தெலுங்கானாவில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 4 பேர் பலி

ஐதராபாத்தில் இருந்து நாக்பூருக்கு சுற்றுலா பஸ் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. காயமடைந்தவர்கள் கிராம மக்கள் உதவியுடன் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தெலுங்கானாவில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 4 பேர் பலி
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நாக்பூருக்கு சுற்றுலா பஸ் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அதில் 36 பேர் பயணம் செய்தனர். இரவு நேரம் என்பதால் பயணிகள் தூங்கி கொண்டிருந்தனர்.

நிஜாமாபாத் அருகே உள்ள கன்னாராம் தேசிய நெடுங்சாலையில் சென்ற போது பஸ் டிரைவர் தூங்கியதாக கூறப்படுகிறது. இதனால் பஸ் தறிகெட்டு ஓடி சாலையில் கவிழ்ந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.

சத்தம் கேட்டு கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்க முயன்றனர். மேலும் போலீசார் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பஸ்சில் இருந்த பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இந்த விபத்தில் பல பயணிகள் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் கிராம மக்கள் உதவியுடன் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலைமை மோசமாக இருந்ததால், சிறந்த சிகிச்சைக்காக வேறு பெரிய மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர், போக்குவரத்து சீரமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com