ஹத்ராஸ் பயங்கரம்: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர் யோகி ஆதித்யநாத்- வீடியோ

நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் அலறல் அந்த பகுதியையே ஆட்கொண்டுள்ளது.போலே பாபா சாமியார் நடத்திய ஆன்மிக நிகழ்ச்சியில் பலர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு திடீரென அவர் தலைமறைவானார்.
ஹத்ராஸ் பயங்கரம்: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர் யோகி ஆதித்யநாத்- வீடியோ
Published on

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

இந்த விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் அலறல் அந்த பகுதியையே ஆட்கொண்டுள்ளது.

போலே பாபா சாமியார் நடத்திய ஆன்மிக நிகழ்ச்சியில் பலர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு திடீரென அவர் தலைமறைவானார். இவரை உத்தரப்பிரதேச போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் ஹத்ராஸ் அரசு மருத்துவமனையில் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் மருத்துவர்களை சந்தித்து காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறும் கேட்டுகொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com