என் மலர்

  செய்திகள்

  புதிய ஸ்போர்ட் ஸ்கூட்டர்: டி.வி.எஸ். அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  X

  புதிய ஸ்போர்ட் ஸ்கூட்டர்: டி.வி.எஸ். அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி.வி.எஸ். மோட்டார் கம்பெணியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கூட்டரின் வெளியீட்டு தேதியை புதிய டீசரில் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
  புதுடெல்லி:

  டி.வி.எஸ். மோட்டார் கம்பெணி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்போர்ட் ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் டீசரில் புதிய ஸ்கூட்டர் பிப்ரவரி 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  2014 ஆட்டோ எக்ஸ்போவில் டி.வி.எஸ். அறிமுகம் செய்த கிராஃபைட் கான்செப்ட் ஸ்கூட்டரின் வடிவமைப்பை தழுவி புதிய ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஸ்கூட்டரின் எல்இடி டெயில் லேம்ப் மட்டும் காட்சியளிக்கும் படி புதிய ஸ்கூட்டரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 

  முன்னதாக கிராஃபைட் சார்ந்த டி.வி.எஸ். ஸ்கூட்டரின் வீடியோ இணையத்தில் வெளியானது. இதில் ஸ்கூட்டரின் சில முக்கிய அம்சங்கள் தெரியவந்தது. அதன்படி புதிய டி.வி.எஸ். ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் போட்டி சந்தையில் நிலவும் பலத்த காரணமாக பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

  புதிய ஸ்கூட்டரில் 125சிசி இன்ஜின் மற்றும் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டி.வி.எஸ். நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்கூட்டரின் முன்பக்கம் டிஸ்க் பிரேக் வழங்கப்படலாம் என்றும் இதன் ஸ்பை படங்களில் புதிய ஸ்கூட்டரில் அலாய் வீல்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

  இந்தியாவில் டி.வி.எஸ். பிரீமியம் ஸ்கூட்டரின் விலை ரூ.60,000 (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதிய ஸ்கூட்டரின் முழு விவரங்கள் பிப்ரவரி 5-ம் தேதி தெரியவரும். புதிய 125சிசி ஸ்கூட்டர் ஹோன்டா கிரேசியா 125, சுசுகி அக்செஸ் 125 மற்றும் அப்ரிலியா எஸ்.ஆர். 125 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  டி.வி.எஸ். 125சிசி ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ டீசர் வீடியோவை கீழே காணலாம்..,


  Next Story
  ×