என் மலர்
இந்தியா

விமான நிலையத்தில் ஒரு கப் மேகி நூடுல்ஸ் விலை ரூ.193: பெண் யூடியூபரின் டுவிட்டர் பதிவு வைரல்
- பெண் யூடியூபர் சண்டிகரில் இருந்து வெளிநாட்டுக்கு பயணம் செய்வதற்காக விமான நிலையம் சென்றுள்ளார்.
- மற்றொருவர் தனது பதிவில், போக்குவரத்து செலவு மற்றும் பராமரிப்பு சேர்த்து இந்த விலையாக இருக்குமோ? என கூறி இருந்தார்.
பொதுவாக விமான நிலைய வளாகங்களில் உள்ள கடைகளில் உணவு பொருட்களின் விலை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக பெண் யூ-டியூபரான சேஜல் சுட் என்பவரது பதிவு டுவிட்டரில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் சண்டிகரில் இருந்து வெளிநாட்டுக்கு பயணம் செய்வதற்காக விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது சண்டிகர் விமான நிலையத்தில் மேகி நூடுல்ஸ் ஒன்றை வாங்கி உள்ளார். அதற்கான பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த பில்லை டுவிட்டரில் தனது பக்கத்தில் பகிர்ந்த சேஜல் சுட், விமான நிலையத்தில் ரூ.193-க்கு மேகியை வாங்கினேன்.
இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் மேகி போன்றவற்றை இவ்வளவு உயர்ந்த விலைக்கு விற்கிறார்கள்? என கேள்வி எழுப்பி இருந்தார். அவரது இந்த பதிவு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 3,500-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்று வைரலானது. பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். அதில் ஒருவர், ஒரு வேளை இந்த மேகி நூடுல்ஸ் விமானத்திற்கு பயன்படுத்தப்படும் ஆயிலில் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம் என நினைக்கிறேன் என கிண்டலாக பதிவிட்டார். மற்றொருவர் தனது பதிவில், போக்குவரத்து செலவு மற்றும் பராமரிப்பு சேர்த்து இந்த விலையாக இருக்குமோ? என கூறி இருந்தார்.






