என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரியில் சர்வதேச யோகா திருவிழா - பேனர்களில் தமிழ் புறக்கணிப்பு
- மத்திய அரசின் ஆயுஷ் நிறுவனம் சார்பில் நாளை சர்வதேச யோகா மஹோத்சவ் திருவிழா நடக்கிறது.
- யோகா விளம்பரத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்டுத்தி உள்ளது.
புதுச்சேரி:
மத்திய அரசின் ஆயுஷ் நிறுவனம் சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) சர்வதேச யோகா மஹோத்சவ் திருவிழா நடக்கிறது.
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெறும் திருவிழாவில் கவர்னர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்க உள்ளனர். இதற்கான விளம்பர பேனர்கள் புதுச்சேரி முழுவதும் வைக்கப்பட்டுள்ளன.
சாலைகளின் முக்கிய சந்திப்புகளுக்கான அஜந்தா சிக்னல், ராஜா சந்திப்பு, அண்ணா சிலை, காமராஜர் சிலை, இந்திரா காந்தி சிலை, ராஜீவ் சிலை சதுக்கங்கள் மற்றும் கிராம பகுதிகளில் இந்த விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே உள்ளன. தமிழில் எங்கும் விளம்பர பேனர் இல்லை.
புதுச்சேரியில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்
இந்த உத்தரவை ஆயூஷ் பின்பற்றவில்லை. ஆனால் யோகா விளம்பரத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்டுத்தி உள்ளது.








