search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா-வியட்நாம் கூட்டு ராணுவ பயிற்சி நிறைவு
    X

    இந்தியா-வியட்நாம் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் 

    இந்தியா-வியட்நாம் கூட்டு ராணுவ பயிற்சி நிறைவு

    • இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் செய்முறை வகுப்புகள் நடைபெற்றன.
    • வியட்நாமின் ராணுவம் முதன்முதலாக இந்திய ராணுவத்துடன் பயிற்சி மேற்கொண்டது.

    சந்திமந்திர்:

    இந்தியா-வியட்நாம் இடையேயான இருதரப்பு ராணுவ பயிற்சி கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அரியானா மாநிலம் பஞ்சகுலா மாவட்டத்தில் உள்ள சந்திமந்திர் ராணுவ தளத்தில் தொடங்கியது.

    வியட்நாமின் ராணுவம், இந்திய ராணுவத்துடன் மேற்கொண்ட முதல் பயிற்சி இதுவாகும். ஐநா அமைதி பாதுகாப்பு குழு நடவடிக்கைகளில் ராணுவ பொறியாளர் மற்றும் மருத்துவக் குழுக்களின் செயல்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த பயிற்சி நடைபெற்றது.

    வின்பேக்ஸ் என அழைக்கப்படும் இந்த பயிற்சியின் போது, பேரிடர் காலங்களில் மனிதர்களை மீட்க உதவும் மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியாவின் கீழ் உருவாக்கப்பட கருவிகள் காட்சிப் படுத்தப்பட்டன.

    இரு நாட்டு வீரர்களுக்கும் செய்முறை வகுப்புகள் நடைபெற்றன. இன்று நடந்த பயிற்சியின் நிறைவு விழாவில், இந்தியாவுக்கான வியட்நாம் தூதர் பாம் சான்ஹ் சாவோ, மேற்கு பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி லெப்டினண்ட் ஜெனரல் நாவ் குமார் காந்துரி உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். அடுத்த வின்பேக்ஸ் பயிற்சி வியட்நாமில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

    Next Story
    ×