என் மலர்

  செய்திகள்

  ராயல் என்ஃபீல்டு தன்டர்பேர்டு 350X ஏ.பி.எஸ். இந்தியாவில் வெளியானது
  X

  ராயல் என்ஃபீல்டு தன்டர்பேர்டு 350X ஏ.பி.எஸ். இந்தியாவில் வெளியானது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தன்டர்பேர்டு 350X ஏ.பி.எஸ். வெர்ஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதன் விலை மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #RoyalEnfield  ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தன்டர்பேர்டு 350X ஏ.பி.எஸ். மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய தன்டர்பேர்டு 350X ஏ.பி.எஸ். வெர்ஷன் விலை ரூ.1.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகள் துவங்கி இந்தியா முழுக்க நடைபெற்று வருகிறது. 

  ராயல் என்ஃபீல்டு தன்டர்பேர்டு 350X ஏ.பி.எஸ். மாடலுக்கு ரூ.5,000 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஸ்டாக் இருப்புக்கு ஏற்றவாறு புதிய மோட்டார்சைக்கிள் முன்பதிவு செய்ததில் இருந்து 15 நாட்களில் விநியோகம் செய்யப்படும். 

  புதிதாக ஏ.பி.எஸ். வசதி சேர்க்கப்பட்டு இருப்பதோடு ராயல் என்ஃபீல்டு தன்டர்பேர்டு 350X ஏ.பி.எஸ். மாடலின் மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. மோட்டார்சைக்கிளின் ஒட்டுமொத்த செயல்திறன் முன்பை போன்றே இருக்கிறது.   தன்டர்பேர்டு 350X ஏ.பி.எஸ். மாடலில் 346சிசி ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 19.8 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிளில் முன்பக்கம் 41 எம்.எம். டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ட்வின் கியாஸ்-சார்ஜ்டு ஷாக் அப்சார்பர்களை கொண்டுள்ளது.

  ராயல் என்ஃபீல்டு 350X ஏ.பி.எஸ். மாடலில் 19 மற்றும் 18 இன்ச் டையர்களை கொண்டுள்ளது. இத்துடன் 280 எம்.எம். சிங்கிள் டிஸ்க், பின்புறம் 240 எம்.எம். வென்டிலேட்டெட் டிஸ்க் வழங்கப்படுகிறது. இரண்டு டிஸ்க் பிரேக்களிலும் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்பட்டுள்ளது.

  தன்டர்பேர்டு 350X மோட்டார்சைக்கிள் இளம் தலைமுறையினரை குறிவைத்து ரோவிங் ரெட் மற்றும் விம்சிக்கல் வைட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. ஸ்டான்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது தன்டர்பேர்டு 350X ஸ்போர்ட் ரைடிங் பொசிஷன், ஃபிளாட் ஹேன்டில்பார்கள், ஸ்ப்லிட் கிராப் ரெயில்கள், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×