என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா வியக்கத்தக்க மார்க்கெட்: எலான் மஸ்க் தந்தை சொல்கிறார்
    X

    இந்தியா வியக்கத்தக்க மார்க்கெட்: எலான் மஸ்க் தந்தை சொல்கிறார்

    • இந்தியாவில் முதலீடு செய்வது டெஸ்லா நிறுவனத்தின் அதிர்ஷ்டமாக இருக்கும்.
    • இந்தியா எல்லாவற்றிற்கும் வியக்கத்தக்க மார்க்கெட்டாக விளங்குகிறது

    டெஸ்டா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க். இவரது தந்தை ஏரோல் மஸ்க். ஏரோல் மஸ்க் இந்தியா வந்துள்ளார். அவரிடம் டெஸ்லா இந்தியாவில் முதலீடு செய்யுமா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு எரோல் மஸ்க் "டெஸ்டா பொது நிறுவனம். அது குறித்து நான் பேச முடியாது. இந்தியாவில் முதலீடு செய்வது டெஸ்லா நிறுவனத்தின் அதிர்ஷ்டமாக இருக்கும். இந்தியா எல்லாவற்றிற்கும் வியக்கத்தக்க மார்க்கெட்டாக விளங்குகிறது" என்றார்.

    பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போர் குறித்து எழுப்பிய கேள்விக்கு "பயங்கரவாதம் மிகவும் மோசமான விசயம். உலகத்தில் மூர்க்கத்தனமானவர்கள் உள்ளனர். அவர்களுக்கு எதிராக நாம் ஏதாவது செய்ய வேண்டும். அவர்கள் வழியில் அவர்களை விட முடியாது. அவர்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்" என்றார்.

    Next Story
    ×