என் மலர்tooltip icon

    செய்திகள்

    சியோமி ரெட்மி 5, ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்
    X

    சியோமி ரெட்மி 5, ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
    பீஜிங்:

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    புதிய ரெட்மி 5 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் எச்டி+18:9 ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 3300 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் FHD+ 18:9 ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 625 மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    இரண்டு சியோமி ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் இயங்குதளம் மற்றும் MIUI 9 வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி ரெட்மி 5 சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் 1440x720 பிக்சல் எச்டி+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450
    - அட்ரினோ 506 GPU
    - 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
    - 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் மற்றும் MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 1.25μm பிக்சல், f/2.2 அப்ரேச்சர்
    - 5 எம்பி தெல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3300 எம்ஏஎச் பேட்டரி



    சியோமி ரெட்மி 5 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் எச்டி+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் மற்றும் MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 1.25μm பிக்சல், f/2.2 அப்ரேச்சர்
    - 5 எம்பி தெல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்ஏஎச் பேட்டரி

    சியோமி ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் பிளாக், லைட் புளூ, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் ரெட்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் டிசம்பர் 12-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ரெட்மி 5 சீரஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    ரெட்மி 5 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் மாடல் 799 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.7,795, 3 ஜிபி ரேம் கொண்ட மாடல் 899 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.8,770 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் கொண்ட மாடல் 999 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.9,745, 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் 1299 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.12,675 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×