என் மலர்
இந்தியா

கார் கண்ணாடியை உடைத்து 3 வயது மகனை காப்பாற்றிய தந்தை- டுவிட்டரில் பதிவு வைரல்
- காருக்குள் இருந்த கபீர் தனது தந்தையின் கையில் இருந்த கார் சாவியை வாங்கி விளையாடிக்கொண்டு இருந்தார்.
- காருக்குள் சிக்கிய தனது 3 வயது மகனை மீட்க சுந்தர் தீப் போராடி பார்த்தும் உடனடியாக கதவை திறக்க முடியவில்லை.
பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியை சேர்ந்தவர் சுந்தர் தீப். இவரது 2 மகன்கள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கின்றனர். சம்பவத்தன்று மகன்களை அழைப்பதற்காக சுந்தர் தீப் காரில் தனது மனைவியுடன் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு 3 வயது மகன் கபீரை அழைத்து விட்டு காரில் பின்இருக்கையில் அமர வைத்துள்ளனர். பின்னர் சுந்தர் தீப்பின் மனைவி மற்றொரு மகனை அழைப்பதற்காக சென்று விட்டார்.
இந்நிலையில் காருக்குள் இருந்த கபீர் தனது தந்தையின் கையில் இருந்த கார் சாவியை வாங்கி விளையாடிக்கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக கார் கதவு லாக் ஆகி விட்டது. இதனால் சுந்தர்தீப் அதிர்ச்சி அடைந்தார். காருக்குள் சிக்கிய தனது 3 வயது மகனை மீட்க அவர் போராடி பார்த்தும் உடனடியாக கதவை திறக்க முடியவில்லை. இதனால் அருகே உள்ள ஒர்க்ஷாப்புக்கு சென்று ஒரு பெரிய கருவியை எடுத்து வந்து கார் கண்ணாடியை உடைத்துள்ளார். அதன் பிறகு மகனிடம் இருந்து சாவியை வாங்கி கதவை திறந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் படங்களை பகிர்ந்து ஒரு பதிவிட்டுள்ளார். அதில் குழந்தைகளிடம் ஒரு போதும் சாவியை ஒப்படைக்க வேண்டாம். இது எனது மிகப்பெரிய தவறு என குறிப்பிட்டுள்ளார்.






