என் மலர்tooltip icon

    இந்தியா

    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று உடலை செப்டிக் டேங்கில் வீசிய பெண் கைது
    X

    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று உடலை செப்டிக் டேங்கில் வீசிய பெண் கைது

    • ஆஷியாவுக்கும் கள்ளக்காதலன் சுஹைலுக்கும் இடையேயான தகாத உறவு குறித்து சாகருக்கு தெரியவந்துள்ளது.
    • சாகரை கள்ளக்காதலனின் உதவியுடன் கொலை செய்ததாக ஆஷியா போலீசிடம் வாக்குமூலம்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள மண்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் சாகர். இவரது மனைவி ஆஷியா. இந்நிலையில், சாகர் கடந்த 6ம் தேதி முதல் காணாமல் போயுள்ளார்.

    இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் சாகரை தேடி வந்தனர். இதையடுத்து போலீசார் சாகரை செப்டிக் டேங்கில் இருந்து சடலமாக மீட்டனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில், மனைவி ஆஷியாவே சாகரை தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து சாகரை கொலை செய்து செப்டிக் டேங்கில் வீசியது தெரியவந்துள்ளது. ஆஷியாவுக்கும் கள்ளக்காதலன் சுஹைலுக்கும் இடையேயான தகாத உறவு குறித்து சாகருக்கு தெரியவந்துள்ளது. இதனால், சாகரை கள்ளக்காதலனின் உதவியுடன் கொலை செய்ததாக ஆஷியா போலீசிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    இதையடுத்து, போலீசார் ஆஷியா மற்றும் கள்ளக்காதலன் சுஹைல் ஆகியோரை கைது செய்தனர்.

    Next Story
    ×