என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்ஜி சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    எல்ஜி சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்

    எல்ஜி நிறுவனத்தின் ஸ்பெஷல் எடிஷன் பிரீமியம் ஸ்மார்ட்போன் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    சியோல்:

    எல்ஜி நிறுவனத்தின் புதிய சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போன் கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய சிக்னேச்சர் எடிஷன் சிர்கோனிம் செராமிக் பேக் கவர் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால், கீறல்கள் விழாமல் பார்த்து கொள்ளும். இத்துடன் ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்கள் தங்களது பெயரை பொறித்துக் கொள்ள முடியும்.

    மற்ற சிறப்பம்சங்கள் எல்ஜி வி30 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கிறது. 6.0 இன்ச் QHD+OLED ஃபுல் விஷன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 16 எம்பி பிரைமரி கேமரா, F1.6 அப்ரேச்சர், க்ரிஸ்டல் கிளியர் லென்ஸ், 13 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 6 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கிறது.



    எல்ஜி சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போன்:


    - 6.0 இன்ச் 2880x1440 பிக்சல் QHD+ OLED டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
    - அட்ரினோ 540 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 256 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் எல்ஜி UX 6.0+
    - 16 எம்பி, f/1.6 அப்ரேச்சர், 13 எம்பி, f/1.9 அப்ரேச்சர் டூயல் பிரைமரி கேமரா
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர்
    - கைரேகை ஸ்கேனர்
    - வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3,300 எம்ஏஎச் பேட்டரி, குவால்காம் குவிக் சார்ஜ் 3.0, வயர்லெஸ் சார்ஜிங்

    புதிய எல்ஜி சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 300 போன்களை மட்டுமே தயாரிக்கும் என்றும் இவை இம்மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை குறித்து எவ்வித தகவலும் இல்லை.
    Next Story
    ×