக்கப்பட்டார். அவர் தனது உரையில் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர்.

    அந்தச் சமயம் அவர் அதனது லாபரட்டரியில் வைரங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். வைரங்களைப் பற்றித் தனது சிறப்புரையில் அனைத்து விவரங்களையும் தந்து அனைவரையும் அவர் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

    உரை முடிந்த பின்னர் ஒரு மாணவர் எழுந்திருந்து, "சார்! நீங்கள் வைரங்களைப் பற்றிய அனைத்து அம்சங்களையும் விளக்கி விட்டீர்கள். ஆனால் வைரங்களை எப்படிச் செய்வது என்பது பற்றி ஒன்றுமே கூறவில்லையே" என்று கேட்டார்.

    இடக்கான இந்தக் கேள்வி அங்கிருந்தோரை துணுக்குற வைத்தது.

    ஆனால் விஞ்ஞானி ராமனோ ஒரு கணம் கூடத் தாமதிக்கவில்லை.

    "அது ரொம்ப சுலபம். நீங்கள் ஒரு கரித்துண்டை எடுத்துக் கொள்ளுங்கள். பூமிக்கடியில் ஆயிரம் அடி தோண்டி அதைப் புதைத்து விடுங்கள். ஆயிரம் ஆண்டு காத்திருங்கள். மீண்டும் தோண்டுங்கள். உங்களுக்கு வைரம் கிடைத்து விடும்" என்றார்.

    அரங்கம் அனைவரின் கரவொலியால் அதிர்ந்து போனது! அவரது பதிலை அனைவரும் ரசித்து மகிழ்ந்தனர் – கேள்வி கேட்டவர் உடபட!

    உடனடியாக பதில் கூறுவதில் வல்லவர் அவர்.

    நேர்மையே வெல்லும்!

    இன்னொரு சம்பவம் இது.

    ஒரு சமயம் பகவான் சத்யசாயி பாபா பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்சுக்கு விஜயம் செய்தார்.

    அதனுடைய டைரக்டரும் சிறந்த விஞ்ஞானியுமான டாக்டர் பகவந்தம் பாபாவின் பக்தராவார். அவர் பகவந்தத்தின் வீட்டில் தங்கியிருந்தார். அந்த மாடியில் கிளார்க் வேலைக்காக ஒரு நேர்காணல் பேட்டி நடந்து கொண்டிருந்தது. அதில் கலந்து கொண்ட ஒரு பையன் சோகமாக ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்த பாபா அவனை அழைத்து, "என்ன விஷயம்?" என்று கேட்டார்.

    இண்டர்வியூவில் கலந்து கொண்ட தன்னால் சரியாகப் பதில் சொல்ல இயலவில்லை என்றும் இண்டர்வியூவை நடத்திய பெரும் விஞ்ஞானியான ராமன் தன்னைத் திட்டி அனுப்பி விட்டதாகவும் அவன் வருத்தத்துடன் சொன்னான்.

    பாபா, "அது சரி, நீ இங்கு வருவதற்காக அலவன்ஸ் ஏதாவது உனக்குத் தந்தார்களா" என்று கேட்டார்.

    அந்தப் பையன், " ஆமாம். நான் பக்கத்து கிராமத்தில் இருந்து வருகிறேன். வந்து போக அலவன்ஸாக பதினைந்து ரூபாய் தந்திருக்கிறார்கள். போக வர செலவு பத்து ரூபாய். மீதி ஐந்து ரூபா என்னிடம் இருக்கிறது" என்றான்.

    உடனே பாபா, " சி.வி. ராமன் இப்போது மாடியிலிருந்து இறங்கி வருவார். அவரிடம் மீதி இருக்கும் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடு" என்றார்.

    பையனும் அதற்கு ஒப்புக் கொண்டு சி.வி,ராமனுக்காகக் காத்திருந்தான்.

    ராமன் கீழே இறங்கி வந்து காரில் ஏறும் சமயத்தில் அங்கு நின்று கொண்டிருந்த பையனைப் பார்த்தார். "நீ இன்னமுமா இங்கு நிற்கிறாய்?" என்றார்.

    பையன் அவர் அருகில் சென்று, "கொடுத்த பதினைந்து ரூபாயில் எனக்குச் சேர வேண்டியது போக மீதி ஐந்து ரூபாய் இருக்கிறது. அதை உங்களிடம் தருவதற்காகத் தான் காத்து நிற்கிறேன்" என்றான்.

    இதைக் கேட்டவுடன் அளவிலா மகிழ்ச்சி அடைந்த ராமன், "ஆஹா! இந்த வேலைக்கு உன்னைப் போன்ற நேர்மையுடைய ஒருவன் தான் வேண்டும்" என்று கூறி விட்டு அங்கிருந்த நிறுவன அதிகாரியைக் கூப்பிட்டு உடனடியாக அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரை அடித்துத் தர உத்தரவிட்டார்.

    ஐந்து ரூபாயையும் அவனிடமே திருப்பித் தந்தார்.

    பையன் கண்ணீர் மல்க பாபாவிடம் வந்து நடந்ததை எல்லாம் சொன்னான்.

    பாபா, "பார்த்தாயா! நேர்மைக்குக் கிடைத்த பரிசை! நேர்மையை எப்போதும் கடைப்பிடி" என்று அருளுரை பகிர்ந்தார்.

    ஏராளமான விருதுகளை சி.வி.ராமன் பெற்றுள்ளார்.

    1929-ல் இங்கிலாந்து அரசியார் அவருக்கு சர் பட்டத்தை அளித்துக் கவுரவித்தார்.

    1954-ம் ஆண்டு இந்திய அரசு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை அவருக்கு வழங்கி கவுரவித்தது.

    1928-ல் அவர் பிப்ரவரி 28-ந் தேதி அவர் தனது மாபெரும் கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்ததையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் நாளை இந்திய அரசு அதை தேசிய அறிவியல் நாளாகக் கொண்டாட ஆணை பிறப்பித்தது.

    மறைவு: 1970-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் நாளன்று தனது 82-ம் வயதில் மறைந்தார். தனது மனைவியிடம் மிக மிக எளிமையாக எந்த வித சடங்குமின்றி தான் எரியூட்டப்பட வேண்டும் என்று கூறினார்.

    ஊக்கமூட்டும் உரைகள்

    சர் சி.வி, ராமனின் ஊக்கமூட்டும் பொன்மொழிகள் ஏராளம்.

    அவற்றில் முக்கியமான இரண்டு இதோ:

    அறிவியல் என்பது சரியான விடைகளைக் கண்டுபிடிப்பது அல்ல; சரியான கேள்விகளைக் கேட்பதே அறிவியல் ஆகும்.

    நாம் ஒரு தாழ்வு மனப்பான்மையைக் கொண்டிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவில் இன்றையத் தேவை என்னவெனில் அந்த தோல்வி மனப்பான்மையை அழிப்பது தான்!"

    ஆம், தோல்வி மனப்பான்மையை உதறித் தள்ளிவிட்டு இந்தியர்கள் அனைவரும் ஆக்கபூர்வமாக மேலெழுவோமாக! உலகின் தலைமை இடத்திற்கு முன்னேறுவோமாக!

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    • எண்ணெய் தோய்ந்த பதார்த்தங்களும், குளிர்ச்சி மிகுந்த காய்கறிகளும், உணவுகளும் கபத்தை அதிகரிக்கும்.
    • ரத்தக்குழாய் அடைப்பினைப் போக்க பூண்டு, மஞ்சள், இலவங்கப்பட்டை, சீரகம், சுக்கு, வெந்தயம் ஆகிய கடைச்சரக்குகள் உதவும்.

    முதுமையில் அதிகம் பாதுகாக்க வேண்டிய உடல் உறுப்புகளில் இதயத்திற்கு அடுத்தாற் போல் முக்கியத்துவம் பிடிப்பது மூளை தான். ஏனெனில் உலக அளவில் மாரடைப்புக்கு அடுத்தாற்போல், அதிக இறப்புகளை ஏற்படுத்தும் இரண்டாவது நோய்நிலையாக இருப்பது 'பக்கவாதம்' எனும் நோய் நிலை. பக்கவாதம் எனும் உடலை முடமாக்கும் நோய்நிலையானது, முதுமையில் பிறருக்கு கூடுதல் சுமை தருகிறோம் என்று மனதிற்கும் பாரத்தை உண்டாக்கி விடுகிறது.

    உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி மக்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதாகவும், அதில் ஆண்டுக்கு 50 லட்சம் பேர் இறப்பதாகவும், 50 லட்சம் பேர் முழுமையாக முடங்கிப் போவதாகவும் புள்ளி விவரங்கள் கூறுவது முதுமைக்கு அதிர்ச்சித்தருவதாக உள்ளன. மொத்தத்தில் 65 வயதைக் கடக்கும் 75 முதல் 89 சதவீதம் பேருக்கு பக்கவாதம் ஏற்படுவதாக உள்ளது. ஆகவே முதுமையில் இந்நோயைத் தடுக்க முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

    பக்கவாதம் உண்டாக நமது உடலின் இராச உறுப்பான மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் ஏற்படும் பாதிப்புகளே முக்கிய காரணமாக உள்ளன. ரத்தக்குழாய் பாதிப்பால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் (பிராண காற்று) அளவு குறைவதால் மூளையின் நரம்பு செல்கள் பாதிப்படைந்து பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது.

    அத்தகைய ரத்தக்குழாய் பாதிப்புக்கு முதுமையில் உண்டாகும் பல்வேறு நோய் நிலைகள் முக்கிய காரணமாக உள்ளன. சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் காணும் அதிக அளவு கொழுப்பு ஆகிய முக்கிய காரணிகளாக உள்ளன. பக்கவாதம் நோய் உண்டாவதில் வயதும், பாலினமும், மரபியல் காரணிகளும் தடுக்க முடியாத காரணிகளாக உள்ளன. மாறாக குடிப்பழக்கம், புகைபிடித்தல் ஆகிய பழக்கவழக்கங்கள் ஆகியன மாற்ற முடிந்த காரணிகளாக உள்ளன.

    நரம்பு மண்டலத்தின் ஆதாரமாக திகழும் மூளை செல்களில் ஏற்படும் பாதிப்பு பக்கவாதம் என்பதால், இந்நோயில் ஒருபக்க கை மற்றும் கால் செயலிழப்பு ஏற்பட்டு நடக்க முடியாமல் முதுமையை வருத்தும். அத்துடன் அன்றாட செயல்பாடுகளை செய்யவிடாமல் கடினப்படுத்தும்.

    சிலருக்கு அத்துடன் நடுக்கம், வாய் பேச்சு குழறல், மலச்சிக்கல், தலைசுற்றல், மயக்கம், வாய் அல்லது முகம் கோணல், ஞாபகம் குன்றுதல் ஆகிய பல்வேறு குறிகுணங்களை உண்டாக்கி முதுமை மீது வெறுப்பையே உண்டாக்கும். தனது வேலைகளை தானே செய்ய முடியாதபடி, அடுத்தவர்களை நம்பி இருக்க வேண்டிய சூழலை உண்டாக்கி வருத்தும்.

    முதுமையில் கிட்டத்தட்ட 85 சதவீதம் பேருக்கு பக்கவாதம் உண்டாக முக்கிய காரணமாக இருப்பது ரத்த ஓட்டக்குறைவு (Ischemia) தான். இந்த ரத்த ஓட்டக்குறைவுக்கு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு முக்கிய காரணமாக உள்ளது. சிலருக்கு அதிக ரத்த அழுத்தம் காரணமாக மூளை ரத்தக்குழாயில் ரத்தக்கசிவு உண்டாகி பக்கவாதம் உண்டாகும். மேலும் மூளை சவ்வில் உண்டாகும் சாதாரண கட்டிகளும், புற்றுக்கட்டிகளும் கூட பக்கவாதம் உண்டாக்கக்கூடியது. ஆகவே பக்கவாதம் உண்டானால் மருத்துவரை அணுகி அதன் காரணம் அறிந்து சிகிச்சை மேற்கொள்வது நல்லது. சித்த மருத்துவம் கூறும் ஏழு உடல் தாதுக்களில் ஆறாவதாக உள்ள மூளை தாதுவிற்கு போதுமான சத்துக்கள் கிடைக்காமல் போவது பக்கவாதம் உண்டாக ஆதாரமாக உள்ளது.

    அதற்கு முக்கிய காரணமாக இருப்பது அடிப்படைக் கூறான கபவாத பாதிப்பு தான். மாரடைப்பை உண்டாக்கும் இந்த கபவாதமே பக்கவாதம் உண்டாக்கவும் துணை புரிவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. இருப்பினும் ஒரு சிலருக்கு உண்டாகும் மூளை ரத்தக் கசிவு என்பது பித்தவாத பாதிப்பின் நோய்நிலையாக உள்ளது. ஆகவே பாதிக்கப்பட்ட குற்றம் அறிந்து. உணவும், மருந்தும் பின்பற்றுவது நோய்நிலையில் இருந்து மீண்டு வர பேருதவி புரியும். முதுமையில் பக்கவாதம் உண்டாக காரணமாகும் கபவாதம் நீக்கும் மருந்துகளை நாடுவது நோய் நிலையில் நற்பலன் தரும்.

    சித்த மருந்துகளான அமுக்கரா சூரணம், இலவங்காதி சூரணம், தசமூல குடிநீர், அரத்தைக் குடிநீர், சிற்றாமுட்டி மடக்கு தைலம் ஆகிய மருந்துகளுடன் பற்ப, செந்தூர, மெழுகு போன்ற சித்த மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது நற்பலனைத் தரும். பிரமி, வல்லாரை சேர்ந்த பிரமி நெய், வல்லாரை நெய் ஆகிய மூலிகைகளும் பலன் தருவதாக உள்ளன. அத்துடன் வாத நாராயண தைலம், வாதகேசரி தைலம், நொச்சி தைலம், சிற்றாமுட்டி தைலம் ஆகிய வாதம் போக்கும் தைலங்களை வெளித்தடவ பயன்படுத்தலாம்.

    நோயின் துவக்க நிலையில் அவசர சிகிச்சையாக நவீன மருத்துவம் மேற்கொண்டு பிறகு சித்த மருத்துவத்தை மேற்கொள்வதும் நோய் நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாக்க வழிவகை செய்யும். மலச்சிக்கல் இருப்பின் வாதத்தை சீர் செய்யும் மூலக்குடோரி தைலம் எனும் மருந்தை பயன்படுத்தலாம். அல்லது எளிமையாக ஆமணக்கு எண்ணெய் இரவில் பாலில் அல்லது வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்ளலாம்.

    அதே போல் வருமுன் காக்கும் விதமாக, கபவாதம் தடுக்கும் மூலிகை மருந்துகளை நாடுவது நோய் வராமல் தடுக்க உதவும். கபவாதத்தைக் குறைக்கும் வெப்பத்தை அதிகரிக்கும் மருந்துகள் பக்கவாதத்திற்கு காரணமாகும் குருதி தடையை நீக்கி மூளை செல்களுக்கு புத்துணர்ச்சி தரும். 

    முதுமையில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக மிக அவசியம். ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உப்பு அதிகமான உணவு ரத்த அழுத்தம் கூட்டும் முதல் எதிரி. உப்பு குறைவான பண்டங்கள் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தும் சிறந்த உணவுகள். அத்துடன் டேஷ் டயட் (DASH DIET) எனும் ரத்த அழுத்தத்திற்கான உணவு முறையை பழகுவது நல்லது. ரத்த அழுத்தம் கட்டுக்குள் இல்லை எனில் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை செய்வது பக்கவாதம் வராமல் தடுக்கும் எளிய வழிமுறை.

    கபவாதமே நோய்நிலைக்கு முக்கிய காரணமாக அமைவதால் கபம் அதிகரிக்கும் உணவு வகைகளை தவிர்ப்பது பக்கவாதம் நோயில் நன்மை பயக்கும். எண்ணெய் தோய்ந்த பதார்த்தங்களும், குளிர்ச்சி மிகுந்த காய்கறிகளும், உணவுகளும் கபத்தை அதிகரிக்கும். ஆகவே அத்தகைய உணவுகளை தவிர்ப்பது நல்லது. மாறாக கருப்பு உளுந்து கஞ்சி செய்து கொடுப்பது நரம்புகளுக்கு வன்மை தரும்.

    ஆன்டி-ஆக்சிடன்ட் தன்மையைக் கொண்ட மூலிகைகள் ரத்தக்குழாய் அடைப்பினைப் போக்கி, உறுப்பு பாதிப்புகளைத் தடுப்பதோடு, பாதிக்கப்பட்ட நரம்பு செல்களை புதுப்பிக்க உதவும். தாவர வகை உணவுப்பொருட்களில் அதிகப்படியான ஆன்டி-ஆக்சிடன்ட் சத்துக்கள் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ரத்த சுற்றோட்டத்தில் உள்ள கொழுப்புப் பொருட்கள் ரத்தக்குழாய் சுவர்களை பாதிக்காமல் தடுப்பதாக உள்ளன. இதன் மூலம் ரத்தக்குழாய் அடைப்பு தடுக்கப்படுவதாக உள்ளது.

    அசைவ உணவுகளை விட கிட்டத்தட்ட 64 மடங்கு அதிக ஆன்டி-ஆக்சிடன்ட் சத்துக்கள் தாவர உணவுகளில் இருப்பது சிறப்பு. ஆகவே முதுமையில் தாவர உணவிற்கு முக்கியத்துவம் தருவது நல்லது. எளிமையாக உணவில் அரை தேக்கரண்டி இலவங்கப்பட்டையை சேர்ப்பது, அதன் ஆன்டி ஆக்சிடன்ட் அளவை ஆறு மடங்கு அதிகரிப்பதாகவும், அதே போல் ஒரு சிட்டிகை கிராம்பு பொடியினை சேர்ப்பது கிட்டத்தட்ட 8 மடங்கு ஆன்டி ஆக்சிடன்ட் அளவை அதிகரிக்க உதவும் என்கின்றன அறிவியல் நூல்கள். எனவே அஞ்சறைப்பெட்டியை மருந்தாய் பயன்படுத்த துவங்கினால் முதுமையில் ஆரோக்கியம் கைக்கு கிட்டும்.

    மேலும் ரத்தக்குழாய் அடைப்பினைப் போக்க பூண்டு, மஞ்சள், இலவங்கப்பட்டை, சீரகம், சுக்கு, வெந்தயம் ஆகிய கடைச்சரக்குகள் உதவும். அதே போல் கடுக்காய், மருதம்பட்டை, கரிசாலை, கருவேப்பிலை ஆகிய எளிய மூலிகைகள் கபத்தை நீக்கி ரத்தக்குழாயில் உருவான 'திராம்பஸ்' எனும் ரத்தக்கட்டியைக் கரைக்கும் வல்லமை உடையதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    பக்கவாதம் தடுக்கும் உணவுகளில் முக்கிய இடத்தைப் பிடிப்பது நார்ச்சத்துக்கள் தான். தினசரி நான்கு வகை காய்கறி பதார்த்தங்களை உணவோடு சேர்த்துக்கொள்ள நம் முன்னோர்கள் வலியுறுத்தியது இதற்கு தான் என்பது தற்போதைய ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.

    நார்ச்சத்துள்ள உணவுகள் சர்க்கரை நோயை, உடல் பருமனை குறைக்க உதவும் என்பதோடு ரத்த அழுத்தத்தையும் குறைத்து பக்கவாதம் வராமல் தடுக்க உதவும். தினசரி உணவில் 25 கிராம் அளவுக்கு கரையும் நார்சத்துக்களும், 50 கிராம் அளவுக்கு கரையாத நார்சத்துக்களும் சேர்ப்பது பக்கவாதம் வராமல் தடுக்கும் எளிய வழிமுறையாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது சிறப்புமிக்கது. உணவே மருந்து என்பதற்கு இது மாபெரும் சான்று.

    நல்ல தூக்கம், முதுமையில் ஓய்வுக்கு அவசியம் என்பதோடு பக்கவாதம் வராமல் தடுக்கும் என்கின்றன ஆய்வுகள். தினசரி ஆறு மணி நேரம் அல்லது அதற்கு குறைவாகவும், 9 மணி நேரம் அல்லது அதற்கு அதிகமாகவும் தூங்கும் முதியவர்களுக்கு பக்கவாதம் உண்டாகும் வாய்ப்புள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

     

    மருத்துவர் சோ.தில்லைவாணன்

    மருத்துவர் சோ.தில்லைவாணன்

    ஆகவே முதுமையில் மன அழுத்தம் போக்கி குறைந்தது 7 மணி நேரம் தூங்கினால் பக்கவாதம் வராமல் தடுக்க முடியும். நோய் தடுக்கும் சிறந்த மருந்து நல்ல தூக்கம் என்பது அறியக்கிடக்கின்றது.

    பக்கவாதம் வந்த பிறகு மீண்டு வர ஒருங்கிணைந்த மருத்துவம் அவசியமாகிறது. சித்த மருந்துகளோடு வெளிப்புற சிகிச்சை முறைகளான வர்மம், தொக்கணம் சிகிச்சை முறைகளும், தியானமும், யோகாசனப் பயிற்சிகளும், நடைபயிற்சியும் நல்ல பலன் தரக்கூடும். அத்துடன் பக்கவாதம் வராமல் தடுக்கும் உணவு, வாழ்வியல் முறைகளை பின்பற்றி வாழ்வது முதுமையின் ஆரோக்கியத்தை வழிநடத்தும்.

    தொடர்புக்கு:

    drthillai.mdsiddha@gmail.com

    8056040768

    • ஒரு ஜாதகத்தின் யோகத்தை நிர்ணயம் செய்வதில் கோட்சார கிரகங்களின் பங்களிப்பு அளப்பரியது.
    • ஜனன ஜாதகத்தில் இல்லாத பலனை கோட்சாரம் நடத்தி தராது.

    மனிதர்களின் பாவங்களைக் களைந்து பாக்கிய பலன்களை வழங்கும் பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி குரோதி வருடம் சித்திரை மாதம் 18-ந் தேதி 1.5.2024 புதன்கிழமை பகல் 1 மணிக்கு மேஷ ராசி கிருத்திகை நட்சத்திரம் 1-ம் பாதத்திலிருந்து ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் 2ம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

    ஒருவருடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு காரணமான வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், பணவருமானம் போன்றவற்றை வழங்குபவர் குருபகவான். தான் நின்ற இடத்தின் மூலம் பார்க்கும் இடங்களை பலம் செய்வார். அந்த வகையில் ரிஷப ராசியில் பயணம் செய்யப்போகும் குரு பகவான் கன்னி ராசியில் அமரும் கேது பகவானை பார்க்கிறார். குரு கேது இணைவால் சிலர் கோடீஸ்வர யோகத்தை பெறப் போகிறார்கள்.

    ஒரு ஜாதகத்தின் யோகத்தை நிர்ணயம் செய்வதில் கோட்சார கிரகங்களின் பங்களிப்பு அளப்பரியது. கிரகங்களில் வருட கிரகங்களான குரு, ராகு/கேது, சனி இவற்றின் நகரும் தன்மை மெதுவாக இருப்பதால் அவற்றால் ஏற்படும் சுப/அசுப பலன்கள் வருடக் கணக்கில் ஜாதகரை பாதிக்கும். பூமியில் பிறக்கும் அனைவருக்கும், அவரவர் பூர்வ ஜென்ம வினைகளே கிரகங்களாக மாறி ஜாதக கட்டத்தில் அமர்ந்து வினைகளுக்கு ஏற்ப தசைகளை அமைத்து கோட்சார கிரக சஞ்சாரம் மூலம் வினைகளுக்கு ஏற்றபடி வாழ்வு அமைகிறது.

    ஜனன ஜாதகத்தில் ஒரு சம்பவம் நடப்பதற்கான யோக அமைப்பு இருந்தால் கோட்சார கிரகங்கள் அதன் தசா புக்தி காலத்தில் சம்பவத்தை நடத்தி வைக்கும். ஜனன ஜாதகத்தில் இல்லாத பலனை கோட்சாரம் நடத்தி தராது. ஒருவரின் ஆசை மற்றும் விருப்பம் எதுவாக இருந்தாலும் அதை அடையும் பாக்கிய பலன் ஜனன கால ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே கோச்சார கிரகங்களும் தசா புத்தியும் உதவும். ஒரு தனிநபரின் ஜாதகத்தினை கொண்டு நிர்ணயம் செய்யப்படும் கோட்சார பலனே துல்லியமாக இருக்கும் தசா புக்திகளுடன், சம்பந்தம் பெறும் கோச்சாரம் சம்பவத்தை 100 சதவீதம் கச்சிதமாக நடத்தி தரும்.

    பொருளாதாரம் தொடர்பாக ஜோதிடரை சந்திப்பவர்கள் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? கடைசி வரைக்கும் இதே கஷ்டம்தானா? எனக்கு கோடீஸ்வர யோகம் உள்ளதா நான் பணக்காரன் ஆவேனா? என்ற கேள்வியை நிச்சயம் கேட்பார்கள். ஒருவர் அனுபவிக்கும் கோடீஸ்வர யோகத்தை இரண்டாக வகைப்படுத்தலாம்.

    கோடீஸ்வர குடும்பத்தில் வாரிசாகப் பிறந்து, கடைசி வரை கோடீஸ்வரராக வாழும் யோகம் வெகு சிலருக்கே அமையும். நான்காம் அதிபதி, செவ்வாய், ஒன்பது, பத்தாம் அதிபதிகள் பலம் பெற்ற ஜாதகர் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்திருப்பார்கள். முன்னோர்கள் செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்களாக இருப்பார்கள்.


    வாழ்க்கையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவர் சாதாரண அடிமட்டத்தில் அடிமை தொழில் செய்து கொண்டு ஜீவனத்துக்கு கூட கஷ்டம் அனுபவிப்பவர்கள், சுகபோக வாழ்க்கை இந்த ஜென்மத்தில் கிடைக்காது என்று நினைக்கும் பலர் திடீர் யோகத்தின் மூலம் சமூகத்தில் உச்ச நிலையை அடைகின்றனர். தகுதிக்கு மீறிய வாழ்வு கிடைத்து அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் யோகத்தைபெற்று விடுகிறார்கள். எதிர்பாராத ராஜயோகத்தால் சிலர் கோடீஸ்வரராகி விடுகிறார்கள். அடிமட்ட நிலையில் இருக்கும் ஒருவர் 9, 11ம் இடங்களில் சூரியன் பலம் பெற்றால் தந்தையாலும், சந்திரன் பலம் பெற்றால் தாயாலும், செவ்வாய் பலம் பெற்றால் கணவர், உடன்பிறப்பாலும், புதன் பலம் பெற்றால் மாமன் நண்பர், சொந்த அறிவாலும், குரு பலம் பெற்றால் முன்னோர்கள், அரசியல் வாதிகள், புத்திரர்களாலும், சுக்கிரன் பலம் பெற்றால் மனைவியாலும், சனி, வேலையாட்கள் மூலமும், ராகு, கேது பலம் பெற்றால் நேர்மையற்ற வழியிலும் செல்வம் சேரும். ஜோதிடரீதியாக சுக்ரன் தரும் செல்வம் ஆயிரக்கணக்கிலும், சனி தரும் செல்வம் லட்சக்கணக்கிலும், குரு தரும் யோகம் கோடிக் கணக்கிலும், ராகு தரும் பணம் கோடியின் மடங்குகளிலும் இருக்கும். கோடீஸ்வர யோகம் தரும் குரு+ கேது சேர்க்கை பெரும்பான்மையான கோடீஸ்வரர் ஜாதகத்தில் குரு + கேது சம்பந்தம் இருக்கும். ஒருவரின் ஜாதகத்தில் குரு கேது சேர்ந்திருந்தால் அவருக்கு கோடீஸ்வர யோகம் வரும். குரு கேது இடையே பார்வை ஏற்பட்டாலும் கோடீஸ்வர யோகம் தேடி வரும். நவகிரகங்களில் குருவிற்கும், கேதுவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கேது ஞான மோட்சகாரகன். குரு ஞானம், அறிவு, வேதம், தவம், மந்திரசித்தி போன்றவற்றிற்கு காரணமானவர். பிறந்த ஜாதகத்தில் குரு +கேது சேர்க்கை, பார்வை, சாரபரி வர்த்தனை, ஒருவருக்கொருவர் கேந்திரம், கோணம் என சம்பந்தப்பட்டு இருந்தால் உயர்ந்த பதவி, அந்தஸ்து, அதிகாரம் கிடைக்கும். காமம், குரோதம், மோகம் இவை அனைத்தையும் கடந்து இறுதியாக மோட்சத்தை அடைவதற்கு உதவும் கிரகம் கேதுபகவான். குரு மற்றும் கேதுவிற்கு சம்பந்தம் ஏற்படும் பொழுது இந்த யோகம் ஏற்படுகின்றது.

    குரு ஒரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆன உடன் அந்த வீட்டின் காரகத்துவங்கள் தூண்டப்படுகின்றன. குரு பகவான் பார்வையால் அந்த இடம் சுபத்துவம் அடையும். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்கின்றனர். குருவின் 5-ம் பார்வை கன்னி ராசியில் உள்ள கேதுவின் மேல் பதிகிறது. 7-ம் பார்வை விருச்சிக ராசியிலும் 9-ம் பார்வை மகர ராசியிலும் பதிகிறது.

    குருவின் 5-ம் பார்வை கேதுவில் பதிவதால் சில ராசியினர் கோடீஸ்வர யோகம் அனுபவிக்கப் போகிறார்கள். குறிப்பாக ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகரம் ராசியினருக்கு பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது.

    ரிஷப ராசிக்கு அஷ்டமாதிபதி மற்றும் லாப அதிபதியான குரு மே 1, 2024 முதல் ஜென்ம ராசிக்குள் நுழையப் போகிறார். 8,11 எனும் பணபர ஸ்தானத்திற்கு அதிபதியான குருபகவான் ராசியில் நின்று தனது 5-ம் பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள கேதுவை பார்க்கிறார். இது குரு+ கேது சம்பந்தம் இருப்பதால் கோடீஸ்வர யோகமாகும். பொருளாதார முன்னேற்றம், வாழ்க்கை முன்னேற்றம் ஏற்படும். வெற்றியை தக்க வைக்க கடுமையான முயற்சியையும் போராட்டத்தையும் சந்தித்த காலம் முடிந்து குறைந்த உழைப்பில் அதிக வருமானம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தை துரத்தி மனம் நொந்த காலம் முடிந்துவிட்டது. இது அதிர்ஷ்டம் உங்களைத் துரத்தும் காலமாக அமையப் போகிறது.

    அஷ்டமாதிபதி ராசியில் சஞ்சரிப்பது விபரீத ராஜ யோகமாகும். பூர்வீகச் சொத்து வழக்கின் தீர்ப்பு சாதகமாகும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடத்தி மகிழ்வீர்கள். மருமகன், மருமகளால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும். புத்திர பிராப்தம் சித்திக்கும். பெற்றோர்களின் நல்லாசி கிடைக்கும். குலதெய்வ அனு கிரகமும், முன்னோர்களின் நல்லாசியும் மகிழ்ச்சியான நிலைக்கு அழைத்துச் செல்லும். சிந்தனை, செயல்பாட்டில் நேர்மறை எண்ணங்கள் மிகுதியாகும்.

    ஐ.ஆனந்தி

    ஐ.ஆனந்தி

    கன்னி ராசிக்கு 4, 7-ம் அதிபதியான குருபகவான் மே 1, முதல் பாக்கிய ஸ்தானமான 9-ம் இடத்திற்கு சென்று ராசியில் உள்ள கேதுவை பார்க்கிறார். பாக்கிய ஸ்தானத்திற்கு குருபகவான் செல்வது வளர்ச்சியைக் கொடுக்கக் கூடிய கோடீஸ்வர யோகம். ஆன்ம பலம் பெருகும். தேவையில்லாத எண்ணங்கள் மன சஞ்சலம், அமைதியற்ற நிலை விலகும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவீர்கள் உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். வாழ்க்கையில் மாற்றம் தரக் கூடிய நல்ல இடப்பெயர்ச்சி உண்டாகும். தொழில் முன்னேற்றம், நல்ல உத்தியோகம், வீடு, வாகனம், திருமணம், புத்திரப்பேறு, பொருளாதார முன்னேற்றம் என உங்கள் வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். போட்டி பொறாமை குறையும். கடன் பிரச்சனைகள் தீரும். அரசியல் வெற்றி, அதிகாரம், அரசு மரியாதை ஆகியவை கிடைக்கும். பிறருக்கு கட்டளையிடும் பெரிய பதவிகள் தேடி வரும். பெயர், புகழ், பதவி கிடைக்கும். செல்வாக்கு உயரும். புதியதாக காதல் பூக்கும். குலதெய்வம் மற்றும் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.

    விருச்சிக ராசிக்கு 2,5-ம் அதிபதியான குரு ராசியை சம சப்தமாக பார்க்கிறார். கேதுவின் 3-ம் பார்வை விருச்சிகத்தின் மேல் பதிகிறது.

    ராசியில் குரு, கேதுவின் பார்வை பதிகிறது. இது கோடீஸ்வர யோகத்தை வழங்கும் அமைப்பாகும். விருச்சிகத்திற்கு பரிபூரண யோகத்தை வழங்க கடமைபட்ட குரு சமசப்தம ஸ்தானம் சென்று ராசியை பார்ப்பது முதல் தரமான கோடீஸ்வர யோகம் .கடுமையாக உழைத்த உழைப்பு இப்பொழுது பணமாக காய்க்கபபோகிறது. பல விதமான நற்பலன்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும். புதிய தொழில் முயற்சிக்கு தேவையான நிதியுதவி கிடைக்கும். எடுக்கப்பட்ட முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு. அரசியல் வாதிகளுக்கு பொதுஜன ஆதரவு அதிகரிக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சீதனம் மகிழ்சியைத் தரும். பேச்சை மூலதனமாகக் கொண்ட வர்களின் தனித் திறமை மிளிரும். திருமணத் தடை நீங்கும். அடமானச் சொத்துக்கள் மீண்டு வரும். அரசு வேலைக்கு கிடைக்கும். வீடு, வாகன யோகம் என சகல ஐஸ்வர்யங்களும் உண்டு.

    மகர ராசிக்கு 3,12-ம் அதிபதியான குருபகவான் மே 1, முதல் ராசிக்கு 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் சென்று 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் உள்ள கேதுவை பார்க்கிறார். இது கோடீஸ்வர யோகத்தை வலுப்டுத்தும் கிரக அமைப்பாகும். இதுவரை உங்களுக்கு எது கிடைக்கவில்லை என்று ஏங்கிக்கொண்டு இருந்தீர்களோ அவையெல்லாம் உங்களுக்கு கிடைக்கும். நல்ல அறிவாற்றல், புத்திக்கூர்மை. கல்வி மேன்மை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும்.லாபம் அதிகரிக்கும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகள் நடக்கும். சிலருக்கு பணிக்காலம் முடிந்த பிறகும் பதவி நீட்டிப்பு கிடைக்கும். அரசியல் ஈடுபாடும் பிரபலமாகும் யோகமும் உண்டாகும். பொருள் கடனும், பிறவிக் கடனும் தீர்க்க உகந்த நேரம். மகான்களின் தரிசனம், குலதெய்வம், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும். உடல் உபாதைகள் அகலும். இளைய மனைவியின் மூலம் சொத்து கிடைக்கும். பாலிசி முதிர்வு தொகை, எதிர்பாராத அதிர்ஷ்ட பண வரவு உண்டு. ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.

    முற்றிலும் எதிர்பாராத ஒரு நிலையில், சுலபமான வகையில் அல்லது குறுக்கு வழியில் ஒருவருக்கு மிகப்பெரிய சமூக, பொருளாதார அந்தஸ்து கிடைப்பதே கோடீஸ்வர யோகமாகும். சுய ஜாதக ரீதியான தசா புத்திகள் ஒத்துழைத்தால் ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகர ராசியினர் கோடீஸ்வரானாகுவது உறுதி. திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு உண்டாகும்.

    செல்: 98652 20406

    • புதன் பகவான் சரியான அமைப்பில் இல்லாமல் இருந்தால் குழந்தைபேறு கிடைப்பதில் கூட தாமதத்தை கொடுத்து விடுவார்.
    • குறிப்பாக நரம்பு மண்டல பாதிப்பை புதன் தோஷம் கொடுத்து விடும்.

    புதன் கிரகம் அற்புதமான கிரகம் ஆகும். வித்தைகளின் களஞ்சியமாக புதன் கிரகத்தை சொல்வார்கள். புதன் கிரகம் ஒருவரது ஜாதகத்தில் நல்லவிதமாக இருந்தால் அவரது அறிவாற்றல் அற்புதமாக இருக்கும். அவர்களது முடிவுகள் வெற்றிகளை தேடித்தரும். எனவேதான் நல்ல புத்தி தரும் புதன் என்று சொல்வார்கள்.

    புதன் பகவான் சந்திரனுக்கும், தாரைக்கும் மகனாக பிறந்தவர். இவருக்கு அருணன், கணக்கன், காமன், சாமன், சவுமியன், ததூதன், தேர்பாகன், பண்டிதன், பொறையன், மதிமகன், மேதை என்றெல்லாம் பல்வேறு பெயர்கள் உண்டு. வெளிர்பச்சை நிறம்தான் இவருக்கு பிடித்த நிறமாகும்.

    புதன் புத்திகாரகன் என்று சொல்லப்படுவதால் ஜாதகத்தில் கிரக அமைப்புகள் சரியாக இருக்கும் பட்சத்தில் தெளிந்த மனம், எதையும் சிறப்பாக செய்யும் திறமை இருந்துக் கொண்டே இருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் எந்த பணியாக இருந்தாலும் புதன் வலுவாக இருப்பவர்கள் மிக மிக சாமர்த்தியமாக செய்து முடிப்பார்கள்.

    புதன் மூலம்தான் ஒருவருக்கு நல்ல நட்பு, பெரியவர்களின் தொடர்பு, உயர்மட்டத்தில் முன்னேற்றம் ஆகியவை தானாக தேடி வந்து அமையும். அதற்கான பேச்சு திறமையையும், செயல்பாடுகளையும் புதன் கிரகம் கொடுத்து கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்னும் சொல்லப்போனால் ஒருவரது ஜாதகத்தில் புதன் திசை நல்ல விதமாக நடந்தால் ஊரே போற்றும் வகையில் அவரது வளர்ச்சி இருக்கும். உலகப்புகழ் பெற்ற பலரது ஜாதகத்தை ஆய்வு செய்தபோது அவர்களது வெற்றி அனைத்தும் புதன் கிரகத்தை பின்னணியாக கொண்டு அமைந்திருப்பதை ஜோதிடர்கள் கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

    ஒருவர் எந்த துறையில் இருந்தாலும் அதில் அவர் சிறப்பாக வேண்டுமானால் புதன் கிரகத்தின் ஒத்துழைப்பும், அனுகூலமும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். சிலர் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உடையவர்களாக இருப்பார்கள். அதற்கு காரணம் புதனின் செயல்பாடுதான்.

    நவக்கிரகங்களில் அனைத்து கிரகங்களின் தாக்கம் ஒருவரது உடல் உறுப்புகள் தொடர்புடைதாக இருக்கும். ஆனால் புதன் கிரகத்தின் தாக்கம் மட்டும் ஒருவரது மனதை மட்டுமே கொண்டதாக இருக்கும். ஒருவர் நல்ல சிந்தனையுடன் இருக்கிறார் என்றாலும் சரி, தீய சிந்தனையுடன் இருக்கிறார் என்றாலும் சரி அதற்கு காரணம் புதன்தான்.

    தவறான சிந்தனை ஒருவரிடம் மிகுந்து இருந்தால் அவரது ஜாதகத்தில் புதன் கிரகம் தோஷம் உடையதாக மாறி இருக்கிறது என்பது அர்த்தமாகும். புதனுடன் வளர்பிறை சந்திரன், சுக்கிரன், குரு ஆகியோர் சேர்ந்து இருந்தால் நல்ல சிந்தனை இருக்கும். அதே சமயத்தில் சனி, செவ்வாய், ராகு, கேது ஆகிய கிரகங்களின் சேர்க்கை அமைந்துவிட்டால் புதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். அந்த சமயங்களில்தான் ஒருவரது மனதில் தவறான சிந்தனைகள் தறிக்கெட்டு வந்து கொண்டே இருக்கும்.

    பொதுவாக புதனை மிகவும் அருமையான சுப கிரகம் என்று சொல்வார்கள். ஆனால் பாவ கிரகங்களுடன் சேரும்போது அதுவும் பாவமாகி விடுகிறது. மிதுனம், கன்னி ராசியில் புதன் சேர்க்கை அமைந்தால் எதிர்மறையான பலனை தான் பெற முடியும் என்று ஜோதிட நூல்கள் சொல்கின்றன. இது மிகப்பெரிய தோஷமாகவும் கருதப்படுகிறது.

    ஒருவரது ஜாதகத்தில் புதன் அமைவதை பொறுத்து அது தோஷமா? இல்லையா? என்பதை கண்டுபிடித்து விடலாம். புதன் கிரகமானது ஒருவரது ஜாதகத்தில் 2, 4, 6, 8, 10, 11 ஆகிய இடங்களில் உச்சம் பெற்றிருந்தால் அந்த நபருக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

    அதே சமயத்தில் புதன் நீச்சம் பெற்றுவிட்டால் அந்த ஜாதகக்காரருக்கு புதன் தோஷம் இருக்கிறது என்று அர்த்தம். அத்தகைய சூழ்நிலையில் மூளை வேலை செய்யாது. குடும்பத்தில், தொழிலில், நட்பில் குழப்பங்கள் வந்து கொண்டே இருக்கும். சிலருக்கு நோய் தாக்கம் கூட ஏற்படலாம். குறிப்பாக நரம்பு மண்டல பாதிப்பை புதன் தோஷம் கொடுத்து விடும்.

    புதன் தோஷம் சற்று அதிகமாக இருந்தால் உடல் வலி, நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா தொடர்பான சிக்கல்களுக்கும் வழி வகுத்து விடும். இவை அனைத்தையும் விட குழந்தை பாக்கியத்திலும் புதன் பகவானின் பங்களிப்பு முக்கியமானது. எனவே புதன் பகவான் சரியான அமைப்பில் இல்லாமல் இருந்தால் குழந்தைபேறு கிடைப்பதில் கூட தாமதத்தை கொடுத்து விடுவார்.

    ஆகையால் புதன் தோஷம் இருப்பது தெரிய வந்தால் அவசியம் பரிகாரம் செய்ய வேண்டும். சிறிய, எளிய பரிகாரங்கள் மூலமாகவே புதன் பகவானை திருப்தி செய்துவிட முடியும். புதன்கிழமைகளில் ஆலயத்துக்கு சென்று வழிபட்டாலே போதுமானது. புதன்கிழமை காலை 7 மணி முதல் 9.30 மணி வரை பெருமாள் ஆலயத்துக்கு சென்று வழிபட வேண்டும்.

    சிவ பக்தர்களாக இருந்தால் புதன்கிழமை காலை 7 மணி முதல் 9.30 மணி வரை சிவாலயத்தில் நந்திக்கு பூஜை செய்து பச்சை பயிறு படைத்து வழிபட வேண்டும்.

    புதன்கிழமைகளில் புதன் ஓரையில் புதனுக்குரிய காயத்ரி மந்திரங்களை சொல்லி வருவது மிகவும் நல்லது. மகாவிஷ்ணுவை எந்த அளவுக்கு வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு புதன் கிரக தோஷங்கள் அகன்று விடும். புதன்கிழமைகளில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    புதனுக்கும், துளசிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. துளசி லட்சுமியின் அம்சமாகும். துளசி வீட்டில் இருந்தால் குடும்பத்தில் நல்ல மனநிலை நிலவும். அதே சமயத்தில் புதன் கிரகம் மிதுனம், கன்னி வீட்டின் அதிபதியாவார். இது திருமால்

    குடிகொள்ளும் வீடாகும். இதனால்தான் புதனுக்கும், துளசிக்கும் தொடர்பு இருப்பதாக சொல்கிறார்கள்.

    இதை கருத்தில் கொண்டுதான் புதன் தோஷம் இருப்பவர்கள் துளசி பொடி சாதம் சாப்பிட வேண்டும் என்று ஜோதிடர்கள் குறிப்பிடுவது உண்டு. சித்தர்களும் துளசியின் இந்த மகத்துவத்தை தங்களது மருத்துவ நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

    பரிகாரங்கள் செய்வதை விட துளசி வழிபாடு மிகவும் சிறப்பானது. ஒருவர் எந்த அளவுக்கு தினமும் துளசியை பூஜித்து போற்றி வழிபடுகிறாரோ அந்த அளவுக்கு அவருக்கு பலன்கள் கிடைக்கும். துளசி தண்ணீரை குடித்தால் உடல், மனம் அனைத்தும் தூய்மையாகும். எனவேதான் நமது மூதாதையர்கள் துளசியை மாடத்தில் வைத்து பூஜித்து வந்தனர்.

    சிலருக்கு புதன் தோஷத்தால் வாஸ்து பிரச்சினைகளும் ஏற்படுவது உண்டு. அவர்கள் வீட்டில் துளசி மாடத்தை தினமும் காலையில் குளித்து விட்டு கிழக்கு முகமாக விளக்கேற்றி நைவேத்தியம் செய்து வழிபட்டால் நிச்சயம் நல்ல பலன்கள் கிடைக்கும். துளசியை வழிபட... வழிபட... மன குழப்பங்கள் நீங்கி அனைத்து முடிவுகளையும் சரியாக எடுக்க முடியும். இதன் மூலம் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கு வழிவகை உண்டாகும்.

    சிலருக்கு ஆலயத்துக்கு சென்று வழிபட்டால்தான் தோஷம் நிவர்த்தி செய்வதற்கு பலன் கிடைக்கும் என்பார்கள். அத்தகைய மனம் கொண்டவர்கள் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு சென்று வழிபட்டு வந்தாலே போதும் புதன் தோஷம் நீங்கும்.

    திருவெண்காடு தலத்துக்கும் சென்று வழிபடலாம். இந்த ஆலயம் புதன் பகவானுக்குரிய ஆலயமாகும். முடிந்த போதெல்லாம் புதன் காயத்ரி அல்லது புதன் கிரகத்துக்குரிய போற்றிகள் சொல்லிக் கொண்டே வந்தால் போதும். நல்ல நிலைமைக்கு வந்து விட முடியும். புதன் காயத்ரி மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் 108 தடவை உச்சரித்தால் எதிர்பாராத நன்மைகள் எல்லாம் வந்து சேரும்.

    புதன் காயத்ரி மந்திரமோ அல்லது போற்றி சொல்லவோ நேரம் இல்லை என்று நினைப்பவர்கள் தமிழில் எளிய மந்திரம் ஒன்றை சொல்லலாம். அந்த மந்திரம் வருமாறு:-

    சந்திரன் மகனாய் தோன்றியவனே

    தினைமொட்டு போன்ற கருமையான

    நிறத்தை உடையவனே

    ஒப்புயர்வு இல்லாத சிறந்த

    வடிவத்தினை உடையவனே

    நற்குணங்களுக்கெல்லாம்

    காரணமானவனே

    புதன் பகவானே உன்னிடம்

    சரண் அடைகிறேன்.

    இந்த மந்திரத்தை சொல்லி வாருங்கள். புதன் தோஷம் அனைத்தும் ஓடி விடும்.

    ×