search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விண்வெளித்துறையில் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன- மத்திய மந்திரி தகவல்
    X

    மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்

    விண்வெளித்துறையில் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன- மத்திய மந்திரி தகவல்

    • ஆராய்ச்சி, கல்வி, தொழில்துறை ஒருங்கிணைப்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள், இஸ்ரோ திறன்களுக்கு கூடுதல் வலு சேர்க்கும்.

    ஐதராபாத்தை சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தயாரித்துள்ள விக்ரம்-எஸ் ராக்கெட் மூலம் மூன்று செயற்கைக் கோள்கள் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டள்ளன.

    ப்ராரம்ப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, என்-ஸ்பேஸ் டெக் இந்தியா, பஸூசும் அர்மீனியா ஆகிய செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திரசிங், இந்திய விண்வெளி திட்டத்தில் இது புதிய தொடக்கம், புதிய விடியல் என்று தெரிவித்தார். ஆராய்ச்சி, மேம்பாடு, கல்வி மற்றும் தொழில்துறையின் ஒருங்கிணைப்பு காரணமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புரட்சி ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.


    தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இஸ்ரோவின் திறன்களுக்கு கூடுதல் வலு சேர்க்கும் என்றும் விண்வெளித் துறையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். விண்வெளித்துறையில் அரசு தனியார் பங்களிப்புக்கு வழிவகுத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இது இந்தியாவை முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×