என் மலர்
இந்தியா

பட்ஜெட் 2025- 26 - பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தொழிற்கடன்
- நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் புதிதாக அமைக்கப்படும்.
- பொம்மைகள் தயாரிப்பில் இந்தியாவை, சர்வதேச கேந்திரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார்.
பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது:
* மீன் வளத்துறைக்கு 60,000 கோடி ரூபாயில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
* அசாமில் ஆண்டுக்கு 1.2 லட்சம் டன் உற்பத்தி செய்யும் வகையில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும்.
* மூடப்பட்டுள்ள 3 யூரியா தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படும்.
* பருப்பு வகை தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைய 6 ஆண்டு காலத்திற்கு புதிய திட்ட அறிமுகம்.
* நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் புதிதாக அமைக்கப்படும்.
* நாட்டில் தபால் நிலையங்கள் மூலம் சரக்கு போக்குவரத்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* இந்திய அஞ்சல்துறை, மிகப்பெரிய அளவிலான லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும்
* தோல் மற்றும் காலணி தயாரிப்பில் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கும் திட்டம்.
* பொம்மைகள் தயாரிப்பில் இந்தியாவை, சர்வதேச கேந்திரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
* பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு, தலா ரூ.2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.
* ஐ.ஐ.டி. பாட்னா விரிவுபடுத்தப்படும்.
* ஐ.ஐ.டி.யில் கூடுதல் மாணவர் சேர்க்கை நடத்த திட்டம்.
* சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் AI மையம் அமைக்கப்படும்.
* 5 ஐ.ஐ.டி.களின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
* தாமரை விதை உற்பத்தி மற்றும் செயலாக்கத்தை மேம்படுத்த பீகாரில் மக்கானா வாரியம் நிறுவப்படும் என்று கூறினார்.






