என் மலர்
இந்தியா

கல்லூரி மாணவிகள் உடை மாற்றுவதை ரகசியமாக படம்பிடித்த ABVP தலைவர்கள் மூவர் கைது!
- மாணவிகள் உடை மாற்றும் அறையில் உள்ள வென்டிலேட்டர் மூலம் மாணவிகளை அவர்கள் படம் பிடித்தது சிசிடிவி கேமரா மூலம் உறுதியானது.
- பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) ஆர்எஸ்எஸ் உடைய மாணவர் அணி ஆகும்.
மத்திய பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அணியான பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தலைவர்கள் மூவர், கல்லூரி மாணவிகள் உடைமாற்றுவதை ரகசியமாக படம் பிடித்த புகாரில் கைது செய்யப்பட்டனர்.
மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சௌர் மாவட்டத்தில் உள்ள மகாராஜா யஷ்வந்த் ராவ் ஹோல்கர் அரசு கல்லூரியின் முதல்வர் இந்த சம்பவம் தொடர்பாக நேற்று புகார் அளித்த பான்புரா போலீசில் புகார் அளித்தார்.
செவ்வாய்க்கிழமை கல்லூரியில் நடைபெற்ற இளைஞர் விழாவின் போது ஏபிவிபி தலைவர்கள் பெண் மாணவர்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
மாணவிகள் இந்த சம்பவத்தைப் பற்றி புகார் அளித்ததை அடுத்து, கல்லூரி அதிகாரிகள் கட்டிடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை சரிபார்த்தனர். மாணவிகள் உடை மாற்றும் அறையில் உள்ள வென்டிலேட்டர் மூலம் மாணவிகளை அவர்கள் படம் பிடித்தது சிசிடிவி கேமரா மூலம் உறுதியானது.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ABVP உள்ளூர் செயலாளர் உமேஷ் ஜோஷி மற்றும் கல்லூரி மாணவர் இணை தலைவர்கள் அஜய் கவுர் மற்றும் ஹிமான்ஷு பைராகி ஆகியோரை கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பன்புரா போலீசார் தெரிவித்தனர்.






