search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராயல் என்ஃபீல்டு கிளாசிக் ரெட்டிச் 350 ஏ.பி.எஸ். இந்தியாவில் வெளியானது
    X

    ராயல் என்ஃபீல்டு கிளாசிக் ரெட்டிச் 350 ஏ.பி.எஸ். இந்தியாவில் வெளியானது

    ராயல் எஃன்பீல்டு நிறுவனம் இந்தியாவில் கிளாசிக் ரெட்டிச் 350 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளை வெளியிட்டது. #RoyalEnfield #motorcycle



    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் கிளாசிக் 350 ரெட்டிச் மோட்டார்சைக்கிளை ஏ.பி.எஸ். வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது. புதிய மோட்டார்சைக்கிளின் விலை இந்தியாவில் ரூ.1.79 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏ.பி.எஸ். இல்லா வழக்கமான ரெட்டிச் கிளாசிக் 350 ரூ.1.46 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    கிளாசிக் 350 மாடலின் பின்புறம் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் டிஸ்க் பிரேக் வசதியை சமீபத்தில் சேர்த்தது. அதைத் தொடர்ந்து இம்முறை ஏ.பி.எஸ். வசதி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய ஏ.பி.எஸ். பிரேக்கிங் தவிர ரெட்டிச் மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

    விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில் ரெட்டிச் எடிஷன் மோட்டார்சைக்கிள் ரெட்டிச் ரெட், ரெட்டிச் கிரீன் மற்றும் ரெட்டிச் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ரெட்டிச் மோட்டார்சைக்கிளில் 346சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 



    இந்த என்ஜின் 19.8 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்க் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. பிரேக்கிங் அம்சங்களை பொருத்தவரை ரெட்டிச் கிளாசிக் 350 மாடலின் முன்புறம் 280 எம்.எம். மற்றும் பின்புறம் 240 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் இரு டிஸ்க் பிரேக்குகளும் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். தரத்தில் வருகின்றன.

    இத்துடன் பைக்கின் முன்புறம் 35 எம்.எம். டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறம் ட்வின் கேஸ்-சார்ஜ் செய்யப்பட்ட ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    கிளாசிக் 350 ரெட்டிச் எடிஷன் தவிர, தண்டர்பேர்டு 350, 350X, 500X உள்ளிட்ட மாடல்களில் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 உள்ளிட்ட மாடல்களை அறிமுகம் செய்தது.
    Next Story
    ×