என் மலர்
இந்தியா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சூர்யகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?
- 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இந்த பதவியில் இருப்பார்.
- கவாய் அடுத்த மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.
உச்சநீதிமன்ற 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14, 2025 முதல் பி.ஆர். கவாய் செயல்பட்டு வருகிறார். விதிகளின்படி, தலைமை நீதிபதி 65 வயதில் ஓய்வு பெற வேண்டும். அதன்படி கவாய் அடுத்த மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.
இந்நிலையில் பி.ஆர்.கவாயின் பரிந்துரையை ஏற்று சூரியகாந்தை புதிய தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.
வரும் நவம்பர் 24ம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூரியகாந்த் பதவியேற்கிறார்.
இந்நிலையில் நீதிபதி சூர்யகாந்தின் சொத்து விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. உச்சநீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின் படி, சூர்யகாந்த் மற்றும் அவரது மனைவியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.17 கோடி என தெரியவந்துள்ளது.
நீதிபதி சூர்யகாந்த் அடுத்த தலைமை நீதிபதியாக 15 மாதங்கள் அந்தப் பதவியில் இருப்பார். அவரது பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9, 2027 அன்று முடிவடையும்.






