search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அடுத்த மாதத்தில் இருந்து காய்கறி விலை குறைய வாய்ப்பு: ஆர்.பி.ஐ. கவர்னர்
    X

    அடுத்த மாதத்தில் இருந்து காய்கறி விலை குறைய வாய்ப்பு: ஆர்.பி.ஐ. கவர்னர்

    • ஜூலை மாதம் சில்லறை பணவீக்கம் 7.44 சதவீதமாக அதிகரிப்பு
    • விலைவாசி உயர்வு பணவீக்க எதிர்பார்ப்புகளை அதிகரிப்பதற்கான ஆபத்தை ஏற்படுத்துகின்றன

    இந்தியாவில் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு ஜூலை மாத சில்லறை பணவீக்கம் 7.44 சதவீதமாக அதிகரித்திருந்தது. இதற்கு காய்கறி விலை உயர்வு, தானியங்களின் விலை உயர்வு ஆகியவை முக்கிய காரணம்.

    பருவமழை மற்றும் புவிசார் பதற்றம் போன்ற காரணிகளும் முக்கிய காரணம். சில்லறை பணவீக்கம் காரணமாக மக்கள் அதிக அளவில் பணம் செலவழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொடர்ந்து பண்டிகை காலங்கள் வருவதால் இந்த பணவீக்கம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    ஆனால், அடுத்த (செப்டம்பர்) மாதத்தில் இருந்து காய்கறிகளின் விலை உயர்வு, தானியங்களின் விலை உயர்வு குறைய வாய்ப்புள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சக்திகாந்த தாஸ் கூறுகையில் ''நாங்கள் காய்கறி பணவீக்கம் செப்டம்பரில் இருந்து குறையும் என எதிர்பார்க்கிறோம். புவிசார் பதற்றங்கள் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தும் என்ற போதிலும், தானிய வகைகளின் விலை குறைய பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

    முக்கிய பணவீக்கம் அதிகரித்துள்ள போதிலும், கடந்த சில மாதங்களாக அதில் காணப்படும் நிலையான தளர்வு பணவியல் கொள்கை பரிமாற்றத்தின் அறிகுறியாகும்.

    தொடர்ந்து வரும் விலைவாசி உயர்வு, கடந்த வரும் செப்டம்பரில் இருந்து வருடம் பணவீக்க எதிர்பார்ப்புகளை அதிகரிப்பதற்கான ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இதை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம்.

    இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

    Next Story
    ×