என் மலர்
இந்தியா

2024 அனைவருக்கும் சிறப்பானதாக அமையட்டும்: பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்துகள்
- புத்தாண்டை வாணவேடிக்கையுடன் மகிழ்ச்சியாக மக்கள் வரவேற்றனர்.
- வழிபாட்டு தலங்களில் சிறப்பு பூஜை, மக்கள் தரிசனம். கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை.
உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் புத்தாண்டு பிறந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இனிமேல்தான் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. அந்நாட்டு மக்கள் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர்.
புத்தாண்டையொட்டி தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்தில் "2024-ம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பானதாக அமையட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாலையில் இருந்து வழிபாட்டு தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
புத்தாண்டையொட்டி நேற்றிரவு கிறிஸ்தவ தேவாலங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






