என் மலர்
இந்தியா

பட்ஜெட் 2025- 26: சிறு, குறு நடுத்தர தொழில் துறைகளுக்கு கடன் உத்திரவாத வரம்பு அதிகரிப்பு
- நமது ஏற்றுமதியில் சிறு குறு நடுத்தர தொழில் துறை 45 சதவீதம் பங்கு வகிக்கிறது.
- உலகளவில் பொம்மை உற்பத்தியில் இந்தியா முதலிடம் பெற புதிய திட்டம்.
புதுடெல்லி:
2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. விவசாயம், மின்சாரத் துறை, நகர்ப்புற மேம்பாடு, சுரங்கம், நிதித் துறை, ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
* கிசான் கிரெடிட் கார்டுகள் மூலம் பெறப்படும் கடன் உதவி ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* கிசான் கிரெடிட் கார்டுகள் மூலம் வட்டி மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். இதனால் 7.7 கோடி விவசாயிகளுக்கு கிசான் கிரெட்டி கார்டு பயனளிக்க உள்ளது.
* நமது ஏற்றுமதியில் சிறு குறு நடுத்தர தொழில் துறை 45 சதவீதம் பங்கு வகிக்கிறது.
* சிறு, குறு நடுத்தர தொழில் துறைகளுக்கு கடன் உத்திரவாத வரம்பு அதிகரிக்கப்படுகிறது.
* பதிவு செய்யப்பட்ட சிறு தொழில் துறையினருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவியுடன் கூடிய கிரெடிட் கார்டு வழங்கப்படும்.
* பழங்குடியின இனத்தை சேர்ந்த சுயதொழில் பெண்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு 2 கோடி ரூபாய் அளவுக்கு கடன் உதவி வழங்கப்படும். இதனால சுமார் 5 லட்சம் பட்டியலின பெண்கள் கடனுதவி திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர்.
* உலகளவில் பொம்மை உற்பத்தியில் இந்தியா முதலிடம் பெற புதிய திட்டம்.






