100 ஆண்டு காயங்களும், வலிகளும் இன்று குணமடைந்தன: பிரதமர் மோடி

நமது ராமர் பாகுபாடு காட்டுவதில்லை, நாமும் அதே மனப்பான்மையுடன் முன்னேறி வருகிறோம்.பொய்யை இறுதியில் உண்மை வெல்லும் என்பதற்கு இந்த புனிதக் கொடி சான்றாக நிற்கும்.
100 ஆண்டு காயங்களும், வலிகளும் இன்று குணமடைந்தன: பிரதமர் மோடி
Published on

அயோத்தி ராமர் கோவில் முழுமையாக கட்டி முடித்த நிலையில், கோவில் கோபுர உச்சியில் 30 அடி உயர் கொடிமரத்தில் புனித காவிக்கொடியை பிரதமர் மோடி ஏற்று வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

* 2047-ல் இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, நாம் ஒரு வளர்ந்த இந்தியாவை உறுதி செய்ய வேண்டும்

* நமது ராமர் பாகுபாடு காட்டுவதில்லை, நாமும் அதே மனப்பான்மையுடன் முன்னேறி வருகிறோம்

* இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் ராமர் கோயில் கட்டுமானத்தில் எந்த வகையிலும் உதவிய அனைத்து ராமர் பக்தர்களை நான் வாழ்த்துகிறேன்.

* பொய்யை இறுதியில் உண்மை வெல்லும் என்பதற்கு இந்த புனிதக் கொடி சான்றாக நிற்கும்

* அயோத்தி அதன் வரலாற்றில் மற்றொரு சகாப்த நிகழ்வைக் காண்கிறது. முழு நாடும், உலகமும் ராமரில் மூழ்கியுள்ளது.

* 100 ஆண்டுகளின் காயங்களும் வலிகளும் இன்று குணமடைகின்றன. 500 ஆண்டுகால உறுதிமொழி நிறைவேறி வருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com