என் மலர்
இந்தியா

குடிபோதை, அரை நிர்வாணம்: மராத்தி பெண்ணை துஷ்பிரயோகம் செய்த எம்.என்.எஸ். தலைவரின் மகன்
- குடிபோதையில் காரை பெண் மீது இடித்து விபத்து ஏற்படுத்தியுள்ளார்.
- காரைவிட்டு இறங்கும்போது அரை நிர்வாணமாக இருந்தது தெரிய வந்தது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட்டதற்கு பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அத்துடன் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா (MNS) கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பை முன்னெடுத்தார். இதனால் மகாராஷ்டிரா அரசு மும்மொழிக்கொள்ளை திட்டத்தை திரும்பப் பெற்றது.
இதற்காக ராஜ் தாக்கரே வெற்றி விழா நடத்தினார். மகாராஷ்டிராவில் மராத்தி பேசாவிட்டால் காதுக்குக் கீழே அடியுங்கள் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் எம்.என்.எஸ். கட்சித் தலைவரின் மகன் குடிபோதையில், அரை நிர்வாணமாக மராத்தி பெண்ணிடம் துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டது பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் ஜாவித் ஷேக்கின் மகன் ரஹில் ஷேக். இவர் கடுபோதையில், மேலாடை இல்லாமல் கார் ஓட்டி வந்துள்ளார். கார் ஒரு பெண்ணின் மீது மோத, காரில் இருநது இருந்து இறங்கிய ரஹில் ஷேக் நடந்து கொண்ட விதம் முகம் சுழிக்கும் வகையில் இருந்தது.
இச்சம்பவம் குறித்த வீடியோவை அந்த பெண் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இதை ரீ-போஸ்ட் செய்த சிவசேனா தலைவர் சஞ்சய் நிருபம், எம்என்எஸ் கட்சியை மிகவும் சாடியுள்ளார். மராத்தி கலாச்சாரத்தை பாதுகாப்பும் எனக் கூறும் அவர்களுடைய உண்மையான முகம் இதுதான் எனத் தெரிவித்துள்ளார்.






