என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரியில் ரோடு 'ஷோ' நடத்துவதை விஜய் தவிர்க்க வேண்டும்- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பேட்டி
- தமிழகம்போல புதுவையில் பிரம்மாண்டமான தேசிய நெடுஞ்சாலைகள் இல்லை.
- குறிப்பிட்ட இடத்தை நிர்ணயித்து அங்கு பொதுக்கூட்டம் நடத்தலாம்.
புதுச்சேரி:
புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கரூரில் நடந்த த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய ரோடு ஷோவில் 41 பேர் பலியாகியுள்ளனர். இதுதொடர்பான வழக்குகள் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் புதுவையில் ரோடு ஷோ நடத்த த.வெ.க.வினர் அனுமதி கேட்டு வருகின்றனர்.
தமிழகம்போல புதுவையில் பிரம்மாண்டமான தேசிய நெடுஞ்சாலைகள் இல்லை. குறுகிய சிறிய சாலைகள்தான் உள்ளது.
அதோடு போக்குவரத்து நெரிசலும், நெருக்கடியும் அதிகம். இதனால் புதுவையில் ரோடு ஷோ நடத்துவதை விஜய் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக குறிப்பிட்ட இடத்தை நிர்ணயித்து அங்கு பொதுக்கூட்டம் நடத்தலாம். அதற்கு அரசு அனுமதி வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






