என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரியில் கஞ்சா விற்ற பல்கலைக்கழக மாணவர் உள்பட 2 பேர் கைது
- 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
- பண தேவைக்காக கஞ்சாவை இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு விற்றது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் விலை உயர்ந்த பைக்கில் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
இதில் ஒருவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிக்கும் மாணவர் என்பதும் மற்றொருவர் புதுச்சேரியில் உள்ள பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வரும் வாலிபர் என்பதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சாவை குறைந்த விலைக்கு வாங்கி வந்து பயன்படுத்தி வந்ததும், பின்னர் பண தேவைக்காக கஞ்சாவை இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 110 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






