என் மலர்

  இந்தியா

  இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?: ராகுல் காந்தி பதில்
  X

  இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?: ராகுல் காந்தி பதில்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்திய பாட்டி இந்திரா காந்திக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும்.
  • இத்தாலிய பாட்டி பவுலோ மைனோவுக்கு பிரியங்காவை மிகவும் பிடிக்கும்.

  புதுடெல்லி :

  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இத்தாலி நாட்டின் நாளிதழ் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர், " இந்திய பாட்டி இந்திரா காந்திக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும். இத்தாலிய பாட்டி பவுலோ மைனோவுக்கு (சோனியா காந்தியின் தாயார்) பிரியங்காவை மிகவும் பிடிக்கும்" என குறிப்பிட்டார்.

  மேலும், "இத்தாலி பாட்டி 98 வயது வரை வாழ்ந்தார், எனக்கு அவர் மீது மிகுந்த பற்று உண்டு. வால்டர் மாமா மீதும் பற்று வைத்திருக்கிறேன். ஒட்டுமொத்த குடும்பம் மீதும் பற்று உண்டு" எனவும் தெரிவித்தார்.

  ராகுல் காந்தியிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

  கேள்வி:- நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை?

  பதில்:- அது எனக்கும் கூட விசித்திரமாகத்தான் இருக்கிறது. ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆசை இருக்கிறது. செய்வதற்கு நிறைய இருக்கிறது.

  கேள்வி:- உங்கள் இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது தாடி வளர்த்திருக்கிறீர்களே?

  பதில்:- யாத்திரை முழுவதும் தாடியை எடுப்பதில்லை என்று முடிவு செய்திருந்தேன். இப்போது அதை தொடர்ந்து வைத்துக்கொள்வதா அல்லது வேண்டாமா என்று நான் முடிவு செய்ய வேண்டும்.

  கேள்வி:-அடுத்த தேர்தலில் பிரதமர் மோடியை தோற்கடிக்க முடியும் என்று கருதுகிறீர்களா?

  பதில்:- அவர் உறுதியாக தோற்பார் என்று நான் கூற வில்லை. ஆனால் அவரைத் தோற்கடிக்க முடியும். பாசிசத்துக்கு ஒரு மாற்றை எதிர்க்கட்சிகள் வழங்குகிறபோது, பாசிசத்தை தோற்கடிக்க முடியும். தேர்தலில் இரு கண்ணோட்டங்கள் மோதுகிறபோது, எங்களால் வெற்றி பெற முடியும்.

  கேள்வி:- வம்ச வழிகளில் அதிகாரத்தை மாற்ற முடியுமா?

  பதில்:- நாங்கள் ஒரு குடும்பம்தான். நீங்கள் நினைத்தால் அதை ஒரு வம்சம் என்று கூறலாம். ஆனால் எங்கள் தரப்பை வலியுறுத்தும் எண்ணம் உள்ளது.

  இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

  Next Story
  ×