என் மலர்tooltip icon

    இந்தியா

    ஹனிமூனுக்கு செல்ல திட்டம்: காதலனுடன் ஓட்டம் பிடித்த காதலி- தப்பித்தோம் என சேர்த்து வைத்த கணவன்..!
    X

    ஹனிமூனுக்கு செல்ல திட்டம்: காதலனுடன் ஓட்டம் பிடித்த காதலி- தப்பித்தோம் என சேர்த்து வைத்த கணவன்..!

    • நல்ல வேளை நான் இன்னொரு ராஜா ரகுவன்ஷியாக மாறுவதிலிருந்து தப்பித்தேன்.
    • இப்போது நாங்கள் மூவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

    மேகாலயாவில் தேன்நிலவு கொண்டாட சென்ற ராஜா ரகுவன்ஷி என்ற வாலிபர், தனது மனைவியின் காதலன் மற்றும் அவரது கூலிப்படையினரால் கொடூரமான முறையில் தாக்கி கொல்லப்பட்ட அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்தில் வாலிபர் ஒருவர் தேன்நிலவு கொலையிலிருந்து தப்பியதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தர பிரதேசம் மாநிலம் படாவுன் மாவட்டத்தை சேர்ந்தவர் சுனில். சுனிலுக்கும் குஷ்பூ என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 17ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்னர் தனது மாமியார் வீட்டுக்குச் சென்ற மணமகள் குஷ்பூ, அங்கு 9 நாட்கள் அங்கு தங்கி இருந்துவிட்டு மீண்டும் கணவருடன் தனது தாய் வீட்டுக்கு திரும்பினார். தனது தாய் வீட்டிற்கு வந்த குஷ்பூ, தனது காதலனுடன் ஓட்டும் பிடித்துள்ளார்.

    சுனில் அளித்த புகாரின் பேரில் காணாமல் போன குஷ்பூவை போலீசார் தேடிவந்த வேளையில், கடந்த திங்கட்கிழமை வேறொரு வாலிபருடன் திடீரென்று காவல் நிலையத்துக்கு வந்த குஷ்பூ, "என்னுடைய கணவருடன் வாழ எனக்கு பிடிக்கவில்லை. நான் ஏற்கனவே காதலித்து வந்த இவருடன்தான் இனிமேல் வாழப் போகிறேன்" என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

    இதற்கு சுனில் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், ஆச்சர்யம் அளிக்கும் வகையில் மனைவி அவரின் காதலுடன் செல்ல சம்மதம் தெரிவித்துள்ளார்.

    காதலடன் அனுப்பி வைத்ததற்கான காரணத்தை சுனில் விவரித்துள்ளார்.

    அவர் வீட்டில் இருந்து சென்ற பிறகு இமையமலை அடிவார நகரமான நைனிடாலுக்கு ஹினிமூன் செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் அவருடைய காதலனுடன் செல்ல விரும்புகிறார். இதனால் நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

    நல்ல வேளை நான் இன்னொரு ராஜா ரகுவன்ஷியாக மாறுவதிலிருந்து தப்பித்தேன். இப்போது நாங்கள் மூவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். என் வாழ்க்கை அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது என சுனில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×