என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில்  ஆழ்கடலில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்ட ஜோடி
    X

    புதுச்சேரியில் ஆழ்கடலில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்ட ஜோடி

    • தென்னை ஓலையில் பூக்கள் இணைத்து திருமண நிகழ்வு நடத்தி கடலுக்கடியில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
    • அவர்களுடன் ஆழ்கடலுக்குள் 5 பேர் உடன் சென்றனர்.

    புதுச்சேரி:

    விமானத்தில் பறந்து கொண்டே திருமணம், கடலில் படகில் சென்று திருமணம் உள்பட பல்வேறு வித்தியாசமான திருமணத்தை பார்த்திருப்போம்.

    ஆனால் புதுச்சேரியில் ஆழ்கடலில் நீருக்கடியில் சென்று ஒரு ஜோடி வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

    புதுவை முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜான் டி பிரிட்டோ- தீபிகா.

    இந்த ஜோடி கடல் மாசு விழிப்புணர்வு, கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு அவசியத்தை வலியுறுத்தி ஆழ்கடலில் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர்.

    இதையடுத்து டெம்பிள் அட்வென்சர் ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் துணையுடன் இன்று புதுச்சேரி தேங்காய்திட்டில் இருந்து 5 கி.மீ. தொலைவில் கடலுக்கு சென்றனர். அங்கு 50 அடி ஆழத்தில் திருமண ஏற்பாடு நடந்தது.

    தென்னை ஓலையில் பூக்கள் இணைத்து திருமண நிகழ்வு நடத்தி கடலுக்கடியில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுடன் ஆழ்கடலுக்குள் 5 பேர் உடன் சென்றனர்.

    இதுகுறித்து ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் கூறுகையில்,

    இது முதல்முறையாக நீருக்கடியில் திருமணம் நடந்தது. இவர்கள் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் என்பதால் இதில் சிரமம் ஏற்படவில்லை. முன் ஏற்பாடுகளுடன் சென்று திருமணம் புரிந்து முன்மாதிரியாக செயல்பட்டோம் என்றார்.

    Next Story
    ×