search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பனி படர்ந்த மலைகளில் தியானம் செய்த யோகி
    X

    பனி படர்ந்த மலைகளில் தியானம் செய்த யோகி

    • இஷ்நாத் இமயமலையில் யோகா பாரம்பரியமான இஷ்புத்ராவை உருவாக்கி வருகிறார்.
    • வீடியோ இமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள சிராஜ் பள்ளத்தாக்கில் எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்தது.

    இமாச்சல பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தின் பனி படர்ந்த மலை பகுதியில் யோகி ஒருவர் தியானம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதில், பஞ்சாபை சேர்ந்த சத்யேந்திரநாத் என்ற அந்த யோகியின் ஆடை, தலைமுடி, முகம் என அனைத்தும் பனியால் மூடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களால் அதை நம்ப முடியாமல் திகைத்தனர். அந்த வீடியோ இமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள சிராஜ் பள்ளத்தாக்கில் எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்தது. இவர் சத்யேந்திரநாத் கவுலாந்தக் பீத் ஆசிரமத்தில் கடந்த 22 ஆண்டுகளாக யோகா பயிற்சி செய்து வருகிறார். இவர் இஷ்நாத் என்ற இமயமலை யோகியை பின்தொடர்ந்து வருகிறார்.

    இஷ்நாத் இமயமலையில் யோகா பாரம்பரியமான இஷ்புத்ராவை உருவாக்கி வருகிறார். இஷ்நாத் இமயமலை யோகா யுக்தியின் மையமாகவும், தெய்வீக இடமாகவும் அறியப்படும் கவுலாந்தக் பீடத்தின் தலைவர் ஆவார்.

    Next Story
    ×