என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி பாஜக தலைவர் விரைவில் மாற்றம்?
    X

    புதுச்சேரி பாஜக தலைவர் விரைவில் மாற்றம்?

    • சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது.
    • புதுவை பாஜக தலைவரை மாற்றுவது குறித்து முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை ராஜ்யசபா எம்.பி. செல்வகணபதி, கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி புதுவை மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.

    சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. இதனால் பாஜக தலைவர் மாற்றப்படுவார் என கூறப்பட்டது.

    இந்த நிலையில் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக தலைவர் செல்வ கணபதிக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அவர் ஆஜராக வேண்டும்.

    இந்நிலையில் பாஜக-வின் தேசிய தலைவர் நட்டா அவசர அழைப்பின் பேரில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் டெல்லி சென்று அவரை சந்தித்துள்ளார்.

    இந்த சந்திப்பில் புதுவை பாஜக தலைவரை மாற்றுவது குறித்து முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் புதிய புதுவை மாநில பாஜக தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என கட்சியினரிடையே தகவல் பரவி வருகிறது.

    Next Story
    ×