என் மலர்tooltip icon

    இந்தியா

    பட்ஜெட் 2025- 26 : வீட்டு வாடகை வருமானத்திற்கான TDS உச்ச வரம்பு உயர்வு
    X

    பட்ஜெட் 2025- 26 : வீட்டு வாடகை வருமானத்திற்கான TDS உச்ச வரம்பு உயர்வு

    • ஜிடிபி கொண்டு ஒப்பிடும் போது மத்திய அரசின் கடன் சுமை குறைந்துகொண்டே போகிறது.
    • மூத்த குடிமக்களுக்கு வருமான வரி நிலைக்கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்வு.

    புதுடெல்லி:

    2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் உரையின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,

    "வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

    கோல்நோக்கி வாழுங் குடி." என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

    பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது:-

    * புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வரி செலுத்துபவர்களுக்கு பல்வேறு வசதிகளை கடந்த 10 ஆண்டுகளாக நம் அரசு செய்து வருகிறது.

    * ஜிடிபி கொண்டு ஒப்பிடும் போது மத்திய அரசின் கடன் சுமை குறைந்துகொண்டே போகிறது.

    * நடுத்தர மக்களின் சுமையை குறைக்கும் விதமாக புதிய வருமான வரி சட்ட மசோதா இருக்கும். புதிய சட்ட மசோதாவில் பழைய சட்டத்தின் 50% விதிகள் இருக்கும்.

    * காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு வரம்பு 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்வு.

    * வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருவாய்க்கான TDS உச்ச வரம்பு ரூ.2.4 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்வு

    * மூத்த குடிமக்களுக்கு வருமான வரி நிலைக்கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்வு.

    * 90 லட்சத்திற்கும் அதிகமான வரி செலுத்துவோர் தங்களது வருமான வரி கணக்கை புதுப்பித்துள்ளனர்.

    Next Story
    ×