என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: உ.பி.யில் சரக்கு ரெயில்கள் மோதி விபத்து- போக்குவரத்து பாதிப்பு
    X

    VIDEO: உ.பி.யில் சரக்கு ரெயில்கள் மோதி விபத்து- போக்குவரத்து பாதிப்பு

    • விபத்தில் காயங்கள், உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
    • இரண்டு ரெயில்களின் மோட்டார்மேனும் காயமடைந்துள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் காகா பகுதியில் உள்ள பாம்பிபூர் அருகே 2 சரக்கு ரெயில்கள் மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் கார்டு கம்பார்ட்மெண்டும், என்ஜினும் தடம் புரண்டன. அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    சிக்னல் கோளாறு காரணமாக முதல் சரக்கு ரெயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தபோது 2-வது சரக்கு ரெயில் அதன் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து காரணமாக அப்லைன் தடை செய்யப்பட்டுள்ளது. ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்து ரெயில்வே வழக்கமான போக்குவரத்து பாதையில் நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயங்கள், உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

    விபத்து காரணமாக, பல ரெயில்கள் இடையில் நிறுத்தப்பட்டதால் தாமதமாகின. இரண்டு ரெயில்களின் மோட்டார்மேனும் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரெயில்வே நிர்வாகம் தண்டவாளத்தை சீர்படுத்தி, வழக்கமான போக்குவரத்தை வழங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரெயில்வே நிர்வாகம் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு பிறகுதான் விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும்.

    Next Story
    ×