search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டி.கே.சிவகுமார் முதல் மந்திரியாக குமாரசாமி ஆதரவு - கர்நாடகாவில் பரபரப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    டி.கே.சிவகுமார் முதல் மந்திரியாக குமாரசாமி ஆதரவு - கர்நாடகாவில் பரபரப்பு

    • ஜே.டி.எஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் உள்ளனர்.
    • அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வர உள்ளதாக சில காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவகுமாரும் உள்ளனர்.

    இந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெறும் 76 இடங்களில் மட்டுமே வென்றது. அத்துடன், முன்னாள் முதல் மந்திரி குமாரசாமியின் ஜே.டி.எஸ். கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்றவர்கள் 4 இடங்களில் வென்றனர்.

    இதற்கிடையே துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கும், குமாரசாமிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, ஜே.டி.எஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் உள்ளனர். விரைவில் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வர உள்ளதாக சில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரியும், ஜே.டி.எஸ். கட்சி தலைவருமான குமாரசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஜே.டிஎஸ். கட்சி எம்.எல்.ஏ.க்கள் வருவதாக தெரிவித்துள்ளனரா? அதுபற்றி கருத்து என கேள்வி எழுப்பியதற்கு, அவர் ஆவேசமாக கூறியதாவது:

    கர்நாடகாவில் பா.ஜ.க.வுடன் தொடர்பில் 50 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பில் உள்ளனர். இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து விடும்.

    தேவகவுடா எங்களுடன் வந்துவிடுங்கள். உங்களை அமைச்சராக்குகிறோம். உங்களின் மகனுக்கு நல்ல பதவி வழங்குகிறோம் என காங்கிரஸ் கட்சியினர் தினமும் எங்களுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

    துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் முதல் மந்திரியாக பொறுப்பு ஏற்றால் எனது கட்சியின் 19 எம்.எல்.ஏ.க்களும் அவருக்கே ஆதரவு அளித்துவிட்டு போகிறோம். இதை விட்டுவிட்டு 10 பேர் வருகிறார்கள், 5 பேர் வருகிறார்கள், பேச்சுவார்த்தை நடந்துவிட்டது. தயாராக இருக்கின்றனர் என சொல்லிக்கொண்டே இருக்கவேண்டாம்.

    காங்கிரஸ் கட்சியில் தற்போது 135 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களின் தொகுதிக்கே வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலையில் இந்த எம்.எல்.ஏ.க்களின் தொகுதிக்கு எப்படி பணம் கொடுப்பார்கள்? என தெரிவித்தார்.

    Next Story
    ×